கரூரில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு காயத்ரி தேவிக்கு அபிஷேக மற்றும் அலங்காரம்
பங்குனி அமாவாசையை முன்னிட்டு விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் உள்ள காயத்ரி தேவிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேக மற்றும் அலங்காரம்.
தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு காயத்ரி தேவிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு காயத்ரி தேவிக்கு என்னைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், குங்குமம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து ஆலயத்தில் சிவாச்சாரியார் காயத்திரி தேவிக்கு பட்டாடை உடுத்தி , வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.
பங்குனி மாத அமாவாசை சிறப்பு பூஜையை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.
தேர் வீதி ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு தங்க தேரோட்டம்.
தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று இரவு ஆலய மண்டபத்தில் இருந்து தங்க தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. மாரியம்மன் தங்க தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று, உற்சவர் மாரியம்மனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து தங்க ரத தேரில் சுவாமி யை கொழுவிக்க செய்தனர்.
தொடர்ந்து மேல தாளங்கள் முழங்கு ஆலயத்தின் பூசாரி உற்சவர் மாரி அம்மனுக்கு கற்பூர தீபாராதனை காட்டிய பிறகு பக்தர்கள் தேரை படம் பிடித்து இழுத்தனர். மாரியம்மன் ஆலய மண்டபத்தில் இருந்து புறப்பட்ட மாரியம்மன் தங்க தேரோட்டம் ஆலய நான்கு வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தது. அதை தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்ட பிறகு கூடி இருந்த அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் பங்குனி மாத தங்க தேரோட்ட நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.