மேலும் அறிய
Advertisement
புதுப்பொலிவு பெற்று வரும் மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்
10 தினங்களில் இந்த பணிகள் முடிந்து வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் திருவிழாவிற்காக புதுப்பொலிவு பெற உள்ளது.
வண்டியூர் தெப்பக்குளம் மதுரையின் முக்கிய சுற்றுலா ஸ்தலமாக விளங்கி வருகிறது. மன்னர் திருமலை நாயக்கர் மஹால் கட்டுவதற்காக மண் எடுக்கப்பட்ட இடத்தை அப்படியே தெப்பக்குளமாக்கிவிட்டார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வைகை ஆற்றில் இருந்த நிரந்தரமாக தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்பிறகு கடந்த 3 ஆண்டுகளாக தெப்பக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. சுற்றுலா பயணிகளுக்காக படகு சவாரியும் ஏற்பாடு செய்யப்பட்டது. வண்டியூர் மாரியம்மன் தெப்ப திருவிழா ஒவ்வொரு வருடமும் மிகவும் விமர்சையாக நடைபெறும் இந்த திருவிழாவில் பங்கேற்க மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள் தெப்பக்குளத்தில் தேர் சுற்றும் நாள் அன்று மதுரை மாநகரே விழாக்கோலம் போல் காட்சி அளிக்கும்.
வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் தை தெப்ப உற்சவம் வருகின்ற ஜனவரி 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பிப்ரவரி நான்காம் தேதி தெப்பத்தில் சுவாமி சுற்றிவரும் திருவிழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.
இந்த ஆண்டிற்கான மாரியம்மன் தெப்பத் திருவிழாவுக்காக முகூர்த்தக் கால் ஜனவரி ஒன்பதாம் தேதி நடப்பட்டது. இந்நிலையில் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள மதில் சுவர்களுக்கு வர்ணம் பூசும் பணி தற்போது துவங்கியுள்ளது. சுவர்களில் ஏற்பட்ட வெடிப்புகள் சேதங்களை சரி செய்து வர்ணம் தீட்டும் பணியானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, 10 தினங்களில் இந்த பணிகள் முடிந்து வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் திருவிழாவிற்காக புதுப்பொலிவு பெற உள்ளது.
மேலும் மதுரையின் ஆன்மீக செய்திகள் !
திருப்பரங்குன்றம் கோவில் உண்டியலில் இருந்து 43,76,178 ரூபாய் ரொக்கமும்,95 கிராம் தங்கமும், 1கிலோ 615 கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றது.
ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பரமணியசுவாமி கோயிலில் நேற்று முந்தினம் உண்டியல் திறந்து எண்ணப்பட்ட இதில் ரூபாய் 43 லட்சத்து 76 ஆயிரத்து 178 ரூபாய் ரொக்கமாகவும், தங்கம் 95 கிராம், வெள்ளி 1 கிலோ 615 கிராம் உண்டியல் மூலம் கிடைக்கப் பெற்றது. திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம் இந்த நிலையில் மார்கழி மாதத்திற்கான உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. அதில் பணம் ரூ.43லட்சத்து, 76 ஆயிரத்து 178 ரூபாய், தங்கம் 95கிராம், வெள்ளி 1 கிலோ 615 கிராம் இருந்தது. இதில் திருப்பரங்குன்றம் கோயில் துணை ஆணையர் சுரேஷ் முன்னிலையில் ஸ்கந்தகுரு பாடசாலை மாணவர்கள், ஐய்யப்ப சேவா சங்கத்தினர் மற்றும் கோயில் பணியாளர்கள் இந்த உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மயிலாடுதுறை
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion