மேலும் அறிய

Maha Shivaratri 2025: சிவபெருமானின் திரிபுராந்தகர் அவதாரம் - புராணங்கள் சொல்வது என்ன?

Maha Shivaratri 2025: புராணங்களில் சொல்லப்படும் சிவபெருமானின் அவதாரங்கள் பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.

மகா சிவராத்திரி கொண்டாடப்பட இருக்கிறது. சிவனின் அவதாரங்கள் பற்றி புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதை காணலாம்.

மகா சிவராத்திரி 2025:

அடுத்த வாரம் (பிப்ரவரி -26) புதன்கிழமை அன்று மகா சிவராத்திரி நாள். இந்த நாளில் ஈசனை முழு மனதோடு வழிபட்டால் பல்வேறு நன்மைகள் கிட்டும் என்று சொல்லப்படுகிறது. மகாசிவராத்திரி நாளில் சிவாலயங்களில் இரவில் நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆலயங்களில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்பது பல நன்மைகளை வழங்கும் என்று நம்பப்படுகிறது. 

மகா சிவராத்திரி நாளன்று இரவு முழுவதும் கண் விழித்து பூஜை செய்தால் வேண்டியபடி நன்மைகளும் கிடைக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளன. அதையே நாம் காலங்காலமாக பின்பற்றி வருகிறோம்.

ஓம் நம சிவாய

ஓம் நம சிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரம் உச்சரிப்பதால் நம் மனதிலிருந்து பயம் நீங்கும். நமக்குள் ஒரு நேர்மறைவான அதிர்வை உருவாக்குகிறது.

 சிவ புராணங்களில் ஈசனின் திருவிளையாடலும், அவதாரங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. அது பற்றி காணலாம்.

அர்த்தநாரீஸ்வரர்

 உலகை இயக்கில் சரிபங்கு அளிக்கும் சக்தியின் பெருமையை உணர்த்ததும் விதமாக ஈசன் தன் உடலில் பாதியை உமையாளுக்கு தந்தார். அர்த்தநாரீஸ்வர வடிவம். சிவனின் அவதாரங்களில் இதற்கு தனிச் சிறப்பு உண்டு. வாழ்வியலிலும் ஆணும் பெணும் சமம் என்றும், இருவரும் சார்ப்புண்ணி என்ற உண்மையை உணர்த்துவதாக உள்ளது.

திரிபுராந்தகர் 

திரிபுராந்தகர் அசுரர்களை அழித்த அவதாரம் எனச் சொல்லப்படுகிறது இது தன்னுடைய தவத்தினால், நான்முகனிடமிருந்து பொன் கோட்டை பெற்ற தாரகாட்சன்;  வெள்ளிக் கோட்டை பெற்ற கமலாட்சன், இரும்பு கோட்டை பெற்ற வித்யுன்மாலி ஆகிய மூன்று அசுரர்களையும் அவர்களின் கோட்டைகளையும், ஆணவத்தையும் அழித்த ஈசன் திரிபுராந்தகராகக் போற்றப்படுகிறார் என்று சொல்லப்படுகிறது. 

பிட்சாடனர்

 புராணகதைகளின் படி, ஒரு துறவியின் வீட்டில் பிறந்தார் சிவபெருமான். பிப்லாட் பிறப்பதற்கு முன்னதாகவே அத்துறவி வீட்டைவிட்டு சென்றுவிட்டார். சனி திசையின் இருக்கை நிலை சரியில்லாத காரணத்தினாலேயே தந்தை வீட்டைவிட்டு சென்றதாக உணர்கிறார்.  இதனால் சனியை பிப்லாட் சபித்து தன் வின் நகை இருப்பிடத்திலிருந்து சனி கிரகத்தை வழிபட செய்தார் என்றும் தாருகா வன முனிவர்களுக்கு இருந்த ஆணவத்தை ஒடுக்கவும்  ஈசன் மேற்கொண்டது பிட்சாடனர் திருக்கோலம் என்று சொல்லப்படுகிறக்து. 

நந்தி அவதாரம்

முனிவர் சிலாடாவர் மேற்கொண்ட கடும் தவத்தினால் உருவானதுதான் சிவனின் நந்தி அவதாரம். சிலாடவர் சிவபெருமானின் அருள் வேண்டினார். அதோடு, சாகா வரத்துடன் குழந்தையொன்றையும் கேட்டார். முனிவரின் பக்தியில் மனம் நெகிழ்ந்த ஈசன், அவருடைய மகனாக பிறக்க நந்தி அவதாரம் எடுத்தார். பின்னர், நந்தி கைலாசத்தில் சிவனுக்கு பாதுகாவலனாக மாறிவிட்டார். நினைப்பதை நடத்தி கொடுப்பவராகவும் நந்தி வழிபாடு இருக்கிறது என்று நம்பப்படுகிறது. 

பைரவர்

புராணங்களின் படி, பிரம்மாவின் ஆணவத்தை அழிப்பதற்காக சிவனின் தத்புருஷ முகத்தில் இருந்து ஜோதியாக வெளிப்பட்டவர் பைரவர். சிவனின் அவதாரங்களில் இது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. பேராசை, பொறாமை உள்ளிட்ட தீய எண்ணங்களில் இருந்து விடுபட பைரவரை வழிபடலாம்.  இவர் காவல் தெய்வமாக கருதப்படுகிறார். அச்சம் நீக்குபவர். தன்னை நாடி வரும் பக்தர்களின் பாவத்தை போக்குபவர். எதிரிகளால் துன்பம் அடைபவர்கள், அவற்றில் இருந்து விடுபட பைரவரை வழிபடலாம். விபத்து, உள்ளிட்ட துர்மரணங்களில் இவற்றில் இருந்து காப்பவரும் பைரவர் என்று நம்பப்படுகிறது. 

 ரிஷபாரூடர்

64 நான்கு சிவ உருவத்திருமேனிகளில் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும். பார்வதியுடனும் விநாயகர்,முருகப்பெருமானுடனும் ஈசன் புன்முறுவல் பூத்த வண்ணம் எருது வாகனத்தில் அருளும் திருவடிவம், ரிஷபாரூடர் எனப்படுகிறது.

ரிஷப அவதாரம்

பார்க்கடல் கடைந்த பிறகு,  கீழோகத்திற்கு சென்றார் திருமால். அங்கே ஒரு பெண்ணின் மீது காதல் கொண்டு அவருடன் வாழ தொடங்கினார். திருமணம் நடந்தது. திருமாலுக்கு பல மகன்கள் பிறந்தனர். ஆனால் அவரின் அனைத்து குழந்தைகளும் அசுரன் குணத்தை உடையவனாக இருந்தனர். அனைத்து கடவுள்களையும் மனிதர்களையும் ஒரே மாதிரியான தொல்லைகளை அளித்து வந்தனர.  அப்பொழுது காளை அல்லது ரிஷப வடிவத்தை எடுத்து அனைத்து அவர்களை அழித்து உலகை காப்பாற்றினார் ஈசன். 

வீரபத்திரர்

சிவனுடைய மாமனார் தட்சப்பிரஜாபதி. இவர் யார் பேச்சையும் கேட்காமல், சிவனையும் மதிக்காமல் யாகம் செய்த அவரை அழித்தார் ஈசன்.  வீரபத்திரர் எனும் தட்ச சம்ஹாரமூர்த்தியாக வணங்கப்படுகிறார்.

திருக்கல்யான திருக்கோலம்

பார்வதி தேவி மணந்தால் சிவனை மட்டுமே என்று தவமிருந்தார். அதன்பிறகு, சிவன் - பார்வதி திருமணம் நடைபெற்றது. இதில் தேவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இது திருக்கல்யாண கோலம் என்று கூறப்பட்டுகிறது. பார்வதியை மணக்க அவதரித்த ஈசன் கொண்டாடப்படுகிறான். 

