Maha Shivaratri 2023 : அருள வரும் மகா சிவராத்திரி.. தியானிக்கவேண்டிய சிவ மந்திரங்கள் இதோ.. முழு விவரம்...!
மகா சிவாராத்திரி அன்று கீழே குறிப்பிட்டுள்ள சிவ மந்திரங்களை உச்சரித்து சிவ அருளை பெற்றிடுவோம்.
மகா சிவராத்திரி 2023
உலகம் நிலைப்பெற ஆதி காரணமாக இருக்கக் கூடிய சிவபெருமானுக்குரிய விரதங்களிலேயே தலைசிறந்தது சிவ ராத்திரி விரதம்...எட்டுணையும் உளத்து அன்பிலேரேனும் உளரேனும் இந்நாள் எம்மை கண்டவர் நோற்றவர் பூஜை பண்ணினர் நற்கதி அடைவைர்’ - என்று சிவபெருமான் அருளியதாக வரதபண்டிதம் என்ற நூல் தெரிவிக்கிறது.
மகா சிவ ராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து ஈசன் சிவபெருமானை வழிபடுவதன் மூலம் அவரின் பரிபூரண அருளைப் பெற முடியும் என்பது இதிகாசங்களின் படி ஐதீகமாக சொல்லப்படுகிறது. இது தொடர்பான குறிப்புகள் திருவிளையாடல் புராணம், கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு புராண நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தாண்டுக்கான புகழ்பெற்ற மகா சிவராத்திரி வரும் 18 ஆம் தேதி (பிப்ரவரி, 18,2023) கொண்டாடப்பட உள்ளது.
அன்றைய நாளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண்விழித்து விரதம் இருந்து சிவனை வழிபடுவார்கள். மகா சிவாராத்திரி நாளில், இரவு முழுவதும் சிவாலயங்கள் திறந்திருந்திருக்கும். நான்கு கால பூஜைகளும் சிறப்பாக நடைபெறும். ஒவ்வொரு கால பூஜைகளும் விமர்சையாக நடைபெறும்.
பிப்ரவரி 18ஆம் தேதி மகா சிவராத்திரி விரதத்தை தொடங்குபவர்கள் மறுநாள் பிப்ரவரி 19ஆம் தேதி முடிக்க வேண்டும். அல்லது, பிப்ரவரி 19ஆம் தேதி காலை 6.59 மணிக்கு தொடங்கி மதியம் 3.24 மணிக்குள் எந்த நேரத்திலும் விரதத்தை முடிக்கலாம். விரத நாளில் கோயிலுக்கு சென்று சிவனை வழிபட வேண்டும். மேலும், கண் விழித்து மந்திரங்கள் சொல்ல வேண்டும். அதன்படி,
மந்திரங்கள்
ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரம் உச்சரிப்பதால் நம் மனதிலிருந்து பயம் நீங்கும். நமக்குள் ஒரு நேர்மறைவான அதிர்வை உருவாக்குகிறது.
சோஷிதா நமத்
பவாந்தவே நம சிவாய
பாமரேதர ப்ரதாத
பாந்தவே நம சிவாய
ருத்ர மந்திரம்
நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய
மஹாதேவாய காலாய காலாக்னீ ருத்ராய
நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜாய ஸரவேஸ்வராய
ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம.
சிங் சிங் சிவாய ஓம்
கருணாவதாரம்
கற்பூர கௌரம் கருணாவதாரம்
கற்பூர கௌரம் கருணாவதாரம்
சம்சாரசாரம் புஜகேந்திரஹாரம்
சதாவசந்தம் இருதயாரவிந்தே
பவம் பவானி சகிதம் நமாமி
மூல மந்திரம்
ஓம் நம சிவாய
ஓம் சிவாய போற்றி
ஓம் மஹேஸ்வராய போற்றி
ஓம் சம்பவே போற்றி
ஓம் பினாகினே போற்றி
ஓம் சசிசேகராய போற்றி
ஓம் வாம தேவாய போற்றி
ஓம் விரூபகஹாய போற்றி
ஓம் கபர்தினே போற்றி
ஓம் நீலலோஹிதாய போற்றி
ஓம் சங்கராய போற்றி
ஓம் சூலபாணயே போற்றி
விரத நாளிலில் வீட்டில் பூஜை செய்துவிட்டு இந்த மந்திரங்கள் சொல்வது சிறப்பானது. விரத நாள் முழுவதுமே இந்த மந்திரங்கள் உச்சரித்து சிவ அருளை பெற்றிடுவோம்.
மேலும் படிக்க