மேலும் அறிய
Madurai : கார்த்திகை தீபத் திருவிழா: திருப்பரங்குன்றம் கோயிலில் மலைமீது மகாதீபம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மலைமீது மகாதீபம் ஏற்றப்பட்டது.

கார்த்திகை தீபம்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் சுவாமி தெய்வானையுடன் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முந்தினம் மாலை சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.
தமிழ்கடவுள் முருகப்பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் மலையில் மகா தீபம் !#madurai | #thiruparamkunram | @SRajaJourno | @HINDUMUNNANI4 | @Indumakalktchi pic.twitter.com/ZoRpZ4A07s
— arunchinna (@arunreporter92) December 6, 2022
முன்னதாக சுவாமிக்கு உற்சவர் சன்னதியில் பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கு நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட செங்கோல் வழங்கி சேவற்கொடி சாற்றப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை 11 மணியளவில் உச்சவரான சுப்பிரமணிய சுவாமி மற்றும் தெய்வானை 16 கல் மண்டபம் அருகே உள்ள சிறிய வைர தேரில் எழுந்தருளி ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக மலைமேல் மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. மேலும் கோயிலில் தீபம் ஏற்றப்பட்டு மலைமீது மகாதீபம் ஏற்றப்பட்டது. இதற்காக மூனரை அடி உயரம், இரண்டரை அடி அகலம் கொண்ட தாமிர கொப்பரையில் 300 லிட்டர் நெய், 150 மீட்டர் காடாத் துணி, 3 கிலோ கற்பூரம் கொண்டு பூஜை செய்யப்பட்டு மலைமீது மகாதீபம் ஏற்றப்பட்டது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரை அரிட்டாபட்டியில் மரக்கன்றுகள் நட்டு அரசுக்கு நன்றி தெரிவித்த சமூக ஆர்வலர்கள்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்கவும்





















