குமிளங்காட்டில் யாகத்தில் போடப்பட்ட தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள் - பரவசமடைந்த பக்தர்கள்..!
சீர்காழி அருகே குமிளங்காட்டில் ஸ்ரீ சுயம்பு ஆதிநாகத்தம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடைபெற்ற யாகத்தில் தங்கம், வெள்ளி நவரத்தினங்கள் போடப்பட்டது.
சீர்காழி அருகே குமிளங்காட்டில் ஸ்ரீ சுயம்பு ஆதிநாகத்தம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடைபெற்ற யாகத்தில் தங்கம், வெள்ளி நவரத்தினங்கள் போடப்பட்டது. சீர்காழி அருகே குமிளங்காட்டில் ஸ்ரீ சுயம்பு ஆதிநாகத்தம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடைபெற்ற யாகத்தில் தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள் போடப்பட்டு மகா பூர்ணாகதி காண்பிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே குமிளங்காட்டில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சுயம்பு ஆதிநாகத்தம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் 34வது வேள்வி விழா நடைபெற்றது. இவ்விழாவில் உலக நன்மை வேண்டியும், மழை வளம் வேண்டியும், விவசாயம் தழைத்தோங்கவும் ஸ்ரீ சப்தமண்டல ஆதிநாகசக்தி ஞான சுத்தி யாகம் நடைப்பெற்றது. முன்னதாக யாகத்தை தெய்வத்திரு தேவேந்திர அடிகளார் நாகாத்தம்மன் அருள் பெற்று துவங்கினார். தொடர்ந்து மகா பூர்ணாகதியின் போது 21 கன்னிகள் யாக மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்வை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
21 கன்னிகளும் யாக மண்டபத்தில் தோன்றியவுடன் மகா பூர்ணாகதி நடைபெற்றது. அம்பாளுக்கு முன் எதுவுமே உயர்ந்தது இல்லை என உணர்த்துவதற்காக தங்கம், வெள்ளி, முத்து, பட்டு, நவரத்தினங்கள் ஆகியவையும் மரத்தில் ஆன விவசாய உபகரனங்கள், யாகத்தில் இடப்பட்டு நாகத்தம்மனுக்கு சிறப்பு பூர்ணாகதியும், அதனை தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் இன்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் வழிபட்டு சென்றனர்.