மேலும் அறிய
Advertisement
சர்ச்சில் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்..! இதுதாங்க எங்க "தமிழ்நாடு " ..!
எழுபது ஆண்டு கால பழமை வாய்ந்த திருப்பருத்திகுன்றம் சிஎஸ்ஐ திருச்சபையில் உழவர் திருநாள் பொங்கல் சிறப்பு பிரார்த்தனை வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
"மாட்டு பொங்கல் விழா"
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை உலகெங்கும் உள்ள தமிழர்கள் கொண்டாடி முடிவுற்ற நிலையில், இன்று விவசாய பெருமக்களை போற்றும் வகையில் உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது. விவசாயத்திற்கு பெரிதும் உதவும் கால்நடைகளை கௌரவிக்கும் வகையில் இத்திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் கால்நடைகளை சுத்தம் செய்து வண்ணம் தீட்டி சிறப்பு பொங்கல் இட்டு படையலிட்டு வழிபடுவது வழக்கம்.
"விவசாயிகளுக்கு கௌரவம் "
இத்திருநாள் குறிப்பாக கிராமங்களில் அதிக அளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, அனைவரும் ஒருங்கிணைந்து கொண்டாடுவதும், மாட்டு வண்டிகளில் கிராம வீதிகளில் உற்சாகத்துடன் பயணம் செய்து கொண்டாட்டங்களில், இன்று வரை இதனை மறக்காமல் கடைபிடித்து வருகின்றனர். இவர்கள் மட்டுமல்லாது உலகத்தில் உள்ள அனைவரும் ஒரு நிமிடமாவது விவசாய பெருமக்களை கௌரவப்படுத்தும் வகையில் நிகழ்வுகளை செய்து வருகின்றனர். அவ்வகையில் காஞ்சிபுரம் அடுத்து திருப்பருத்திகுன்றம் பகுதியில் அமைந்துள்ள 80 ஆண்டுகால, சிஎஸ்ஐ நல்ல மேய்ப்பர் திருச்சபை இயங்கி வருகிறது. அருகிலுள்ள பகுதியில் உள்ள நபர்கள் இச்திருச்சபையில் உறுப்பினராக, இணைத்துக் கொண்டு வழிபட்டு வருகின்றனர்.
" திருச்சபை சார்பில் கொண்டாட்டம் "
இந்நிலையில் பொங்கல் திருநாளை திருச்சபை சார்பில் கொண்டாட முடிவெடுத்து குறிப்பாக உணவளிக்கும் உழவர்களை, போற்றும் வகையில் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. தேவாலயங்களில் கரும்புகள் தோரணம் கொண்டு வாயில்களை அலங்கரித்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
உழவர் திருநாளை ஒட்டி சிறப்பு பொங்கல் இட்டு திருச்சபை குழந்தைகள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஆயர் சாமுவேல் தினகரன் சிறப்பு இறை வழிபாடு பிரார்த்தனை மேற்கொண்டார். இதில் கலந்து கொண்ட அனைவரும் உலக மக்கள் அனைவரும் சமத்துவத்துடன் பழகி அனைவரும் நலம் வளம் பெற்று வாழ இறைவனை வேண்டினர். இதனைத் தொடர்ந்து பிரான்சிஸ் குழுவினரின் கிராமிய பாடல்கள் இசை நிகழ்ச்சியாக நிகழ்த்தப்பட்டு உழவர்களின் பெருமையை பாட்டு , இசையின் மூலம் பாடி மகிழ்வித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
சென்னை
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion