மேலும் அறிய

கருவாட்டுக் குழம்பு, முருங்கைக்கீரை, அவித்த முட்டை..! வீதி முழுவதும் தலைவாழை இலை படையல்! மயிலாடுதுறையில் நடந்த வினோத வழிபாடு!

மன்னம்பந்தல் பொன்னியம்மன், பிடாரி அம்மன் ஆலய வைகாசி உற்சாகத்தில் வீதி முழுவதும் தலைவாழை இலையிட்டு கருவாட்டு குழம்பு படைத்து பெண்கள் வினோத வழிபாட்டில் ஈடுப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் கிராமத்தில் புகழ்பெற்ற பொன்னியம்மன் மற்றும் பிடாரி அம்மன் ஆலயத்தின் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு, மிகவும் பிரசித்தி பெற்ற "எல்லை ஓட்டத் திருவிழா" மற்றும் நூற்றுக்கணக்கான பெண்கள் வீதிகள்தோறும் தலைவாழை இலையிட்டு வினோத படையலிட்டு வழிபட்ட அரிய ஆன்மீக நிகழ்வு பக்திப் பரவசத்துடன் நடைபெற்றது.

மன்னம்பந்தல் கிராமத்தின் காவல் தெய்வங்களாக விளங்கும் அருள்மிகு பொன்னியம்மன், பிடாரி அம்மன் ஆலயத்தின் வைகாசி திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு முறைப்படி காப்புக்கட்டுதலுடன் விமரிசையாகத் தொடங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பல்வேறு வாகனங்களில் வீதியுலாவும் நடைபெற்று வந்தன.

வயல்வெளிகளில் பாய்ந்து சென்ற ‘எல்லை ஓட்டம்’

வைகாசி உற்சவத்தின் சிகர நிகழ்ச்சியாக, கிராமத்தைக் காக்கும் எல்லை காவல் தெய்வங்களின் "எல்லை ஓட்டம்" என்னும் பிரசித்தி பெற்ற வைபவம் நடைபெற்றது. கிராமத்தின் எல்லையைக் கடந்து தீய சக்திகள் உள்ளே வராமல் தடுக்கவும், ஊரின் செழிப்புக்காகவும் இந்த எல்லை ஓட்டம் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது.

விழாவை முன்னிட்டு அதிகாலையில் பொன்னியம்மன், பிடாரி அம்மன் ஆகிய இரு தெய்வங்களின் சிலைகளையும் தாரை தப்பட்டை, உடுக்கை, பம்பை உள்ளிட்ட கிராமிய வாத்தியங்கள் அதிர, பக்தர்கள் தங்களது தோள்களில் சுமந்து கொண்டனர். ஊரின் எல்லைகளை நோக்கி ஓடத் தொடங்கிய பக்தர்கள், காடு, மேடு, கரடுமுரடான பாதைகள் மற்றும் பரந்து விரிந்த வயல்வெளிகள் எனப் பாராமல், அம்மனைத் தோளில் சுமந்தபடி ஆவேசமாக ஓடினர். சேறும் சகதியுமான வயல்வெளிகளில் பாய்ந்து, ஊரின் ஒட்டுமொத்த எல்லையையும் சுற்றி வலம் வந்த இந்த எல்லை ஓட்டக் காட்சி, காண்போரை வியப்பிலும் பக்திப் பரவசத்திலும் ஆழ்த்தியது.

வீதி முழுவதும் தலைவாழை இலை: வினோத படையல் வழிபாடு

எல்லை ஓட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கிராமத்திற்குள் நுழைந்த அம்மன் திருவுருவச் சிலைகளை பக்தர்கள் தோள்களில் சுமந்தவாறு, மன்னம்பந்தல் அம்பேத்கர் காலனி பகுதிக்கு எடுத்து வந்தனர். கிராமத்தைக் காக்க ஓடி வந்த அம்மனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றக் கோரியும் அப்பகுதி மக்கள் திரளாகக் கூடினர்.

