மேலும் அறிய
Advertisement
Karuppasamy statue: மதுரையில் நாயக்கர் காலத்தை சேர்ந்த கருப்பசாமி சிலை கண்டெடுப்பு
நெற்றியில் திருமண், மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை ஓங்கிய கையில் வீச்சரிவாள், மறு கையில் கதை, சங்கு முழங்காலுக்கு கீழே வருமளவில் இடுப்பில் கச்சை ஆகியவற்றோடு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மதுரை சிறுதூர், கண்ணனேந்தல் பகுதிக்கு உட்பட்ட பறையாத்திகுளம் கண்மாய் அருகே பழங்கால கருப்பசாமி சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக தண்ணீரில் மூழ்கிக் கிடந்த இந்த சிலை கண்ணனேந்தல் கிராமத்தை சேர்ந்த பொன் பாலகிருஷ்ணன், சி.எஸ்.ஜெகநாதன், பிரகாஷ், முத்துராமன் என்பவர்கள் கண்ணில் பட்டுள்ளது. இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் அளித்து மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்த சிலை குறித்து பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளர் து.முனீஸ்வரன் அவர்களிடம் கேட்டோம்...," தமிழ்நாட்டின் கிராமங்களில் பரவலாக காணப்படுகின்ற வழிபாட்டு முறையில் முக்கியமானவை கருப்பசாமி வழிபாடு. குறிப்பாக சிறுதெய்வ வழிபாட்டில் நாட்டார் வழக்கு களில் குறிப்பிடுவதுண்டு. கிராம காவல் தெய்வமாக வழிபாடுகளில். இவரைக் கருப்பசாமி என்றும், கருப்பன் என்றும், கருப்பணசாமி என்றும் வேறு சில பெயர்களிலும் அழைப்பதுண்டு. இவர் குடிகொண்டிருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். பொதுவாகப் பெண் தெய்வங்களின் காவல் தெய்வமாக அவர் உள்ளார். விளைநிலங்களின் காவல் தெய்வமாக நாட்டுப்புற மக்கள் கருப்பசாமி வழிபடுகின்றனர். விளைநிலத்தின் ஒரு பகுதியில் மரத்தடியில் நடப்பட்ட கல்லை கருப்பன் என்று கருதி ஆண்டுக்கொருமுறை சேவலைப் பலியிட்டு வழிபடுவது வழக்கம் உண்டு.
நம்பிக்கை
கருப்புசாமி, கருப்பாயி என்னும் பெயர்களைத் தமிழர்கள் தம் குழந்தைகளுக்குச் சூட்டுவது வழக்கம். இவை இந்தத் தெய்வத்தை அழைக்கும் பெயர்கள். 'காத்து கருப்பு அண்டாது' எனக் கூறி இருளில் செல்வோருக்கு குதிகாலின் பின்புறம் கரியை குழைத்துப் பூசி அனுப்பும் பழக்கம் இருந்து வந்தது. இந்த வழக்கில் 'கருப்பு' என்னும் சொல் பேயை உணர்த்தும். கருப்பு என்னும் சொல்லுக்கு வறுமை, பஞ்சம் என்னும் பொருட்களும் உண்டு. கருப்பனசாமி என்னும் பெயர் கருப்பசாமி எனவும் வழங்கப்படுகின்றது.
சிலை உருவம்
சுமார் 2 அடி கொண்ட கண்டறியப்பட்ட இந்த சிலை நின்ற கோலத்தில் தலையில் பெரிய தலைப்பாகை (உருமால்), நெற்றியில் திருமண், மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை ஓங்கிய கையில் வீச்சரிவாள், மறு கையில் கதை, சங்கு முழங்காலுக்கு கீழே வருமளவில் இடுப்பில் கச்சை ஆகியவற்றோடு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் வடிவ அமைப்பை பொறுத்து நாயக்கர் காலம் சேர்ந்தவையா இருக்கலாம். இந்த சிலை குறித்து முழுமையான ஆய்வு செய்த பின்னர் முழு தகவல்கள் பெற முடியும் என்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் -Vinayagar Chaturthi 2023: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. சிலைகள் முன்பு பட்டாசு வெடிக்கத் தடை - காவல்துறை உத்தரவு
மேலும் செய்திகள் படிக்க கிளிக் செய்யவும் - தனது தொகுதியை புறக்கணித்தால் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய தயங்க மாட்டேன் - ஆர்.பி.உதயகுமார்
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வணிகம்
தமிழ்நாடு
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion