மேலும் அறிய

39-வது திவ்ய தேசமான ஸ்ரீ நாராயண பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்..

சீர்காழி அருகே 19 ஆண்டுகளுக்கு பிறகு பழமை வாய்ந்த 108 திவ்ய தேசங்கள் ஒன்றான ஸ்ரீ நாராயண பெருமாள் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருநாங்கூர் பகுதியில் 108 வைணவ திவ்ய தேசங்களான, நாங்கூர் மணிமாடக்கோயில் ஸ்ரீ நாராயண பெருமாள், அரிமேய வின்னக ரம் ஸ்ரீ குடமாடு கூத்தர், ஸ்ரீ செம்பொன்னரங்கர், ஸ்ரீ பள்ளிகொண்ட பெருமாள், ஸ்ரீ வண்புருடோத்தம பெருமாள், ஸ்ரீ வைகுந்தநாதன், திருவெள்ளக்குளம் ஸ்ரீ அண்ணன் பெருமாள், திரு மேணிக்கூடம் ஸ்ரீவரதராஜ பெருமாள், கீழச்சாலை ஸ்ரீ மாதவப்பெருமாள், பார்த்தன்பள்ளி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள், திருகாவாளம்பாடி கோபாலன்' ஆகிய 11 திவ்யதேச கோயில்கள் அமைந்துள்ளன.  இங்கு ஆண்டுதோறும் தை அமாவாசைக்கு மறுநாள் உலக பிரசித்தி பெற்ற 11 தங்க கருடசேவை உத்ஸவம் நடைபெறுவது வழக்கம்.  

39-வது திவ்ய தேசமான ஸ்ரீ நாராயண பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்..

கருட சேவை உத்ஸவத்திற்காக திருநகரி ஸ்ரீ கல்யாணரெங்கநாதர் கோயிலில் இருந்து திருமங்கை ஆழ்வார் புறப்பட்டு 11 திவ்ய தேசங்களுக்கு சென்று கருடசேவைக்கு வருமாறு பெருமாள்களை அழைக்கும் நிகழ்வு நடைபெறும். அவரது அழைப்பை ஏற்று 11 பெருமாள்களும், தங்களது  கோயில்களில் இருந்து புறப்பட்டு நாங்கூர் மணிமாடக்கோயிலில்  எழுந்தருள்வார்கள். அவர்களை திருமங்கையாழ்வார் வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சியும்,  பின்னர் 11 பெருமாள்களும் கோயில் மண்டபத்தில் எழுந்தருள, சிறப்பு திருமஞ்சணம் நடைபெறும். தொடர்ந்து அதிகாலை மணிமாடக் கோயில், ராஜகோபுர வாயிலில் மணவாள மாமுனிகளும், ஹம்ஸவாகனத்தில் குமுதவள்ளி தாயாருடன் திருமங்கை ஆழ்வாரும் எழுந்தருள அங்கு 11 பெருமாள்களும் ஒருவர் பின் ஒரு வராக தங்க கருடவாகனத்தில் எழுந்தருள, அவர்களுக்கு திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்யும் நிகழ்வு நடைபெறும்.

R Ashwin Birthday: ஹாப்பி பர்த்டே ஸ்டாரே! ஒரே சூரியனைப்போல் இந்திய அணிக்காக ஒரே அஸ்வின்.. இவர் பெயர் இல்லாத டெஸ்ட் டெக்கார்ட்ஸா..?

39-வது திவ்ய தேசமான ஸ்ரீ நாராயண பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்..

பின்னர் கும்ப தீப ஆரத்தி எடுக்கப்பட்டு தங்க கருட சேவை உற்சவம் நடைபெறும். அப்போது அங்கு கூடியிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமங்கை ஆழ்வார் அருளிய பாசுரங்களைப் பாடடுவர். தொடர்ந்து  11 பெருமாள்களும் தங்க கருட வாகனத்தில் வீதியுலாகாட்சி நடைபெறும். கருடசேவையில்  தமிழ்நாடு மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும்  லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள்களை தரிசனம் செய்வர். இத்தகைய சிறப்பு மிக்க நாங்கூர் 108 திவ்ய தேசங்களில் 39 வது திவ்ய தேசமான புண்டரீகவல்லி தாயார் சமேத நாராயண பெருமாள் இக்கோயிலில் 19 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.

Vinayagar Chaturthi 2023: புதுக்கோட்டை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்...

39-வது திவ்ய தேசமான ஸ்ரீ நாராயண பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்..

முன்னதாக இங்கு கடந்த 13 -ஆம் தேதி கும்பாபிஷேக பூர்வாங்க பூஜைகளும், 14 -ஆம் தேதி யாகசாலை பூஜைகளும் தொடங்கி நடைபெற்றன. 17 ஆம் தேதியான இன்று காலை ஏழாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாஹூதி மற்றும் மகா அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோயிலை சுற்றி வலம் வந்து விமானத்தை அடைந்து. தொடர்ந்து பட்டாச்சாரியார்  விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா சம்ப்ரோக்ஷணத்தை நடத்தி வைத்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

https://tamil.abplive.com/sports/cricket/ravichandran-ashwin-birthday-r-ashwin-career-test-odi-ipl-records-stats-wickets-all-you-need-to-know-140783

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: சொல்லி அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் சவாலில் தோற்ற எடப்பாடி பழனிசாமி - பொள்ளாச்சி விவகாரம்
CM Stalin: சொல்லி அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் சவாலில் தோற்ற எடப்பாடி பழனிசாமி - பொள்ளாச்சி விவகாரம்
TVK Vijay: ”இன்னும் எத்தனை நாள் ஏமாத்துவீங்க” திமுகவை லெஃப்ட், ரைட் வாங்கிய தவெக தலைவர் விஜய்
TVK Vijay: ”இன்னும் எத்தனை நாள் ஏமாத்துவீங்க” திமுகவை லெஃப்ட், ரைட் வாங்கிய தவெக தலைவர் விஜய்
TN Assembly CM Stalin: ”ஸ்டாலின் பஸ்” சட்டப்பேரவையில் கர்ஜித்த முதலமைச்சர் - ”அப்பா..அப்பா..” கண் கலங்கினார்
TN Assembly CM Stalin: ”ஸ்டாலின் பஸ்” சட்டப்பேரவையில் கர்ஜித்த முதலமைச்சர் - ”அப்பா..அப்பா..” கண் கலங்கினார்
Stalin on Pongal Gift Money; கருணை இருக்கு...நிதி இல்லை; பேரவையில் ஸ்டாலின் விளக்கம்...
கருணை இருக்கு...நிதி இல்லை; பொங்கல் பரிசுப் பணம் குறித்து ஸ்டாலின் விளக்கம்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

V C Chandhirakumar Profile: செந்தில்பாலாஜி Choice! உடனே OK சொன்ன ஸ்டாலின்.. யார் இந்த சந்திரகுமார்?Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஸ்டாலின் வைத்த கோரிக்கை நிறைவேற்றிய ராகுல்!Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITAL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: சொல்லி அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் சவாலில் தோற்ற எடப்பாடி பழனிசாமி - பொள்ளாச்சி விவகாரம்
CM Stalin: சொல்லி அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் சவாலில் தோற்ற எடப்பாடி பழனிசாமி - பொள்ளாச்சி விவகாரம்
TVK Vijay: ”இன்னும் எத்தனை நாள் ஏமாத்துவீங்க” திமுகவை லெஃப்ட், ரைட் வாங்கிய தவெக தலைவர் விஜய்
TVK Vijay: ”இன்னும் எத்தனை நாள் ஏமாத்துவீங்க” திமுகவை லெஃப்ட், ரைட் வாங்கிய தவெக தலைவர் விஜய்
TN Assembly CM Stalin: ”ஸ்டாலின் பஸ்” சட்டப்பேரவையில் கர்ஜித்த முதலமைச்சர் - ”அப்பா..அப்பா..” கண் கலங்கினார்
TN Assembly CM Stalin: ”ஸ்டாலின் பஸ்” சட்டப்பேரவையில் கர்ஜித்த முதலமைச்சர் - ”அப்பா..அப்பா..” கண் கலங்கினார்
Stalin on Pongal Gift Money; கருணை இருக்கு...நிதி இல்லை; பேரவையில் ஸ்டாலின் விளக்கம்...
கருணை இருக்கு...நிதி இல்லை; பொங்கல் பரிசுப் பணம் குறித்து ஸ்டாலின் விளக்கம்...
Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த திமுக, யார் இந்த வி.சி. சந்திரகுமார்?
Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த திமுக, யார் இந்த வி.சி. சந்திரகுமார்?
Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில அங்கீகாரம்! - இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில அங்கீகாரம்! - இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 
Annamalai: ”இந்தி தேசிய மொழி இல்லையா?” அஷ்வின் என்ன சொல்றது? ”நானே..” சீறிய அண்ணாமலை
Annamalai: ”இந்தி தேசிய மொழி இல்லையா?” அஷ்வின் என்ன சொல்றது? ”நானே..” சீறிய அண்ணாமலை
Embed widget