Sabarimala: ஐயப்பன் மீது கொட்டப்படும் விபூதி.. நடை திறந்ததும் சபரிமலையில் நடக்கும் அதிசயம்!
சபரிமலை ஐயப்பன் கோயில் கேரள மாநிலத்தில் உள்ள பத்தினம் திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஐயப்பனை காண உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்களும் வருகை தருகிறார்கள்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை சாத்தப்படும்போது விபூதி கொட்டப்படுவதன் பின்னணி குறித்தான விஷயங்களைப் பற்றிக் காணலாம்.
சபரிமலை ஐயப்பன் கோயில் கேரள மாநிலத்தில் உள்ள பத்தினம் திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஐயப்பனை காண உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்களும் வருகை தருகிறார்கள். கார்த்திகை மற்றும் மார்கழி மாதம் தான் சபரிமலை ஐயப்பன் கோயிலின் சீசன் காலமாகும். இந்த காலக்கட்டத்தில் சுமார் 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் நடை திறந்திருக்கும். அதேசமயம் மற்ற தமிழ் மாதங்களில் மாதப்பிறப்பு தொடங்கி ஐந்து நாட்கள் வரை நடை திறக்கப்பட்டிருக்கும்.
சபரிமலை செல்லும் பக்தர்கள்
சபரிமலை கோயிலுக்கு பக்தர்கள் பெருவழி, சிறுவழி என இரண்டு பாதைகளை பயன்படுத்துகிறார்கள். அதாவது எருமேலி தொடங்கி சபரிமலை வரையிலான 50 கிலோமீட்டர் பெருவழியாக அறியப்படுகிறது. அதேசமயம் பம்பை முதல் சபரிமலை வரையிலான 7 கிலோ மீட்டர் சிறுவழியாகவும் அறியப்படுகிறது. ஆன்லைன் முன்பதிவு, ஸ்பாட் புக்கிங் என இரு வழிகளில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இப்படியான நிலையில் சபரிமலை கோயில் நடை ஒவ்வொரு இரவு மூடப்படும் முன் ஹரிவராசனம் பாடல் ஒலிபரப்பப்படும்.
பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் பாடிய இந்த பாடல் பல தசாப்தங்களாக சபரிமலையில் இசைக்கப்பட்டு வருகிறது என்பது பலரும் அறிந்த தகவலாகும்.
விபூதி கொட்டப்படுவது ஏன்?
இந்த நிலையில் சபரிமலையில் நடை மூடப்படும் முன் ஐயப்பன் மீது விபூதி கொட்டப்படுவது பாரம்பரிய நடைமுறையாக பின்பற்றப்பட்டு வருகிறது.
சபரிமலை ஐயப்பனை நாம் சாதாரணமாக கணிக்க முடியாது. அவரது அதிசயங்களை பக்தர்களால் மட்டுமே சொல்ல முடியும். ஒவ்வொரு மாதமும் சபரிமலையில் நடைதிறக்கும்போது பல வித அதிசயங்கள் நிகழும். அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் நடை சாற்றப்படும்போது கிலோ கணக்கில் ஐயப்பன் மீது பசுஞ்சாணத்தால் செய்யப்பட்ட விபூதியை கொட்டி விடுவார்களாம். இந்த விபூதியானது மதுரையில் உள்ள ஒரு குருசாமி உருவாக்கி வழங்குகிறாராம். அதேபோல் ஐயப்பனின் வலது கையில் சின் முத்திரை இருக்கும். அதன் மீது ருத்ராக்ஷ மாலையை போட்டு விடுவார்கள். இதற்கு அர்த்தம் ஐயப்பன் தவ நிலைக்கு சென்று விட்டார்கள் என்பது அர்த்தமாகும்.
அதேபோல் சுவாமி ஐயப்பன் இடது கையில் தண்டம் கொடுத்து ஒரு விளக்கை மட்டும் ஏற்றி விட்டு நடை சாத்தப்படும். ஒருமாதம் கழித்து நடை திறக்கும்போது அந்த விளக்கு எரிந்து கொண்டிருக்கும். கதவு முழுவதுமாக திறக்கும்போது அந்த விளக்கு அணைந்து விடும். ஐயப்பன் மீது போடப்பட்ட விபூதி கீழே கொட்டி விடும். அதேசமயம் ஐயப்பனின் வலது கையில் இருக்கும் ருத்ராக்ஷம், இடது கையில் இருக்கும் தண்டம் கைமாறி இருக்கும். இதன் அர்த்தம் ஐயப்பனின் தவக்கோலம் உலகத்தின் பார்வை பட்டதும் கலைந்து போய் விட்டது என்பதாகும். இதன்மூலம் ஐயப்பன் உயிர்ப்புடன் உள்ளார் என்ற நம்பிக்கையை பக்தர்களுக்கு உணர்த்துவதாகும் என சொல்லப்படுகிறது. இந்த தகவலை பிரபல பின்னணி பாடகர் வீரமணி ராஜூவும் தனது நேர்காணலில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





















