மேலும் அறிய
Meenakshi Thirukalyanam: கமகம மீனாட்சி கல்யாண விருந்து - டன் கணக்கில் காய்கறி வெட்டிய பெண்கள்
ஒரு பக்கம் கல்யாண வேலை பிசியாக இருக்கும் நேரத்தில், கல்யாண விருந்துப் பணி இன்று காலை முதலே தொடங்கிவிட்டது.

திருக்கல்யாண விருந்து
Source : whats app
திருக்கல்யாண விருந்துப் பணி நேற்று விறு விறுப்பாக நடைபெற்றது. பெண்கள் மகிழ்ச்சியுடன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். 27வது ஆண்டாக இந்த அன்னதான விருந்து நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
Meenakshi Thirukalyanam 2025 ;
சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும், மீனாட்சியம்மனும் மணக்கோலத்தில் எழுந்தருளவுள்ளனர்
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடனும், பவள கனிவாய் பெருமாளும் இன்று மாலை கோயிலில் இருந்து புறப்பாடாகி மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகை தருவர். இதனையடுத்து நாளை காலை திருக்கல்யாண மேடையில் பவளக்கனிவாய் பெருமாளும், சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடனும் வந்திருந்து மணமேடையில் எழுந்தருளுவர். இதனை தொடர்ந்து சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும், மீனாட்சியம்மனும் மணக்கோலத்தில் தனித்தனி வாகனங்களில் மேடையில் எழுந்தருளவுள்ளனர்.
திருக்கல்யாண விருந்து
ஒரு பக்கம் கல்யாண வேலை பிசியாக இருக்கும் நேரத்தில் கல்யாண விருந்து இன்று முதல் நாள் காலை முதலே துவங்கி விட்டது. நாளை காலை 7 மணி முதல் 3 மணி வரை விருந்து அளிக்கப்படும். இதற்காக டன் கணக்கில் காய்கறிகள், பலசரக்கு ஜாமான்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி மெகா சமையல் ஏற்பாடு செய்து வருகின்றனர். இதனை பழமுதிர்ச்சோலை திருவருள் டிரஸ்ட் ஏற்பாடு செய்து வருகின்றனர். சிம்மக்கல் பகுதியில் உள்ள சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் பந்தல் அமைக்கப்பட்டு பெண்கள் காய்கறி நறுக்கினர். நாளை கற்கண்டு சாதம், லெமன் சாதம், வெஜ் புலாவ், சாம்பார் சாதம் என 6 வகை சாதமும் 2 வகை இனிப்பும், 2 வகை காய்கறி கூட்டும் வழங்கப்பட உள்ளது. இதற்காக பணி இன்று விறு விறுப்பாக நடைபெற்றது. பெண்கள் மகிழ்ச்சியுடன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். 27வது ஆண்டாக இந்த அன்னதான விருந்து நடைபெறுவது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்கவும்




















