மேலும் அறிய
Advertisement
ஏசுவின் பாதத்தில் முத்தமிட்ட கிறிஸ்தவர்கள்; தவக்கால விரதத்தை நிறைவேற்றி பிராத்தனை
ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் சிலுவையில் அறையப்பட்ட இயேசுநாதாரின் பாதத்தில் முத்தமிட்டு தங்களது தவக்கால வேண்டுதலை பிராத்தனையுடன் நிறைவேற்றி கொண்டனர்.
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி தேவாலயத்தில் நடைபெற்ற புனித வெள்ளி இறைவழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ஏசுவின் பாதத்தில் முத்தமிட்ட கிறிஸ்தவர்கள், தவக்கால விரதத்தை நிறைவேற்றி பிராத்தனை செய்தனர்.
இயேசு கிறிஸ்து உயிர்தொழுந்ததை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அந்நாளை இறைவழிபாட்டுடன் தொடங்குகின்றனர். இதையொட்டி நாகை மாவட்டம் உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நேற்று புனித வெள்ளி இறைவழிபாடு அனுசரிக்கப்பட்டது. திருப்பலியினை பேராலய அதிபர் இருதயராஜ், பங்குதந்தை அற்புதராஜ் ஆகியோர் நிறைவேற்றினர்.
அதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் சிலுவையில் அறையப்பட்ட இயேசுநாதாரின் பாதத்தில் முத்தமிட்டு தங்களது தவக்கால வேண்டுதலை பிராத்தனையுடன் நிறைவேற்றி கொண்டனர். வரும் ஞாயிற்றுகிழமை இயேசு உயிர்த்தெழுந்த தினத்தை உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாட உள்ளனர். இதில் கலந்துகொள்வதற்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வந்து குவிந்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion