மேலும் அறிய

Maha Shivaratri 2025: ஈசன் அருள் கிடைக்க..மகா சிவாரத்திரி விரத முறைகள் பற்றி தெரியுமா?

Maha Shivaratri 2025: மகா சிவ ராத்திரி பற்றி புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளவை பற்றி இங்கே காணலாம்.

ஆலகால விஷம் மக்களின் உயிரை பறித்துவிடக் கூடாது என எண்ணிய சிவபெருமான், பாற்கடலிலிருந்து பொங்கிய ஆலகால விஷத்தினைத் தனது கழுத்தில் தாங்கி நீலகண்டனாக நின்றது சிவராத்திரி நாளன்றுதான் என்று சொல்லப்படுகிறது.  இப்படி மகா சிவராத்திரி தினத்திற்கு பல்வேறு கதைகளை புராணங்கள் கூறுகின்றன. 

உலகம் நிலைப்பெற ஆதி காரணமாக இருக்கக் கூடிய சிவபெருமானுக்குரிய விரதங்களிலேயே தலைசிறந்தது சிவ ராத்திரி விரதம் என்று சொல்லப்படுகிறது. சிசராத்திரி தினத்தில் விரதம் இருந்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. 

எட்டுணையும் உளத்து அன்பிலேரேனும் உளரேனும் இந்நாள் எம்மை கண்டவர் நோற்றவர் பூஜை பண்ணினர் நற்கதி அடைவைர்’ - என்று சிவபெருமான் அருளியதாக வரதபண்டிதம் என்ற நூல் தெரிவிக்கிறது. 

மகா சிவ ராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து சிவபெருமானை வழிபடுவதன் மூலம் அவரின் பரிபூரண அருளைப் பெற முடியும் என்பது இதிகாசங்களின் படி ஐதீகமாக சொல்லப்படுகிறது. இது தொடர்பான குறிப்புகள் திருவிளையாடல் புராணம், கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு புராண நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகா சிவ ராத்திரி எப்போது?

இந்தாண்டு புகழ்பெற்ற மகா சிவராத்திரி வரும் 26-ம் தேதி (பிப்ரவரி,26,2023) கொண்டாடப்பட உள்ளது. 

மகா சிவராத்திரி நாளன்று இரவு முழுவதும் சிவாலயங்களில் நடை திறந்திருக்கும். விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடைபெறும். இரவு முழுவதும்  கண் விழித்து விரதம் இருப்பதும், சிவதரிசனம் செய்வது, அன்னதானம் செய்வது மிகுந்த புண்ணியங்களைத் தரும் என்று நம்பப்படுகிறது. இது பல்வேறு ஜென்ம நன்மைகளையும் அளிக்கிறது.

மகா சிவராத்திரி விரத நேரம்:

சிவராத்தியன்று நாள் முழுவதும் விரதம் இருப்பது பல்வேறு நன்மைகளை தரும் என்று கூறப்படுகிறது. 

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் சிறப்பான நாளாக அமையும். அதன் அடிப்படையில், மாசி மாதத்தில் பௌர்ணமி நாள் மஹாசிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை அனைத்து மாவட்டங்களிலும் இந்த மஹாசிவராத்திரி கொண்டாடப்பட்டு வந்தாலும், கோவையில் உள்ள ஈஷா மஹாசிவராத்திரிதான் கடந்த சில ஆண்டுகளாக அதிக முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. ஈஷா மையத்தில் கொண்டாடப்படும் மகா சிவராத்தி நிகழ்வில் ஏராளமான சினிமா நடிகைகள், பிரபலங்கள் பங்கேற்கின்றனர். இந்தாண்டு, மகா சிவாத்திரி நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். 

மனது அமைதியுடன் இருக்க, எவ்வித எதிர்மறையான எண்ணங்களும் இல்லாமல் இருக்க
மனதை இறைவனிடத்தில் செலுத்தி, அவனோடு சிந்தையில் இரண்டறக் கலந்து நிற்க வேண்டும். மறுநாள் காலை குளித்து பூஜைகள் செய்து, மீண்டும் சிவாலயங்கள் சென்று விரதத்தை முடித்துக்கொள்ளலாம் என்று விரத வழிமுறைகளாக சொல்லப்படுகிறது. 

புராணங்களில் சொல்லப்படும் சிவ ராத்திரி ஐந்து வகையாக இருக்கிறது. மகா சிவாரத்திரி. யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, மாத சிவராத்திரி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகா சிவராரத்திரி 

மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி நாளே மகா சிவராத்தி எனப்படுகிறது. இதற்கு வருஷ சிவராத்திரி என்ற பெயரும் உண்டு.

யோக சிவராத்திரி 

இந்த யோக சிவராத்திரியன்று விரதம் இருந்தாலும் அதகு மூன்று கோடி சிவராத்திரி விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. 

நித்திய சிவராத்திரி

ஆண்டின் பன்னிரண்டு மாதங்களிலும் வரும் தேய்பிறை- வளர்பிறைகளின் சதுர்த்தசி திதி வரும் 24 நாட்களும் நித்திய சிவராத்திரி என்று கூறப்படுகிறது. 

பட்ச சிவராத்திரி 

தை மாதம் தேய்பிறை பிரதமையன்று தொடங்கி பதிமூன்று நாட்கள் தினந்தோறும் முறைப்படி ஒரு வேளை உணவு உண்டு 14 ஆம் நாளில் சதுர்த்தசி திதியன்று முறைப்படி விரதம் இருப்பது பட்ச சிவராத்திரி எனப்படும். 

மாத சிவராத்திரி

பெரும்பாலான சிவராத்திரிகள், அமாவாசை அல்லது சதுத்தசியை அனுசரித்து வரும். ஆனால், இது மாத்தத்தின் மற்ற திதி நாட்களில் வருவதாகும். 

வாழ்த்துக்கள்: 

  • வேண்டுதல்களை நிறைவேற்றுவதாக இந்த சிவராத்திரி அமையட்டடும். மஹா சிவராத்திரி வாழ்த்துக்கள்!
  • நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் வளம், நலம், மகிழ்ச்சி சூழ்ந்து வாழ மஹா சிவராத்திரி வாழ்த்துகள்!
  • நிம்மதியான வாழ்க்கை அமைய வாழ்த்துகள்.. என்றும் இறைவன் அருள் எப்போது உங்களுக்கு துனை இருக்கட்டும்.  உங்களுக்கு மகாசிவராத்திரி வாழ்த்துக்கள்!
  •  இனிய மகா சிவராத்திரி வாழ்த்துக்கள்! சிவபெருமான் அனைவரையும் ஆசிர்வதிப்பார். மகிழ்ச்சி தேடிவர வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய...!
  • சிவபெருமான் உங்கள் வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவார். மகா சிவராத்திரி வாழ்த்துக்கள்!

 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

வளையல்களால் மூழ்கிய வல்லக்கோட்டை அம்மன் சந்நிதி! சிலிர்க்க வைக்கும் ஆடிப்பூரம் வைபவம்! 
வளையல்களால் மூழ்கிய வல்லக்கோட்டை அம்மன் சந்நிதி! சிலிர்க்க வைக்கும் ஆடிப்பூரம் வைபவம்! 
அம்மனை நாடி அலைகடலென திரண்ட பக்தர்கள்! ஏகௌரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு
அம்மனை நாடி அலைகடலென திரண்ட பக்தர்கள்! ஏகௌரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு
ஆடிப்பூர வளைகாப்பு உற்சவம்: விழுப்புரம் மாவட்டமே ஆன்மிகக் கடலில் மூழ்கியது!
ஆடிப்பூர வளைகாப்பு உற்சவம்: விழுப்புரம் மாவட்டமே ஆன்மிகக் கடலில் மூழ்கியது!
எமனை வென்ற திருக்கடையூரில் சிலிர்க்க வைத்த ஆன்மீக வைபவம்! என்ன தெரியுமா..?
எமனை வென்ற திருக்கடையூரில் சிலிர்க்க வைத்த ஆன்மீக வைபவம்! என்ன தெரியுமா..?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget