கரூர் ஸ்ரீ வெள்ளி அம்பல ஈஸ்வரர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
கரூர் வெள்ளியணை ஸ்ரீ வெள்ளி நாயகி சமேத ஸ்ரீ வெள்ளி அம்பல ஈஸ்வரர், ஸ்ரீ விநாயகர், கிழக்கு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பகவதி அம்மன் ,ஸ்ரீ தங்கம்மாள் சுவாமிகள் ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கரூர் வெள்ளியணை ஸ்ரீ வெள்ளி நாயகி சமேத ஸ்ரீ வெள்ளி அம்பல ஈஸ்வரர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கரூர் மாவட்டம் , கரூர் வட்டம் , வெள்ளியணை பகுதியில் அருள்மிகு ஸ்ரீ வெள்ளி நாயகி சமேத ஸ்ரீ வெள்ளி அம்பல ஈஸ்வரர், அருள்மிகு ஸ்ரீ விநாயகர், கிழக்கு அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ தங்கம்மாள் சுவாமிகள் ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயம் அருகே பிரத்தியேக யாகசாலை அமைத்து முதல் கால யாக வேள்வி, இரண்டாம் கால யாக வேள்வி, மூன்றாம் கால யாக வேள்வி என நான்கு கால யாக வேள்வி நடைபெற்றது. யாகசாலைக்கு சிவாச்சாரியார்கள் மகா தீபாராதனை கட்டினர். மேல தாளங்கள் முழங்க, வான வேடிக்கையுடன் நான்கு காலையாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்த கலசத்தை ஆலயத்தின் சிவாச்சாரியார் தலையில் சுமந்தவாறு கோபுர கலசம் வந்தடைந்தனர்.
ஆலயத்தின் தலைவர் இன்ஜினியர் ஜெயபால் பச்சைக்கொடி காட்ட, கூடியிருந்த பக்தர்கள் ஓம் நமச்சிவாயா, நமச்சிவாயா என்ற கோஷங்கள் எழுப்பிய நிலையில் கோபுர கலசத்திற்கு புனித தீர்த்தம் ஊற்றப்பட்டது. கோபுர காலத்திற்கு சந்தன பொட்டிட்டு , வண்ண மாலைகள் அணிவித்து , தொடர்ச்சியாக மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் மூலவரான அருள்மிகு ஸ்ரீ வெள்ளி நாயகி சமேத ஸ்ரீ வெள்ளி அம்பல ஈஸ்வரர் சுவாமிக்கு நான்கு கால யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது . கூடியிருந்த பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டு, விபூதி பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
வெள்ளியணை அருள்மிகு ஸ்ரீ வெள்ளி நாயகி சமேத ஸ்ரீ அம்பல ஈஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவை காண கருர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய தலைவர் இன்ஜினியர் ஜெயபால் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர். கும்பாபிஷே விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அன்னதானமும் நடைபெற்றது. கும்பாபிஷேக விழா நிகழ்ச்சியில் வெள்ளியணை போலீசார் பாதுகாப்படியில் ஈடுபட்டிருந்தனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சிறப்பு வாகன வசதியும் கரூர் பேருந்து நிலையத்திலிருந்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.