(Source: ECI/ABP News/ABP Majha)
பழமை வாய்ந்த கருவாழக்கரை காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு யாகம்...! குவிந்த பக்தர்கள்...!
பிரசித்திபெற்ற கருவாழக்கரை காமாட்சி அம்மன் கோயில் இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு நடைபெற்ற வருடாபிஷேகம் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை அருகே பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்திபெற்ற கருவாழக்கரை காமாட்சி அம்மன் கோயில் இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு நடைபெற்ற வருடாபிஷேகம் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
ஸம்வத்ஸராபிஷேக யாகம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கருவாழக்கரை கிராமத்தில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கடந்த 2022 -ஆம் ஆண்டு வெகு விமர்சியாக மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேக தினமான இன்று ஸம்வத்ஸராபிஷேக யாகம் மற்றும் சதசண்டி யாகத்துடன் வருடாபிஷேகம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கடந்த ஜுன் 27 -ஆம் தேதி கோயில் வளாகத்தில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் ஸம்வத்ஸராபிஷேக யாகத்துடன் வருடாபிஷேகத்துக்கான சதசண்டி யாகம் தொடங்கியது. அதனை தொடர்ந்து இரண்டாம் கால, மூன்றாம் கால யாக பூஜை நடைபெற்று, கும்பாபிஷேக தினமான இன்று நான்காம் கால ஸம்வத்ஸராபிஷேக யாகம் மற்றும் சதசண்டி யாகம் துவங்கி சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
கெஜ்ரிவாலுக்கு மேலும் 14 நாள்களுக்கு நீதிமன்ற காவல்.. EDயை தொடர்ந்து சிபிஐ நெருக்கடி!
தொடர்ந்து மகா பூர்ணாகுதி செய்யப்பட்டு, மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் அடுத்து யாக குண்டத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார் தலையில் சுமந்து மேளதாள வாத்தியங்கள் முழங்க புறப்பாடாகி திருக்கோயிலை சுற்றி வளம் வந்தது. பின்னர் ஸ்ரீ காமாட்சி அம்பாளுக்கும் கலசாபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.