சுடும் வெப்பத்தையும் பொருட்படுத்தாத பக்தர்கள்; காளிப்பனூர் பகவதி அம்மனுக்கு தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள்
நாளை ஆலயத்தில் முளைப்பாரி எடுக்கும் நிகழ்வு, அதைத் தொடர்ந்து முதல் கால யாக வேள்விகள் துவங்குகிறது.
கரூர் காளியப்பனூர் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் அஷ்டவந்தன மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கொடுமுடி ஆற்றில் இருந்து குதிரை, ஒட்டகத்தில் தீர்த்தம் கொண்டு வந்து ஆலயம் சேர்த்தனர்.
கரூர் தான்தோன்றி கிராமம் காளிப்பனூரில் குடிகொண்டு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ பழனியாண்டவர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வருகின்ற திங்கட்கிழமை நடைபெறுவதை ஒட்டி இன்று கொடுமுடி ஆற்றில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வண்ண சீருடை அணிந்து தீர்த்தம் கொண்டு வந்து கரூர் தான்தோன்றிமலை சுங்ககேட் ஆதி மாரியம்மன் ஆலயம் வந்தடைந்தனர்.
அதை தொடர்ந்து அங்கிருந்து 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் குதிரை, ஒட்டகம் முன் செல்ல பல்வேறு வண்ண கலை நிகழ்ச்சிகளுடன், வானவேடிக்கையுடன் தான்தோன்றி மலை முக்கிய சாலையில் வழியாக சுட்டெரிக்கும் வெயிலிலும் பொருட்படுத்தாமல் ஓம் சக்தி, பராசக்தி என்ற கோஷத்துடன் காளியப்பனூர் பகவதி அம்மன் ஆலயம் வந்தடைந்தனர். அதை தொடர்ந்து ஆலயம் வளம் வந்த பிறகு தாங்கள் கொண்டு வந்த தீர்த்தத்தை ஆலயத்தில் வைத்து ஸ்வாமி தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. கரூர் காளியப்பனூர் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய அஷ்டவந்தன மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று நடைபெற்ற தீர்த்தம் கொண்டு வரும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டை காளியப்பனூர் கொத்துக்காரர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். தொடர்ந்து நாளை ஆலயத்தில் முளைப்பாரி எடுக்கும் நிகழ்வு, அதைத் தொடர்ந்து முதல் கால யாக வேள்விகள் துவங்குகிறது என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
சோபகிருத்து வருடம் மாசி மாதம் 12 ஆம் தேதி 24.02.2024 சனிக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 10 மணிக்குள் முதல் கால யாக பூஜை நடைபெறுகிறது. அந்த பூஜையில் விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், வாஸ்து சாந்தி என முதல் கால யாக வேள்வி பூஜையில் இறுதியாக பூர்ணாகஹீதி நடைபெற்று, அதன் தொடர்ச்சியாக மகா தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்க உள்ளனர். அதை தொடர்ந்து மாசி மாதம் 13-ஆம் தேதி 25.02.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணிக்கு மேல் மதியம் 12 மணிக்குள் இரண்டாம் கால யாக பூஜையில் மங்கள இசையுடன் திருமுறை பாராயணம், மூர்த்தி ஹோமங்கள் உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெற்று இறுதியாக பூர்ணாஹீதி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து அனைத்து யாக குண்டத்திற்கும் மகா தீபாராதனை நடைபெற்று பிரசாதம் வழங்குதல். அதை தொடர்ந்து மாலை 4 மணிக்கு மேல் 6 மணிக்குள் கோபுரம் கலசம் வைத்தல் மற்றும் கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
அதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் இரவு 9 மணிக்குள் மூன்றாம் கால யாக பூஜையில் மங்கள இசையுடன் திருமுறை பாராயணம் மூலஸ்தான தீபம் ஏற்றுதல் தொடர்ந்து மூன்றாம் கால யாக பூஜையில் மூல மந்திர ஹோமங்கள் நடைபெற்று தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெறும் எனவும் அதைத்தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் 10:30-க்குள் அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. என தெரிவித்தனர். மேலும் மாசி மாதம் 14 ஆம் தேதி 26.02.2024 திங்கட்கிழமை அதிகாலை 04.30 மணிக்கு மேல் 06.30 மணிக்குள் நான்காம் கால யாக பூஜையில் மங்கள இசை உடன், திருமுறை பாராயணம், மூல மந்திர மூர்த்தி ஹோமங்கள் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக காலை 6:30 மணிக்கு மேல் 7:30 மணிக்குள் நாடி சாந்தனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று குண்டத்திற்கு மகா தீபாராதனை நடைபெறும் அதை தொடர்ந்து யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்த குடங்கள் கோபுர கலசம் வந்தடைந்த பிறகு மகா கும்பாபி விழாவும் அதை தொடர்ந்து மூலவர் பகவதி அம்மன் மற்றும் பழனியாண்டவர் உள்ளிட்ட பதிவார தெய்வங்களுக்கு பூஜை தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.