மேலும் அறிய

தோண்டத் தோண்ட கிடைத்த ஐம்பொன் சிலைகள் - சீர்காழி பெரிய கோயிலில் பரபரப்பு!

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் 22 ஐம்பொன் சிலைகள்,55 பீடம் மற்றும் 100 க்கும் மேற்ப்ட்ட செப்பேடுகள், பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புராதண சிறப்பு வாய்ந்த மிகவும் பழமையான திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர்  திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14 வது தலமான இக்கோயில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது. இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

தோண்டத் தோண்ட கிடைத்த ஐம்பொன் சிலைகள் - சீர்காழி பெரிய கோயிலில் பரபரப்பு!

சீர்காழியில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து கோயிலில் அம்பாளிடம் ஞானப்பால் அருந்தியதால் ஞானம் பெற்று தனது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை அருளிய திருஞானசம்பந்தருக்கு இக்கோயில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது. தற்போது 32 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்வதற்காக  சட்டைநாதர் கோயிலை புதுப்பிக்கும் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் கும்பாபிஷேக விழா வரும் மே மாதம் 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. இருபதாம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு 22 -ஆம் தேதி பரிவார மூர்த்தி களுக்கு கும்பாபிஷேகமும், 24 -ஆம் தேதி காலை 9 மணி முதல் 10:30 மணிக்குள் பிரம்மபுரீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது. 

Ponniyin Selvan 2: சோழர்களுடன் விமானத்தில் பயணித்த பூங்குழலி... ப்ரொமோஷன் பணிகளைத் தொடங்கிய பொன்னியின் செல்வன் படக்குழு!

தோண்டத் தோண்ட கிடைத்த ஐம்பொன் சிலைகள் - சீர்காழி பெரிய கோயிலில் பரபரப்பு!

இந்நிலையில் யாகசாலை அமைப்பதற்காக மண் எடுக்க மேற்கு கோபுர வாயிலில் கோயில் உட்புறத்தில் ஜேசிபி இயந்திரம் கொண்டு பள்ளம் தோன்டியபோது 2 அடியில் புதைந்திருந்த ஐம்பொன் சிலைகளான விநாயகர், முருகர், வள்ளி, தெய்வானை, சோமஸ்கந்தர், அம்பாள், பூர்ண புஷ்கலா அய்யனார், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட 2 அடி முதல் அரை அடி வரை உள்ள 22 ஐம்பொன் சிலைகளும், மேலும் 100க்கும் மேற்ப்பட்ட திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தேவார செப்பேடு ஆகியவை கண்டெடுக்கப்பட்டது. தகவல் அறிந்த அதனை தருமபுர ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியர் சுவாமிகள் நேரில் பார்வையிட்டு அவைகள் எந்த காலத்துக்குரிய சிலைகள் என கேட்டறிந்தார்.

மாணவர்களுக்கு நடந்த கொடூரம்... பெண் ஆசிரியர்கள் செய்த காரியம்... அமெரிக்காவை உலுக்கும் பாலியல் துன்புறுத்தல்கள்..!

தோண்டத் தோண்ட கிடைத்த ஐம்பொன் சிலைகள் - சீர்காழி பெரிய கோயிலில் பரபரப்பு!

மேலும் இந்து சமய அறநிலையத் துறையினர், வருவாய் துறையினரும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரையில் இதுபோன்று எங்கும் கிடைக்காத வகையில் ஒரே இடத்தில் 22  ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டதால் சீர்காழி பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அனைவரும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஆய்வுக்கு பிறகே முழ விவரம் தெரியவரும்.

MI vs KKR Highlights: வெங்கடேஷ் ஐயரின் சதம் வீண்; 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி..!

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamilnadu RoundUp: விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு தீவிர எதிர்ப்பு, மதுரையில் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu RoundUp: விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு தீவிர எதிர்ப்பு, மதுரையில் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilnadu RoundUp: விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு தீவிர எதிர்ப்பு, மதுரையில் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu RoundUp: விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு தீவிர எதிர்ப்பு, மதுரையில் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
Embed widget