Maha Shivaratri 2023: பக்தர்களே.. காஞ்சிபுரத்தில் அமர்நாத் குகை..! சிவராத்திரிக்கு நீங்கள் இதை மிஸ் பண்ணிடாதீங்க..?
காஞ்சிபுரத்தில் மஹா சிவராத்திரி விழாவையொட்டி தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ள அமர்நாத் பனி லிங்கம் பொதுமக்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்
![Maha Shivaratri 2023: பக்தர்களே.. காஞ்சிபுரத்தில் அமர்நாத் குகை..! சிவராத்திரிக்கு நீங்கள் இதை மிஸ் பண்ணிடாதீங்க..? Maha Shivaratri 2023 Amarnath pani lingam, which has been set up realistically on the occasion of Maha Shivaratri festival in Kanchipuram, was visited by a large number of people Maha Shivaratri 2023: பக்தர்களே.. காஞ்சிபுரத்தில் அமர்நாத் குகை..! சிவராத்திரிக்கு நீங்கள் இதை மிஸ் பண்ணிடாதீங்க..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/18/c756d00fb201de5fa30c51cf91cf98e61676695084895109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஐஸ்கட்டியினால் பனி லிங்கம்
![Maha Shivaratri 2023: பக்தர்களே.. காஞ்சிபுரத்தில் அமர்நாத் குகை..! சிவராத்திரிக்கு நீங்கள் இதை மிஸ் பண்ணிடாதீங்க..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/18/2b72316c0e878de2747c877386e2f86f1676694852226109_original.jpg)
சிவராத்திரி:
சிவராத்திரி பண்டிகையை ஒட்டி சிவாலயங்களில் ஏற்கனவே கடந்த சில நாட்களாக பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்று வந்தது. இன்று சிவராத்திரியை முன்னிட்டு இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை கோவில்களில் சிவராத்திரி பூஜைகள் நடைபெற உள்ளது. இதற்காக பக்தர்கள் இரவுகளில் சிவாலயங்களுக்கு சென்று விடிய, விடிய நடைபெறும் பூஜைகளில் பங்கேற்பார்கள்.
சிறப்பு பூஜைகள்:
ஒவ்வொரு சிவாலயங்களில் வேறு, வேறு நேரங்களிலும் இந்த ஜாம பூஜைகள் நடத்தப்படும். தைப்பூசத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் மக்கள் கொண்டாடும் பெரிய பண்டிகையாக சிவராத்திரி உள்ளது. ஆலயங்களுக்கு இன்று இரவு முதல் பக்தர்கள் குவிவார்கள் என்பதால் முக்கிய ஆலயங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளும், கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
சிவாலயங்கள்:
சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயம், அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரர் ஆலயம், வடபழனி வேங்கீஸ்வரர் ஆலயம், திருவொற்றியூரில் உள்ள தியாகராஜர் ஆலயம் ஆகிய ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் இரவு முழுவதும் நடைபெற உள்ளது. இது மட்டுமின்றி, தமிழ்நாட்டின் இதர புகழ்பெற்ற கடலூர் திருவதிகை வீரட்டானேசுவரர் சிவன் ஆலயம், திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயம், மயிலாடுதுறை ஸ்ரீமயூரநாதசுவாமி ஆலயம், திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் ஆலயம், புகழ்பெற்ற தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம், சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில், புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயம், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடத்தப்படும். பக்தர்கள் மேற்கண்ட ஆலயங்களில் ஆயிரக்கணக்கில் குவிவார்கள் என்பதால் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
மேலும், வெள்ளியங்கிரி மலையில் உள்ள சிவபெருமானை வணங்குவதற்கும் பக்தர்களுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று சிவராத்திரி மட்டுமின்றி சனிப்பிரதோஷம் என்பதால் கூடுதல் சிறப்புடைய நாளாக பக்தர்கள் கருதுகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)