Tiruvannamalai Maha Deepam LIVE: ஏற்றப்பட்டது மகா தீபம்.. திருவண்ணாமலையிலிருந்து சிறப்பு நேரலை! இங்கே கிளிக் பண்ணுங்க!
Tiruvannamalai Karthigai Deepam 2022 LIVE: கார்த்திகை மகா தீபம் திருவண்ணாமலையிலிருந்து சிறப்பு நேரலையை காண ஏபிபி பக்கத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Karthigai Deepam 2022 LIVE: 2668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் உள்ள பிரமாண்ட கொப்பரையில் 650 கிலோ நெய் ஊற்றி மகாதீபம் ஏற்றப்பட்டது.
சரியாக மாலை 6.01 மணிக்கு தீபம் ஏற்றப்பட்ட நிலையில், 14 கிலோமீட்டம் தூரம் கொண்ட கிரிவலப் பாதையில் பல லட்சம் பக்தர்கள் விண்ணைமுட்டும் அளவிற்கு அரோகரா கோஷம் எழுப்பி வணங்கினர்.
செம்பினாலான 6 அடி உயர கொப்பரையில் 3,500 கிலோநெய், 1000மீ, காடா துணியிலான திரியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இன்று திருவண்ணாமலை மலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் 11 நாட்களுக்கு எரியும் வகையில் காட்சி அளிக்கும். சிவபெருமான் அக்னிப் பிழம்பாக காட்சி கொடுத்ததால் திருவண்ணாமலை மலை உச்சியில் ஆண்டுதோறும் மகாதீபம் ஏற்றப்படுகிறது. தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலை முழுவதும் சுமார் 12,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கார்த்திகை மகா தீபம் திருவண்ணாமலையிலிருந்து சிறப்பு நேரலை...
தீபாவளி பண்டிகைக்குப் பிறகு அனைத்து மக்களாலும் விமரிசையாக கொண்டாடப்படும் திருக்கார்த்திகை திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் உலக பிரசித்தி பெற்ற பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா மிக முக்கியமானது. இந்த கோயிலில் கடந்த நவம்பர் 27 ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தீபத்திருவிழா தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது.
பத்து நாட்கள் நடைபெற்று வந்த இந்த விழாவில் காலை உற்சவத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகர் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதேபோன்று இரவு பஞ்ச மூர்த்திகளான விநாயகர், முருகர், உண்ணாமுலையம்மன் உடனாகிய அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
விழாவின் முக்கிய விழாவான 10 நாள் திருவிழா இன்று அதிகாலை சுவாமி அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் அதிகாலை 4 மணிக்கு ஆலயத்தின் கருவரை முன்பு உள்ள பிரதோஷ நந்தி சிலை அருகில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷத்துடன் பரணி தீபத்தை சிவாச்சாரியார் சரவணன் ஏற்றினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

