மேலும் அறிய

அரவக்குறிச்சியில் 1000 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கண்டுபிடிப்பு

பல்லவ மன்னர்கள் பெரும்பாலோனர் தீவிர சைவ பக்தர்களாக இருந்துள்ளனர். அமராவதியின் ஆற்றங்கரையின் இரு புறமும் சிவனுக்கு கோயிலை எழுப்பி அவர்களின் பக்தியை வெளிப்படுத்தினர்.

கரூர் மாவட்டம் , பரமத்தி ஒன்றியம் , நஞ்சைக்காளகுறிச்சி கிராமத்தில் ராமசாமி என்பவரின் தோட்டத்தில் பழைய சிற்பங்கள் இருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து , குஜிலியம்பாறையை சேர்ந்த வரலாற்று ஆர்வலரும்  ஆசிரியரியருமான த. சிவசங்கர் , ஜெகதினேஷ் , கரூர் சுப்ரமணியன், தரகம்பட்டி சிவநாயனார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அரவக்குறிச்சியில் 1000 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கண்டுபிடிப்பு

 அப்பகுதியில் கி.பி 950 வரை பல்லவப் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்து வந்துள்ளது. பல்லவ மன்னர்கள்  பெரும்பாலோனர் தீவிர சைவ பக்தர்களாக இருந்துள்ளனர். அமராவதியின் ஆற்றங்கரையின் இரு புறமும் சிவனுக்கு கோயிலை எழுப்பி அவர்களின் பக்தியை வெளிப்படுத்தினர். கட்டிய கோயில்கள் அனைத்தும் கற்றளிகளாக கட்டினர். அழகான சிற்பங்களையும் செதுக்கினர். இங்கு ஆவுடையுடன் கூடிய லிங்கம் , சண்டிகேஸ்வரர் , நந்தி , ஆகிய சிற்பங்கள் மட்டும் கிடைத்துள்ளது. சண்டிகேஸ்வரர் சிற்பம் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சியில் 1000 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கண்டுபிடிப்பு

தலையில் கிரீட மகுடமும் , இரண்டு காதுகளிலும் மகர குண்டலங்களும் , கழுத்தில் ஆபரணங்களும் , மார்பில் முப்புரி நூலும் காணப்படுகிறது.  இந்த சிற்பத்தின் வலது கையில் மழுவோடும் , இடது கையை ஊறு ஹஸ்தத்திலும் வைத்துள்ளார். ஊறு என்பது தொடை என்பதாகும்.  இந்த சிற்பம் 2.1/2 அடி உயரம் , 1.1/2 அடி அகலத்திலும் , சிவலிங்கம் 4.4 அடி உயரத்திலும் , நந்தி 2.3/4 அழகாய்  செதுக்கப்பட்டுள்ளது.   

அரவக்குறிச்சியில் 1000 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கண்டுபிடிப்பு

இங்கு ஒரு மிகப்பெரிய சிவன் கோயில் இருந்திருக்கலாம். கால ஓட்டத்தில் கோயில் அழிந்திருக்கலாம். இன்னும் நிறைய சிற்பங்கள் காணாமல் போய் விட்டது. கல்வெட்டுகள் எதுவும் கிடைக்காததால் இக்கோயில் எந்த அரசரின் கால கட்டத்தில் கட்டப்பட்டது என்பதை அறிய முடியவில்லை. ஆனால் சிற்பத்தின் அமைவை வைத்துப் பார்க்கும் பொழுது  பல்லவர்களின் சிற்பக்கலை என உறுதியாக சொல்லலாம். மேலும் இப்பகுதியில் ஆய்வு செய்தால் இது போன்ற பல விசயங்கள் இன்னும் வெளிப்படும் எனத் தெரிகிறது.

அரவக்குறிச்சியில் 1000 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கண்டுபிடிப்பு

கரூர் , திருச்சி மற்றும் கோவை மாவட்ட சிவனடியார்கள் சார்பில் திருப்பணி பீடம் கட்டப்பட்டு மூன்று சிற்பங்களும் நிறுவப்பட்டு , பூஜைகள் நடைபெற்றது . மலைக்கோவிலூர் அருகே அரசம்பாளையத்தில் ஒரு மாதத்திற்கு முன்பாக 7 அடி சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது  நஞ்சை காளகுறிச்சி 4.4 அடி சிவன் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி

Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்

ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 

ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
Thalapathy Rerelease :  ரஜினி பிறந்தநாளுக்கு செம ட்ரீட்...மீண்டும் வெளியாகிறது தளபதி

"நீங்கள் வரும்போது மட்டும்தான் உணவு நன்றாக இருக்கும்" - ஆட்சியரிடம் புகார் அளித்த பழங்குடி மாணவர்கள்
நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!

தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!

Embed widget