யாதிநாத் அவதாரம்

காட்டில் ஒரு கணவன் - மனைவி வாழ்ந்து வந்தனர். அவர்களை ஒரு முறை யாகித் வடிவில் சிவபெருமான் சந்தித்தார். அவர்கள் வீட்டில் தங்கிக் கொள்வதாக கூறினார். அவர்கள் இருந்ததோ சின்ன குடிசை. இருப்பிட வசதி காரணமாக அவர்கள் இருக்கக்கூடிய சின்ன குடிசையில் விருந்தாளிகளை தங்க வைக்க, நினைத்தார் கணவர்.  அதனால், இரண்டு பேரும் வெளியபடுக்க முடிவெடுத்தனர். ஆனால் அன்று இரவு வன விலங்குகளால் கணவர் கொல்லப்பட்டார். இதையறிந்த அவரது மனைவி சாக நினைத்தார். உடனே, சிவன் தன் உருவத்தை வெளிக்காட்டினார்.  சிவபெருமான் மனைவிக்கு வரமளித்தார். அதன்படி, கணவர் மீண்டும் பிறந்தார். இருவரும் மண்ணில் வாழும் வரம் பெற்றனர். இது யாதிநாத் அவதாரமாக போற்றப்பட்டுகிறது.

கிருஷ்ண தர்ஷன் அவதாரம்

மனிதர்கள் வாழ்க்கையில் யாகம் மற்றும் சடங்குகளின் முக்கியத்துவத்தை உணர்த்தவே சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்ததாக கூறப்படுகிறது.

பிஷ்க்வர்யா அவதாரம்

குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக பிச்சைக்காரான் அவதாரம் எடுத்தார் சிவன். குழந்தையை மீட்டு பெற்றோரிடம் சேர்த்த கதை இது.

சுரேஷ்வர் அவதாரம்

உபமன்யன் என்ற பக்தனை சோதிக்க இந்திரன் வடிவில் உருவெடுத்தார் சிவபெருமான்.  அதனால் தான் அவரை சுரேஷ்வரர் என்று அழைக்கிறோம். இதில் உபம்ன்யன் தனது பக்தியால் வெற்றிபெற்று சிவபெருமானை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

சுண்டன் தர்கா அவதாரம்

திருமணத்தின் போது பார்வதி தேவியின் தந்தை இமாலயா விடம் பார்வதியின் கரத்தை பிடிக்க அவர் இந்த அவதாரத்தை எடுத்தார்.

பிரமச்சாரி அவதாரம்

சிவபெருமானை கணவனாக அடைய சிவனை பிரார்த்தனை செய்த பார்வதி தேவியை சோதிக்க சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்தார்.

எக்ஷெக்வர் அவதாரம்

கடவுள்கள் மனதில் குடிகொண்டிருந்த போலியான அகம்பாவங்களை ஒழிக்கவே இந்த அவதாரத்தை எடுத்தார் சிவபெருமான். 

 


 

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Pongal Gift 2026: 8ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு.! ரொக்கப்பணம் இருக்கா.? இல்லையா.? அரசின் முடிவு என்ன.?
8ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு.! ரொக்கப்பணம் இருக்கா.? இல்லையா.? அரசின் முடிவு என்ன.?
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Pongal Gift 2026: 8ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு.! ரொக்கப்பணம் இருக்கா.? இல்லையா.? அரசின் முடிவு என்ன.?
8ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு.! ரொக்கப்பணம் இருக்கா.? இல்லையா.? அரசின் முடிவு என்ன.?
Nissan Kait SUV: இதோ, நாங்களும் வர்றோம்.! க்ரெட்டா, சியாராவிற்கு போட்டியாக நிசான் கெய்ட்; First Look
இதோ, நாங்களும் வர்றோம்.! க்ரெட்டா, சியாராவிற்கு போட்டியாக நிசான் கெய்ட்; First Look
Heavy Rain Alert: மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் மழை.! உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை மையம் அலர்ட்
மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் மழை.! உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை மையம் அலர்ட்
Tata Punch EV Facelift 2026: புதிய ரேஞ்ச், அம்சங்களுடன் களமிறங்கும் TATA Punch EV; யப்பா.! ஒரு சார்ஜுல இவ்ளோ தூரம் போகுமா.?
புதிய ரேஞ்ச், அம்சங்களுடன் களமிறங்கும் TATA Punch EV; யப்பா.! ஒரு சார்ஜுல இவ்ளோ தூரம் போகுமா.?
Gold Rate Jan. 2nd: மீண்டும் முருங்கை மரம் ஏறிய தங்கம்.! ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.?! ஒரு லட்சத்தை தாண்டி அதிர்ச்சி
மீண்டும் முருங்கை மரம் ஏறிய தங்கம்.! ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.?! ஒரு லட்சத்தை தாண்டி அதிர்ச்சி
Embed widget