மேலும் அறிய
Advertisement
இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழா - வேளாங்கண்ணியில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
புனித வாரங்களிலேயே அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்திற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பாதை யாத்திரையாகவும், வாகனங்களிலும், பேருந்து மூலமாகவும் லட்சக்கணக்கான மக்கள் வழக்கமாக க கூடுவது வழக்கம்.
இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழாவிற்கு இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கானோர் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கும் நிலையில், வேளாங்கண்ணி பேராலயம் சார்பில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளது.
இதுதொடர்பாக பேராலய உதவி பங்குத்தந்தை டேவிட் தன்ராஜ் ஏபிபி நாடுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்தார்.
அதில், கிறிஸ்தவர்களின் தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி சாம்பல் புதனுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தவக்காலத்தின் முக்கிய நிகழ்வாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் சிலுவை பாதை நிகழ்வு நடைபெறுகிறது. தவக்காலத்தின் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வருகிற 2ஆம் தேதி குருத்தோலை ஞாயிறோடு தவக்காலத்தினுடைய புனித வார நிகழ்வுகள் தொடங்கி இயேசு கடைசி நேர நிகழ்வுகளை தியானிக்க கூடிய நிகழ்வாக இந்த நாட்களில் இருக்கின்றன. புனித வியாழன் அன்று ஆண்டவர் இயேசு சீடர்களுடைய பாதங்களை கழுவி உலகத்திலே ஒவ்வொருவரும் மற்றவருக்கு அன்பு செலுத்தவேண்டும், பணிவிடை செய்ய வேண்டும், உதவி செய்ய வேண்டும் என்பதை உணர்த்துகின்ற நாளாகவும்,
கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் நம்புகின்ற நற்கருணையை ஏற்படுத்திய முக்கிய நாளாக இருக்கின்றது. அதன் மறுநாள் புனித வெள்ளியிலே இயேசுவினுடைய பாடுகளுடைய இறப்பை தியானிக்க கூடிய முக்கிய நிகழ்வு நடைபெறுகிறது.
அடுத்து வரக்கூடிய சனிக்கிழமை புனித சனி என்று அழைக்கப்படுகிறது. அந்த நள்ளிரவில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த அந்த நிகழ்வை வழிபடக்கூடிய நாளாகவும். அடுத்த நாள் உயிர்ப்பு ஞாயிறோடு தவக் காலமானது நிறைவு பெறகிறது. இந்த புனித வாரங்களிலேயே அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்திற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பாதை யாத்திரையாகவும், வாகனங்களி லும், பேருந்து மூலமாகவும் லட்சக்கணக்கான மக்கள் வழக்கமாக க கூடுவது வழக்கம். இதனால் புனித வார நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக ஆசிர் வாதம் பெறுவதற்காக வர கூடிய பக்தர்களின் வசதிக்காக தங்குமிடம், குடிநீர் வசதி, பாதுகாப்பு வசதி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்தையும் வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் பேரூராட்சி சார்பாக முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது முதல் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion