பழமை வாய்ந்த மீனாட்சியம்மன் சமேத சொக்கநாதர் ஆலயத்தில் 108 சங்கு அபிஷேக விழா
கரூர் அரவக்குறிச்சி புங்கம்பாடி கிராமத்தில் குடி கொண்டு அருள்பாலித்து வரும் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு மீனாட்சியம்மன் சமேத சொக்கநாதர் ஆலயத்தில் ஆறாம் ஆண்டு சங்கு அபிஷேக விழா நடைபெற்றது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உலக நன்மை வேண்டி ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த மீனாட்சியம்மன் சமேத சொக்கநாதர் ஆலயத்தில் 108 சங்கு அபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், புங்கம்பாடி கிராமத்தில் பகுதியில் குடி கொண்டு அருள்பாலித்து வரும் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு மீனாட்சியம்மன் சமேத சொக்கநாதர் ஆலயத்தில் ஆறாம் ஆண்டு சங்கு அபிஷேக விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயத்தில் 108 சங்குகளை பிரதிஷ்டை செய்து அதற்கு முன்பாக கலசங்கள் வைத்து தீர்த்தத்தால் கலசத்தை நிரப்பி பின்னர் யாக வேள்வி நடைபெற்று யாக பொருட்களால் யாக குண்டத்திற்கு பூர்ணாஹுதி நடைபெற்று பின்னர் கலசத்திற்கு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது.
அதன்பிறகு பூஜிக்கப்பட்ட 108 சங்கு தீர்த்தத்தாலும், யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தை பொதுமக்கள் கோயில் சுற்றி வளம் வந்த பிறகு மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாதர் சுவாமிக்கு சங்கு திருத்தம் மற்றும் பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு பட்டாடை உடுத்தி சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க கற்பூர தீபாரதனை காட்டப்பட்டது.நிகழ்ச்சியை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சி ஏற்பாட்டை ஊர் பொதுமக்கள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.