அப்போது, அந்தத் தெரு முழுவதும், தங்களின் வீட்டு வாசல்களில் வரிசையாகத் தலைவாழை இலைகளைப் போட்டுப் பிரம்மாண்டமான வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அம்மனுக்கு மிகவும் உகந்ததாகக் கருதப்படும் பாரம்பரிய முறைப்படி, புது மண்பானைகளில் சமைக்கப்பட்ட மணமணக்கும் கருவாட்டுக் குழம்பு, அவித்த முட்டைகள், சத்து நிறைந்த முருங்கைக்கீரை, கொழுக்கட்டை மற்றும் மாவிளக்கு மாவு ஆகியவை அந்தத் தலைவாழை இலைகளில் வரிசையாகப் படைக்கப்பட்டன.

நூற்றுக்கணக்கான பெண்கள் தங்களின் கைகளால் இடித்த பச்சரிசி மாவில் நெய் ஊற்றி, மாவிளக்கு ஏற்றி, சீர்வரிசை தட்டுகளை வைத்து அம்மனை வரவேற்றனர். கிராமப்புற வழிபாட்டு முறையின் தொன்மையை பறைசாற்றும் விதமாக அமைந்த இந்த வினோத கூட்டுப் படையல் வழிபாடு, அப்பகுதி முழுவதும் பெரும் ஆன்மீக அதிர்வை ஏற்படுத்தியது.

பெண்களுக்கு வந்த அருள்வாக்கு: பரவசத்தில் மூழ்கிய பக்தர்கள்

அம்மன் சிலைகள் வீதி உலா வந்தபோது, பம்பை மற்றும் உடுக்கை ஒலிகளின் வேகம் அதிகரிக்க, வழிபாட்டில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கணக்கான பெண்களில் பலருக்கு திடீரென அருள் வந்து ஆவேசமாக ஆடினர். சாமி வந்து ஆடிய பெண்கள், கிராம மக்களுக்கு அருள்வாக்குக் கூறினர். இந்த நெகிழ்ச்சியான மற்றும் ஆன்மீகச் சிலிர்ப்பை ஏற்படுத்திய நிகழ்வு, அங்கிருந்த திரளான பக்தர்களிடையே பெரும் பரவசத்தை ஏற்படுத்தியது. கூடியிருந்த பொதுமக்கள் அனைவரும் பக்தி கோஷங்களை எழுப்பி, அம்மனைத் தொழுது நின்றனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திரண்ட பக்தர்கள்

மயிலாடுதுறை மாவட்டம் மட்டுமன்றி, சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த எல்லை ஓட்டத்தையும், வினோத மாவிளக்கு வழிபாட்டையும் காண மன்னம்பந்தலில் திரண்டனர்.

பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கும் பொருட்டு, மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல், விழா மிக அமைதியாகவும் நேர்த்தியாகவும் நடைபெறுவதை போலீஸார் கண்காணித்தனர்.

ஆலய வைகாசி பெருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான இந்த எல்லை ஓட்டம் மற்றும் வினோத படையல் வழிபாடு, மன்னம்பந்தல் கிராம மக்களின் ஒற்றுமையையும், கிராமிய வழிபாட்டு முறையின் மாறாதப் பாரம்பரியத்தையும் மீண்டும் ஒருமுறை மெய்ப்பிப்பதாக அமைந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளைத் திருப்பணி குழுவினரும், கிராம பொதுமக்களும் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Aadi Amavasaya: ஆடி அமாவாசை எப்போது? .. வீட்டிலேயே தர்ப்பணம் கொடுப்பது எப்படி?
Aadi Amavasaya: ஆடி அமாவாசை எப்போது? .. வீட்டிலேயே தர்ப்பணம் கொடுப்பது எப்படி?
சிவப்பு பட்டு, சாமந்தி பூ அலங்காரத்தில் தேவி! காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தங்கத் தேர் உற்சவம் - முழு விவரம்!
சிவப்பு பட்டு, சாமந்தி பூ அலங்காரத்தில் தேவி! காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தங்கத் தேர் உற்சவம் - முழு விவரம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
Embed widget