மேலும் அறிய

திருச்சியில் பழமை வாய்ந்த தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் உள்ள பழமை வாய்ந்த தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை வெகு விமர்சையாக நடைபெற்றது

இயேசு கிறிஸ்து பிறந்த நாளை கிறஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் இன்று கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் இதனை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, பிரார்த்தனை ஆகியவை நடைபெற்று வருகிறது. கிறிஸ்துவர்கள், கிறிஸ்து பிறப்பை மிகவும் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். அந்தவகையில் (Christmas) கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி, திருச்சியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நேற்று நள்ளிரவு சிறப்பு கூட்டு திருப்பலி மற்றும் பிரார்த்தனைகள் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடுகள் செய்தனர்.உலகில் பிறந்து தங்களுக்காக சிலுவையில் தனது இன்னுயிரை, தியாகம் செய்த இயேசுவின் பிறப்பை கொண்டாடும் வகையில், ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். உலகின் பல்வேறு பகுதிகளில் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, டிசம்பர் மாதத்தின் தொடக்கம் முதலே விழாக் கோலமாக காணப்பட்டது.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, திருச்சியில் உள்ள உலக மீட்பர் பசிலிக்கா ஆரோக்கிய மாதா ஆலயம், லூர்து அன்னை ஆலயம் மற்றும் பாலக்கரை பகுதியில் உள்ள பழைய கோயில் தேவாலயம் ஆகிய பழமை வாய்ந்த தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் கூட்டுப் பிரார்த்தனை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் குழந்தை இயேசுவின் சொரூபத்தை கையில் ஏந்தி இயேசு பிறப்பு அறிவிக்கப்பட்டது. இதில் சிறுவர்கள், இளைஞர்கள் வயதானவர்கள் என்று ஏராளமான மக்கள் குடும்பமாக வருகை தந்து சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகள் சொல்லி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

திருச்சியில் பழமை வாய்ந்த தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

மேலும், கிறிஸ்துவ மக்கள் ஒரு மாத காலமாக கடுமையாக விரதம் மேற்கொண்டு கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்க காத்திருந்த நிலையில், தற்போது கிறிஸ்துமஸ் விழா தேவாலாயங்களில் சிறப்பு வழிபாட்டுடன் இப்பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.  இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் உன்னதத்தை கொண்டாடும் அதே வேளையில், பிறருக்கு உதவுவது, மனித நேயத்துடனும், சகோதரத்துவத்துடனும் நடந்து கொள்வது, ஒருவருக்கு ஒருவர் அன்பை பரிமாறி மகிழ்வாக இருப்பது என்பன இந்நாளில் நினைவுக்கூறப்படுகின்றன. அதேநேரத்தில், சென்னை மற்றும் தென் தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களுக்காக இந்த கூட்டு பிரார்த்தனையின் போது ஜெபிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இனிவரும் காலங்களில் இயற்கை சீற்றத்தால் மக்கள் பாதிக்கபட கூடாது என பிராத்தனை செய்தனர். இதனை தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை தெரிவிட்துக்கொண்டனர். திருச்சி மாவட்டம் முழுவது உள்ள கிறிஸ்த்துவ ஆலயங்களில் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்பட்டு இருந்தது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget