மேலும் அறிய

தருமபுரம் ஆதீனத்தில் திருக்கல்யாண உற்சவம் - பாரம்பரிய முறைப்படி 5 கிராம மக்களுக்கு செலவுக்கு பணம் அளித்து, கல்யாண விருந்து வைத்த தருமபுரம் ஆதீனம்!

தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப்பிரவேச விழாவை முன்னிட்டு நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் பாரம்பரிய முறைப்படி 5 கிராமமக்களுக்கு செலவுக்கு பணம் அளித்து, தருமபுரம் ஆதீனம் கல்யாண விருந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த  தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் ஆதீனத்தில், ஆண்டுதோறும் ஸ்ரீ ஞானபுரீஸ்வரசுவாமி கோயில் பெருவிழா, குருபூஜைவிழா, பட்டணப் பிரவேசம் விழா ஆகிய மூன்றும், வைகாசி மாதம் 11 நாட்கள் கொண்டாடப்படும்.  இதில் 11 ம் திருநாள் அன்று  ஆதீனத்தை தோற்றுவித்த ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் குருபூஜை விழா மற்றும் பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சியும் பாரம்பரியமாக நடப்பது வழக்கம். இவ்விழாவில் குருமகா சன்னிதானத்தை பல்லக்கில் அமரவைத்து பக்தர்கள் தூக்கி சென்று ஆதீன திருடத்தின் நான்கு வீதிகளில் சுற்றி பட்டிணப் பிரவேசம் வலம் வருவது நடைமுறை.

தருமபுரம் ஆதீனத்தில் திருக்கல்யாண உற்சவம் - பாரம்பரிய முறைப்படி 5 கிராம மக்களுக்கு செலவுக்கு பணம் அளித்து, கல்யாண விருந்து வைத்த தருமபுரம் ஆதீனம்!

இந்நிலையில், மனிதனை மனிதன் தூக்கிசெல்லும் பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டுமென்று சில அமைப்புகள் கோரிக்கை விடுத்தை அடுத்து கடந்த ஆண்டு மே மாதம் பல்லக்குதூக்கும் (பட்டிணப் பிரவேசம்) நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை அப்போதைய கோட்டாட்சியர் பாலாஜி தடைவிதித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த இந்து அமைப்பினர், பக்தர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் மதவழிபாட்டு முறைகளுக்கு அரசு தடைவிதிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. பல்வேறு ஆதீனங்கள் முதல்வரை சந்தித்து பட்டிணப் பிரவேசம் தடையை நீக்க கோரிக்கை வைத்த நிலையில், பல்லக்கு தூக்கும் நிகழ்விற்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கி கொள்வதாக கடந்த ஆண்டு மே 7-ம் தேதி மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி ஆணைபிறப்பித்தார். இதனால், பட்டிணப் பிரவேசம் நிகழ்வு தமிழகம் முழுவதும் பிரபலமானது.

தருமபுரம் ஆதீனத்தில் திருக்கல்யாண உற்சவம் - பாரம்பரிய முறைப்படி 5 கிராம மக்களுக்கு செலவுக்கு பணம் அளித்து, கல்யாண விருந்து வைத்த தருமபுரம் ஆதீனம்!

வழக்கமாக கடந்த காலங்களை ஆதீனத்தை சுற்றியுள்ள  மக்கள் மட்டுமே குறைவாக கலந்துகொண்ட நிலையில், கடந்த ஆண்டு பட்டிணப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்தனர் உலகளவில் பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி பிரபலம் அடைந்தது. பட்டிணப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு எதிர்ப்புகள் நிலவிய நிலையில், டிஐஜி தலைமையில் 2 எஸ்.பி.க்கள் உட்பட 600 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பல்வேறு தடைகளை கடந்து  பட்டிணப் பிரவேசம் விழா கோலாகலமாக நடைபெற்றது. அதில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்  திருஆபாரணங்கள் அணிந்துகொண்டு திருக்கூட்ட அடியவர்கள் புடைசூழ பல்லக்கில் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் பல்லக்கினை நான்கு கோடி நாட்டாமை தலைமையில் 70 பேர் தோளில் சுமந்த ஆதீனத்தை சுற்றி நான்கு  வீதிகளில் வலம் வந்தனர்.  

தருமபுரம் ஆதீனத்தில் திருக்கல்யாண உற்சவம் - பாரம்பரிய முறைப்படி 5 கிராம மக்களுக்கு செலவுக்கு பணம் அளித்து, கல்யாண விருந்து வைத்த தருமபுரம் ஆதீனம்!

இவ்விழாவில் சைவ ஆதீனங்களான சூரியனார் கோயில் ஆதீனம், மதுரை ஆதீனம், தொண்டை மண்டல ஆதீனம், செங்கோல் ஆதீனம், உள்ளிட்ட பல்வேறு ஆதீனங்கள்  மற்றும்  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா,  பாஜக மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட 3000 -க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து குருபூஜை மடத்தில் வழிபாடு மேற்கொண்டு ஞானகொலுக்காட்சியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். 

தருமபுரம் ஆதீனத்தில் திருக்கல்யாண உற்சவம் - பாரம்பரிய முறைப்படி 5 கிராம மக்களுக்கு செலவுக்கு பணம் அளித்து, கல்யாண விருந்து வைத்த தருமபுரம் ஆதீனம்!

இந்நிலையில் இந்தாண்டு வைகாசி பெருவிழாவானது கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக  சுவாமி - அம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமி அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் உற்சவ மண்டபத்திற்கு எழுந்தருளினர். அங்கு பொதுமக்கள் சீர்வரிசை எடுத்து வர தருமபுரம் 27 -வது ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு ஹோமங்கள் வளர்க்கப்பட்டு மாங்கல்ய தாரணம் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. 

தருமபுரம் ஆதீனத்தில் திருக்கல்யாண உற்சவம் - பாரம்பரிய முறைப்படி 5 கிராம மக்களுக்கு செலவுக்கு பணம் அளித்து, கல்யாண விருந்து வைத்த தருமபுரம் ஆதீனம்!

இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். திருக்கல்யாணம் முறைப்படி தருமபுரம், அச்சுதராயபுரம், மூங்கில்தோட்டம், கருங்குயில்நாதன் பேட்டை, கீழிருப்பு ஆகிய ஐந்து கிராமங்களைச் சேர்ந்த ஊர் நாட்டாமைகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு வெற்றிலை, பாக்கு பணம் வைத்து ஆதீனகர்த்தர் வழங்கினார். தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வடை பாயசத்துடன் திருமண விருந்து நிகழ்ச்சி பாரம்பரிய முறைப்படி தருமபுரம் ஆதீனகர்த்தர் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டிணபிரவேசம் வருகிற 10 -ம் தேதி இரவு நடைபெற உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump Vs Ukraine: உக்ரைன் கண்ணை கட்டி காட்டில் விட்ட ட்ரம்ப்.. முக்கியமான உதவி கட்.! இனி என்ன பண்ணப் போறாங்க.?
உக்ரைன் கண்ணை கட்டி காட்டில் விட்ட ட்ரம்ப்.. முக்கியமான உதவி கட்.! இனி என்ன பண்ணப் போறாங்க.?
Stalin: தோழி விடுதிகளை அறிவித்த ஸ்டாலின்: மகளிர் தினத்தில் குட் நியூஸ் சொன்ன முதல்வர்...
தோழி விடுதிகளை அறிவித்த ஸ்டாலின்: மகளிர் தினத்தில் குட் நியூஸ் சொன்ன முதல்வர்...
TN Womens Policy: மறந்துட்டீங்களா முதல்வரே..!  “மகளிர் கொள்கை” பேப்பரில் மட்டும் தான் இருக்கு, செயல் எங்கே?
TN Womens Policy: மறந்துட்டீங்களா முதல்வரே..! “மகளிர் கொள்கை” பேப்பரில் மட்டும் தான் இருக்கு, செயல் எங்கே?
Trump On India: ”மோடி செய்ததை அம்பலப்படுத்தினேன், இந்தியா வழிக்கு வந்துவிட்டது” - அதிபர் ட்ரம்ப் அதிரடி பேச்சு
Trump On India: ”மோடி செய்ததை அம்பலப்படுத்தினேன், இந்தியா வழிக்கு வந்துவிட்டது” - அதிபர் ட்ரம்ப் அதிரடி பேச்சு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Daughter in law Surprise: வைர நெக்லஸ்..தங்க கட்டிகள்..1 கோடியில் BIRTHDAY GIFT!மாமியாருக்கு SURPRISESarathkumar BJP : அண்ணாமலைக்கு ஆப்பு! பாஜக தலைவர் சரத்குமார்? கடுப்பில் சீனியர்ஸ்Chandrababu Naidu Praises Tamilnadu : ’’தமிழர்கள் TOP-ல இருக்காங்கதமிழ்நாடு தான் BEST’’புகழ்ந்து தள்ளிய சந்திரபாபுPolice vs Drunken lady : தலைக்கேறிய போதை !நடுரோட்டில் இளம்பெண் அலப்பறை திணறிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Ukraine: உக்ரைன் கண்ணை கட்டி காட்டில் விட்ட ட்ரம்ப்.. முக்கியமான உதவி கட்.! இனி என்ன பண்ணப் போறாங்க.?
உக்ரைன் கண்ணை கட்டி காட்டில் விட்ட ட்ரம்ப்.. முக்கியமான உதவி கட்.! இனி என்ன பண்ணப் போறாங்க.?
Stalin: தோழி விடுதிகளை அறிவித்த ஸ்டாலின்: மகளிர் தினத்தில் குட் நியூஸ் சொன்ன முதல்வர்...
தோழி விடுதிகளை அறிவித்த ஸ்டாலின்: மகளிர் தினத்தில் குட் நியூஸ் சொன்ன முதல்வர்...
TN Womens Policy: மறந்துட்டீங்களா முதல்வரே..!  “மகளிர் கொள்கை” பேப்பரில் மட்டும் தான் இருக்கு, செயல் எங்கே?
TN Womens Policy: மறந்துட்டீங்களா முதல்வரே..! “மகளிர் கொள்கை” பேப்பரில் மட்டும் தான் இருக்கு, செயல் எங்கே?
Trump On India: ”மோடி செய்ததை அம்பலப்படுத்தினேன், இந்தியா வழிக்கு வந்துவிட்டது” - அதிபர் ட்ரம்ப் அதிரடி பேச்சு
Trump On India: ”மோடி செய்ததை அம்பலப்படுத்தினேன், இந்தியா வழிக்கு வந்துவிட்டது” - அதிபர் ட்ரம்ப் அதிரடி பேச்சு
TVK Vijay: ஒருவழியாக..! முதல்முறையாக ”திமுக” பெயரை சொன்ன விஜய் - ”வீட்டிற்கு அனுப்ப உறுதி”
TVK Vijay: ஒருவழியாக..! முதல்முறையாக ”திமுக” பெயரை சொன்ன விஜய் - ”வீட்டிற்கு அனுப்ப உறுதி”
12th Public Exam: 12ம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சி - வினாத்தாள் கசிவு, ஆங்கிலத் தேர்வை ரத்து செய்து அரசு உத்தரவு
12th Public Exam: 12ம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சி - வினாத்தாள் கசிவு, ஆங்கிலத் தேர்வை ரத்து செய்து அரசு உத்தரவு
CRIME: மகளிர் தினம் எதுக்கோ? முடியாத சோகம்..! தலித் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம், சாதியின் கோர தாண்டவம்
CRIME: மகளிர் தினம் எதுக்கோ? முடியாத சோகம்..! தலித் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம், சாதியின் கோர தாண்டவம்
FasTag: ஃபாஷ்டேக் விதிகள்..! தவறுதலாக பணம் எடுக்கப்பட்டதா? திரும்பப் பெற வாய்ப்பு இருக்கா?  எளிய வழிமுறை இதோ..!
FasTag: ஃபாஷ்டேக் விதிகள்..! தவறுதலாக பணம் எடுக்கப்பட்டதா? திரும்பப் பெற வாய்ப்பு இருக்கா? எளிய வழிமுறை இதோ..!
Embed widget