மேலும் அறிய

Kanda Sasti 2024: கந்தசஷ்டி விழா; சிக்கல் சிங்காரவேலவர் ஆலய திருத்தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

சிங்காரவேலவருக்கு முத்து முத்தாக வியர்வை சிந்தும் காட்சி வேறு எங்கும் காண முடியாத அரிய காட்சியாகும்.

நாகப்பட்டினம்: கந்தசஷ்டி பெருவிழாவை முன்னிட்டு நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் ஆலய திருத்தேரோட்டம் நடைபெற்றது. இந்து சமய அறநிலை துறை இணை ஆணையர் குமரேசன் தேரினை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். இவ்விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
 
நாகை மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலர் ஆலயம் புகழ்பெற்ற முருகன் ஆலயமாகும். சிக்கலில் வேல்வாங்கி செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்தான் முருகன் என்று கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க ஆலயத்தின் சூரசம்ஹார விழா கடந்த 2ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான  தேரோட்டம் காலை நடைபெற்றது. 

Kanda Sasti 2024: கந்தசஷ்டி விழா; சிக்கல் சிங்காரவேலவர் ஆலய திருத்தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
 
இதனையொட்டி இன்று காலை முருகபெருமானுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து முருகபெருமான் வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது வாத்தியங்கள் முழங்க ஆலயத்தின் நான்கு ரதவீதிகளில் திருத்தேர் வலம் வந்து தேரோட்டம் நடைபெற்றது. இந்து சமய அறநிலை துறை இணை ஆணையர் குமரேசன் தொடங்கி வைத்த தேரோட்டத்தில் நாகை, கீழ்வேளுர், சிக்கல் மற்றும் சுற்று வட்டாரப் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 
 
இன்று இரவு நடைபெரும் சிக்கல் சிங்கார வேலவர் ஆலயத்தில் அன்னை வேல் நெடுங்கண்ணியிடம் சூரனை சம்ஹாரம் செய்ய சிங்காரவேலவர் வேல் வாங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. அப்போது சிங்காரவேலவருக்கு முத்து முத்தாக வியர்வை சிந்தும் காட்சி வேறு எங்கும் காண முடியாத அரிய காட்சியாகும். இவ்விழாவினை முன்னிட்டு நாகப்பட்டினம் மற்றும் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Donald Trump: என் ஆட்சி அமெரிக்காவின் பொற்காலமாக இருக்கும்: டொனால்ட் ட்ரம்ப் உணர்ச்சிகரப் பேச்சு!

பாத்ரூம் ஏன் இவ்வளவு அசுத்தமா இருக்கு! அதிகாரிகளுக்கு டோஸ்விட்ட துணை முதல்வர் உதயநிதி
பாத்ரூம் ஏன் இவ்வளவு அசுத்தமா இருக்கு! அதிகாரிகளுக்கு டோஸ் விட்ட துணை முதல்வர் உதயநிதி
US Election Result 2024: மோடியின் நெருங்கிய நண்பர், மீண்டும் அமெரிக்க அதிபராகிறார் டொனால்ட் ட்ரம்ப் - 277 வாக்குகளை பெற்று வெற்றி

Breaking News LIVE 6th NOV 2024: டொனால்ட் ட்ரம்ப் வெற்றி.. ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
Breaking News LIVE 6th NOV 2024: டொனால்ட் ட்ரம்ப் வெற்றி.. ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Theft CCTV | ’’மதுரையை மிரட்டும் குரங்கு குல்லா கொள்ளையர்கள்’’நடுங்கவைக்கும் CCTV காட்சிகள்Karur BJP Members Join DMK : தட்டித்தூக்கிய செந்தில் பாலாஜி ஷாக்கான அண்ணாமலை ஸ்டாலின் போடும் கணக்குPawan Kalyan Controversy Speech | ’’நிர்வாகம் சரியில்லை!’’பவன் கல்யாண் பகீர்! அதிரும் ஆந்திராTVK Vijay warning cadres | ”கட்சிக்குள் கருப்பு ஆடு”சாட்டையை சுழற்றும் விஜய் கலக்கத்தில் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Donald Trump: என் ஆட்சி அமெரிக்காவின் பொற்காலமாக இருக்கும்: டொனால்ட் ட்ரம்ப் உணர்ச்சிகரப் பேச்சு!
Donald Trump: என் ஆட்சி அமெரிக்காவின் பொற்காலமாக இருக்கும்: டொனால்ட் ட்ரம்ப் உணர்ச்சிகரப் பேச்சு!
பாத்ரூம் ஏன் இவ்வளவு அசுத்தமா இருக்கு! அதிகாரிகளுக்கு டோஸ்விட்ட துணை முதல்வர் உதயநிதி
பாத்ரூம் ஏன் இவ்வளவு அசுத்தமா இருக்கு! அதிகாரிகளுக்கு டோஸ் விட்ட துணை முதல்வர் உதயநிதி
US Election Result 2024: மோடியின் நெருங்கிய நண்பர், மீண்டும் அமெரிக்க அதிபராகிறார் டொனால்ட் ட்ரம்ப் - 277 வாக்குகளை பெற்று வெற்றி
US Election Result 2024: மோடியின் நெருங்கிய நண்பர், மீண்டும் அமெரிக்க அதிபராகிறார் டொனால்ட் ட்ரம்ப் - 277 வாக்குகளை பெற்று வெற்றி
Breaking News LIVE 6th NOV 2024: டொனால்ட் ட்ரம்ப் வெற்றி.. ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
Breaking News LIVE 6th NOV 2024: டொனால்ட் ட்ரம்ப் வெற்றி.. ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
Watch Video : அஞ்சல பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் வைப் செய்த சூர்யா...வைரல் வீடியோ

Fact Check: 6 ஆண்டுகளாக வெளியாகாத தேர்வு முடிவுகள்; டிஎன்பிஎஸ்சி காரணமா? உண்மை என்ன?

TNCMTSE 2024: மாதம் ரூ.1000 உதவித்தொகை; வெளியான முதலமைச்சர் திறனாய்வு தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?

TN Medical Facility: தாய்மார்கள் ஷாக்.. “பேறுகால இறப்புகளை தடுக்க வார் ரூம் உதவாது ” - தமிழக அரசு மருத்துவர்கள் எச்சரிக்கை

Embed widget