கரூர் முத்து மாரியம்மன் கம்பம், பகவதி அம்மன் கரகம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்வு
கரூர் தான்தோன்றி மலை குடிகொண்டு அருள் பாலித்து வரும் ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு கடந்த வாரம் கம்பம் போடும் நிகழ்வுடன் விழா சிறப்பாக தொடங்கியது.
கரூர் தான்தோன்றி மலை முத்து மாரியம்மன் கம்பம், பகவதி அம்மன் கரகம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்வு ஏராளமான பெண் பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
கரூர் மாவட்டம், தான்தோன்றி மலைப் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு கடந்த வாரம் கம்பம் போடும் நிகழ்வுடன் விழா சிறப்பாக தொடங்கியது. அதை தொடர்ந்து நாள்தோறும் உற்சவர் முத்துமாரியம்மன் பல்வேறு வாகனத்தில் திரு வீதி உலா காட்சி அளித்தார்.
இந்நிலையில் பங்குனி மாத திருவிழாவின் முக்கிய நிகழ்வான அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கம்பமும், அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் கரகமும் அமராவதி ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயத்தின் பூசாரி அருள் வந்தவுடன் கம்பத்தையும், பகவதி அம்மன் ஆலய பூசாரி கரகத்தையும் எடுத்து ஆலய வலம் வந்த பிறகு பிரத்தேக ரத வாகனத்தில் சுவாமியை கொலுவிருக்க செய்தனர்.
அதை தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க ஆலயத்தில் இருந்து புறப்பட்ட முத்துமாரியம்மன் கம்பம், பகவதி அம்மன் கரகம் முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு அமராவதி ஆற்றுக்கு வந்து அடைந்தது. நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் முளைப்பாரி ஏந்தியவாறு ஊர்வலமாக வந்தனர். அதைத் தொடர்ந்து அமராவதி ஆற்றில் முத்துமாரியம்மன் கரகம், பகவதி அம்மன் கம்பம் ஆற்றில் விடப்பட்டது.
நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர். தான்தோன்றி மலை முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பங்குனி மாத திருவிழாவில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.