(Source: ECI/ABP News/ABP Majha)
ஸ்ரீ திரிசூலி காளியம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்
திருவிழந்தூர் தோப்பு தெரு ஸ்ரீ திரிசூலி காளியம்மன் ஆலய கும்பாபிஷேகத்தை யொட்டி நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலத்தில் திரளான பெண்கள் முளைபாரி எடுத்து வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை அடுத்த திருவிழந்தூர் தோப்பு தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ திரிசூலி காளியம்மன் ஆலய கும்பாபிஷேகத்தை யொட்டி நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் பக்தி பரவசத்தில் முளைப்பாரி எடுத்து வழிபாடு செய்தனர்.
திருவிழந்தூர் தோப்பு தெரு ஸ்ரீ திரிசூலி காளியம்மன் திருக்கோயில்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருவிழந்தூர் தோப்பு தெருவில் அமைந்துள்ள பழமையான மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரிசூலி காளியம்மன் திருக்கோயில். இக்கோயில் மகா கும்பாபிஷேகம் பெருவிழா வருகின்ற ஜுலை 12 -ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தருமபுரம் ஆதீனம் ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற இருக்கிறது.
முளைப்பாரி ஊர்வலம்
இக்கோயிலின் கும்பாபிஷேகத்தை யொட்டி, புதிய விமான கோபுரம் அமைக்கபட்டு, இதுநாள் வரை உருவம் இன்றி திரிசூல வடிவில் அருள்பாலித்து வந்த ஸ்ரீ திரிசூலி காளியம்மனுக்கு தமிழ் கலாச்சார கலை நயத்துடன் நூதன விக்ரஹம் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தை விழாவை முன்னிட்டு ஸ்ரீ பரிமள ரெங்கநாதர் ஆலய திருக்குளத்தில் இருந்து 500 மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி ஏந்தி, புதிய விமான கலசங்களுடன் மேள தாளம், பம்பை முழங்க, வானவேடிக்கை நிகழ்ச்சிகளுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு வந்தனர்.
கோயில் கும்பாபிஷேகம்
தொடர்ந்து பெண்கள் எடுத்துவந்த முளைப்பாரிகளை யாகசாலையில் வைத்து, வேத ஆகம சிவாச்சாரியார்கள், எஜமான சங்கல்பம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் வாஸ்து சாந்தி, கோ-பூஜை செய்தனர். பின்னர் ஶ்ரீ திரிசூலி காளியம்மன் விக்ரஹகளுக்கு அஷ்டா திஸ் கிரியை எனும், கண் திறக்கும்நிகழ்ச்சி நடைபெற்றது. கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடந்த இந்த முளைப்பாரி திருவிழா குறிப்பாக தென் மாவட்டங்களில் மட்டுமே இது கொண்டாடப்படும் ஒன்று என்று என்பதால் மயிலாடுதுறை நகர பகுதியில் நடைப்பெற்ற இந்த முளைப்பாரி திருவிழாவில் பெண்கள் முளைப்பாரியை சுமந்து வந்ததை வழியெங்கும் ஏராளமானோர் கண்டு தரிசித்தனர்.
Ziegenbalg: 318 ஆண்டுக்கு முன் தரங்கம்பாடி வந்த தமிழறிஞர் சீகன்பால்கு....யார் இவர்..?