மேலும் அறிய

திருக்கடையூர் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் எமன் சம்ஹாரம் நடைபெறும் சித்திரை திருவிழாவையொட்டி சந்திரசேகர கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பழமையான  தேவாரப் பாடல் பெற்ற அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. அப்பர், சுந்தர், சம்பந்தர் ஆகிய மூவரால் தேவாரப்பாடல் பெற்றதும், பக்தர் மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் காலசம்ஹாரமூர்த்தியாக எழுந்தருளி எமனை காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்தது உள்ளிட்ட பல்வேறு புராண நிகழ்வுகளை உள்ளடக்கிய உலகப்புகழ்பெற்ற திருத்தலமாக விளங்குகிறது. 

திருக்கடையூர் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இத்தலத்தில் ஆயுள் ஹோமம் மற்றும் 60 வயது தொடங்குபவர்கள் உக்கிர ரத சாந்தி, 60 வயதில் பூர்த்தி அடைந்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சதாபிஷேகம், 90 வயது அடைந்தவர்கள் கனகாபிஷேகம், 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பூர்ணாபிஷேகம் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆண்டின் 365 நாட்களும் திருமணம் நடைபெறும் ஒரே தலமாகும். இந்த கோயிலில் மட்டுமே ஆயுள் விருத்திக்காக திருமணங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறுவது சிறப்பம்சமாகும். இத்தகைய பல்வேறு சிறப்பு பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

PS2 Press meet : ஆதித்த கரிகாலனை கொன்றது யார்? 1000 இலக்கு நிறைவேறுமா? ஸ்வாரஸ்யமான கேள்விக்கு பதிலளித்த மணிரத்னம்

திருக்கடையூர் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

இந்த ஆண்டு சித்திரை திருவிழாவையொட்டி முதல் விழாவாக சந்திர சேகர கொடியேற்றம் நடைபெற்றது. விநாயகர், அமிர்தகடேஸ்வரர், அபிராமி அம்மன், முருகன், சண்டிகேஸ்வரர் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகில் எழுந்தருளினர். கொடி மரத்திற்கு பல்வேறு திரவிய பொடிகள் பால் இளநீர் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, கொடிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றம் நடைபெற்றது.

Udhayanidhi On Annamalai: அண்ணாமலை செஞ்சது காமெடி.. ஆனாலும் சும்மா விடமாட்டோம் - அமைச்சர் உதயநிதி ஆவேசம்

திருக்கடையூர் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

விழாவில் குமரக்கட்டளை தம்பிரான் சுவாமிகள் கோயில் நிர்வாகத்தினர், கோயில் குருக்கள் மற்றும் திரளான பக்தர்கள்  கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் கோயில் குருக்கள் செய்தனர். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திருக்கல்யாணம் தேரோட்டம் மற்றும் எமனை வதம் செய்யும் எம சம்ஹாரம் புராண நிகழ்வுகள்  நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

IPL 2023: கிரிக்கெட் மீது ஆர்வம் மட்டும் இருந்தால் போதும்.. மீதியை நான் பாத்துக்கறேன் - ரிங்கு சிங் உதவிக்கரம்..!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?

Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை

Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!

ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!

Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்

EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்

யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?

Embed widget