Hanuman Jayanti 2023: பலன்களை வாரி வழங்கும் அனுமன் ஜெயந்தி..! ஒவ்வொரு ராசிக்காரர்களும் சொல்ல வேண்டிய மந்திரங்கள் என்ன?
Hanuman Jayanti 2023: ஒவ்வொருவரின் ராசிக்கேற்ற அனுமன் மந்திரங்கள் மற்றும் அதன் நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.
ஆஞ்சிநேயரை விரதம் இருந்து வழிபட்டால், நினைத்தவைகள் நடக்கும்; சனி பகவானால் ஏற்படும் துன்பத்தை ஓரளவு குறைத்துக்கொள்ள நமக்கு வழிபிறக்கும் என்று நம்பப்படுகிறது.
அஞ்சனை மைந்தன்:
அனுமன் வாயு புத்திரன், அஞ்சனை மைந்தன் என்று அழைக்கப்படுகிறார். எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் அனுமன் அமைதியாக அமர்ந்து கொண்டிருப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கேசரி மைந்தன் ஆஞ்சநேயர் மார்கழி மாதம் அமாவாசை நாளில் மூல நட்சத்திர நாளில் பிறந்த நாளை அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. ஏப்ரல்-6 ஆம் தேதி ஆஞ்சநேய ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
ஆஞ்சநேய ஜெயந்தி:
ஆஞ்சநேய ஜெயந்தியன்று கோயில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்வது வழிபடுவது வழக்கமாகும். அன்றைய தினத்தில் ஆஞ்நேய கோயில்களில் கூட்டம் நிரம்பி வழியும். ஏராளமானோர் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவர்.
ஆஞ்சநேய ஜெயந்தி தினத்தில் உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள்:
மேஷம்
மேஷ ராசி அன்பர்கள், ‘ஓம் அங் அன்காரயாக நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள், ‘ஓம் ஹனுமந்தே நமஹ!’ என்ற மந்திரத்தை சொன்னால் நன்மை தரும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள், ராமாயணத்தின் சுந்தர காண்டத்தில் வரும் பாடல்களை படிக்கலாம். குறிப்பாக, அனுமன் "அதுலித-பால-தாமம் ஹேம்-ஷைலாப-தேஹம் தனுஜ-வன-க்ருஷானும் ஜ்ஞாநிநாம்-அக்ரகன்னியம். ஸகல-குன்ன-நிதானம் வானரான்னம்-அதிஷம் ரகுபதி-ப்ரிய-பக்தம் வாத-ஆத்மஜம் நமாமி" என்பதை படிக்கலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களே, அனுமனின் அருளைப் பெற, ’ஓம் ஆஞ்சநேயாய வித்மகே! வாயு புத்ராய தீமஹி! தன்னோ ஹனுமத் ப்ரசோதயாத்!” என்ற காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் ’ஓம் ஹன் ஹனுமந்தே ருத்ரமஹாய ஹம் பத்!’ என்ற மந்திரத்தை சொல்வதன் மூலம் சகல நன்மைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள், ராமாயணத்தின் சுந்தர காண்டத்தில் வரும் பாடல்களை படிக்கலாம். குறிப்பாக, அனுமன் "அதுலித-பால-தாமம் ஹேம்-ஷைலாப-தேஹம் தனுஜ-வன-க்ருஷானும் ஜ்ஞாநிநாம்-அக்ரகன்னியம். ஸகல-குன்ன-நிதானம் வானரான்னம்-அதிஷம் ரகுபதி-ப்ரிய-பக்தம் வாத-ஆத்மஜம் நமாமி" என்பதை படிக்கலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள், ‘ஓம் ஹனுமந்தே நமஹ!’ என்ற மந்திரத்தை சொன்னால் நன்மை தரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்கள், ‘ஓம் அங் அன்காரயாக நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள், ‘ ஓம் ஹனுமந்தே நமஹா!’ என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள், ‘ ஓம் நமோ ஹனுமந்தே ருத்ரவதரயா சர்வ சத்ரு சங்கராய சர்வ ரோகயா சர்வ வசிகரன் ராம்துதே! என்பதை சொல்ல வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள், ‘ ஓம் நமோ ஹனுமந்தே ருத்ரவதரயா சர்வ சத்ரு சங்கராய சர்வ ரோகயா சர்வ வசிகரன் ராம்துதே! என்பதை சொல்ல வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள், ‘ ஓம் ஹனுமந்தே நமஹா!’ என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
விரதம் கடைப்பிடிப்பது எப்படி?
நினைத்தவைகள் கை கூட, அனுமன் பிறந்தநாளன்று விரதம் இருப்பது பல மகிமையை தரும் வல்லமை படைத்தது என்று நம்பப்படுகிறது. அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு, ராம நாமம் சொல்லி அனுமனை வணங்க வேண்டும். அன்றைய தினம் உணவருந்தாமல், விரதம் இருக்க வேண்டும். அருகில் இருக்கும் ராமர், அனுமன் கோவிலுக்குச் சென்று அனுமனுக்கு துளசி மாலை மற்றும் வெற்றிலை மாலை கொடுத்து வழிபடலாம்.
வீட்டில் உள்ள அனுமன் படத்தை பொட்டு வைத்து வழிபடலாம். பொரி, பழம், அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர் போன்றவைகளை படைக்கலாம். முழு நேரமும் விரதம் இருக்க முடியாதவர்கள், மதிய வேளையில் உணவு எடுத்துக்கொள்ளலாம். இரவில் ராமநாமம், ஆஞ்சநேயர் சுலோகங்கள் கூறி வழிபட வேண்டும். மறுநாள் காலையில் துளசி தீர்த்தம் அருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.