![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
கோலாகலமாக நடைபெற்ற குத்தாலம் ஸ்ரீலஸ்ரீ காசிநாதன் சுவாமிகள் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா
குத்தாலம் அருகே தவ நிலையில் இருந்து அருள்பாலிக்கும் ஸ்ரீலஸ்ரீ காசிநாதன் சுவாமிகளின் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
![கோலாகலமாக நடைபெற்ற குத்தாலம் ஸ்ரீலஸ்ரீ காசிநாதன் சுவாமிகள் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா Mayiladuthurai kuthalam poochudi srilasri kaasinathan swamykal temple Kumbabishegam festival கோலாகலமாக நடைபெற்ற குத்தாலம் ஸ்ரீலஸ்ரீ காசிநாதன் சுவாமிகள் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/12/d6c6347c96502ea9c67c8b5a63610acf1720773223779733_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிரசித்தி பெற்ற குத்தாலம் பூச்சூடி ஸ்ரீலஸ்ரீ காசிநாதன் சுவாமிகளின் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தவ நிலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீலஸ்ரீ காசிநாதன் சுவாமிகள்
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா பூச்சூடி கிராமத்தில் தவ நிலையில் இருந்து அருள்பாலிக்கும் ஸ்ரீலஸ்ரீ காசிநாதன் சித்தர் சுவாமி அருள்பாலித்து வருகிறார். மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயில் கும்பாபிஷேகம் செய்ய கோயில் நிர்வாகிகள் முடிவெடிந்தனர். அதனை தொடர்ந்து கோயில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது. தொடர்ந்து திருப்பணிகள் அனைத்து முடிவுற்ற நிலையில் கோயில் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
யாகசாலை பூஜைகள்
முன்னதாக கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த ஒன்பதாம் தேதி காவிரி கரையில் இருந்து புனித நீர் எடுத்துவந்து கோயிலின் அருகே அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் புனித நீரை வைத்து கோமங்கள் வளர்க்கப்பட்டது. முதல் கால யாகசாலை பூஜையுடன் தொடங்கி நான்கு கால யாகசாலை பூஜை நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து இன்று நான்காம் காலயாக சாலை பூஜைகள் நிறைவுற்று பூர்ணஹீதி மற்றும் மகா தீபாராதனை காண்ப்பட்டது.
CBSE : பள்ளி பாடத்திட்டத்தில் புதிய மாற்றம்; யாருக்கெல்லாம்? சிபிஎஸ்இ முக்கிய அறிவிப்பு
கும்பாபிஷேக நிகழ்வு
பின்னர் வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை மல்லாரி இசை, சிவ வாத்தியம் முழங்க சிவாசாரியார்கள் தலையில் சுமந்து கோயிலை சுற்றி வலம் வந்து கோயில் விமான கலசத்தை அடைந்தது. அங்கு விமான கலசத்திற்கு கடத்தில் இருந்த பூஜிக்கப்பட்ட புனித நீரை ஊற்றி மகா அஷ்ட பந்தன கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. வெகு விமரிசையாக நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)