மேலும் அறிய
Advertisement
திருப்பதிக்கு டஃப் கொடுக்கும் அத்திவரதர் கோயில்.. 2 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்..
திருப்பதியை போன்று இரண்டு மணிநேரம் முதல் மூன்று மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
தொடர் விடுமுறை எதிரொலி காரணமாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த மக்கள் கூட்டம். திருப்பதியை போன்று மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
தொடர் விடுமுறை எதிரொலி
சனி, ஞாயிறு சுதந்திர தினம் என தொடர் விடுமுறை காரணமாக நாடு முழுவதும் மக்கள் வெளியூர்களுக்கும் சுற்றுலா தளங்களுக்கும் கோவில்களுக்கும் தங்கள் குடும்பத்தினருடன் பயணம் மேற்கொண்டு உள்ளனர். அந்த வகையில் தொடர் விடுமுறையை ஒட்டி கோவில் நகரமான காஞ்சிபுரத்திற்கு வெளியூர், வெளிமாவட்டம், வெளி மாநிலம் என ஏராளமான மக்கள் வரத் தொடங்கி உள்ளனர்.
காலை முதல் நீண்ட வரிசை
உலக பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோவில் என அறியப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ( kanchipuram varadaraja perumal ) பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள், கோவிலில் உள்ள பெருந்தேவி தாயார் சன்னதி, லஷ்மி நரசிம்மர் சன்னதி, அத்திகிரி மலை மீது உள்ள வரதராஜ பெருமாள் மற்றும் தங்க பல்லி, வெள்ளி பல்லி உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகமாக உள்ள காரணத்தால், திருப்பதியை போன்று சுமார் இரண்டு மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் வரை குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஏராளமான பொதுமக்கள் தங்கள் சொந்த வாகனங்களிலேயே கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளதால், சன்னதி வீதிகளில் ஏராளமான கார்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு உள்ளது.
காஞ்சி நகர் முழுவதும் நெரிசல்
இதேபோன்று ஆடி மாதம் நிறைவடைய உள்ளதால் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள, அம்மன் கோவில்களில் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் பொங்கல் வைத்து சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் வழக்கத்தை விட அதிக பொதுமக்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் சாலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
விழுப்புரம்
தமிழ்நாடு
சேலம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion