Astrology: 2026ல் வெளிநாடு போகும் 5 ராசிக்காரர்கள்.. அதிர்ஷ்டம் யாருக்கு தெரியுமா?
ஜோதிடத்தில் கிரகங்கள் இணக்கமாக இருந்தால் மட்டுமே வெளிநாட்டில் குடியேற முடியும் என்று ஜோதிட நிபுணர்கள் கூறுகிறார்கள். அப்படியாக 2026 ஆம் ஆண்டில் யாருக்கெல்லாம் அந்த அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது என பார்க்கலாம்.

ஜோதிடம் என்பது பலரின் நம்பிக்கையாக உள்ளது. ஜோதிடமானது 12 ராசிகள், 9 கிரகங்கள், 27 நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டது. இப்படியான நிலையில் நம்மில் பலருக்கும் அவர்களின் சொந்த ஊரை விட்டு வெளியேறி வேறு எங்காவது வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் குடியேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.
ஆனால் ஜோதிடத்தில் கிரகங்கள் இணக்கமாக இருந்தால் மட்டுமே வெளிநாட்டில் குடியேற முடியும் என்று ஜோதிட நிபுணர்கள் கூறுகிறார்கள். அப்படியாக 2026 ஆம் ஆண்டில் கிரகங்களின் நிலைகள் மாறும் பட்சத்தில் வீட்டை விட்டு வெளியேறுவது சரியான நேரத்தில், அர்த்தமுள்ளதாகவும், சில சந்தர்ப்பங்களில், தவிர்க்க முடியாததாகவும் கூட இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு எந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டில் குடியேற வாய்ப்புள்ளது என்பது பற்றிக் காணலாம்.
மிதுனம்
எப்போதும் வித்தியாசமாகச் சிந்திக்கும் வழக்கம் கொண்ட மிதுன ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு வாழ்க்கையை விரைவுபடுத்த பாடுபடும் காலமாக அமையும். ஜோதிடத்தின்படி, ராகு பகவான் 2026 ஏப்ரல் இறுதியில் மிதுன ராசியில் நுழைகிறார். அப்போது இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத ஆற்றல் கிடைக்கும். மே மாத இறுதிக்கும் ஜூன் 2026 க்கும் இடையில், மனதில் நினைப்பவை வெளிப்புற நடவடிக்கைகளாக மாறும். உங்களுக்கு தொலைவில் இருப்பதாகத் தோன்றிய இடங்கள் திடீரென்று உங்களுக்கு முக்கியமானதாகத் தோன்றத் தொடங்கும். அப்படியாக நீங்கள் வெளிநாட்டில் குடியேற வாய்ப்புகள் அமையும்.
தனுசு
வாழ்க்கையில் பயணத்தை மிக முக்கிய குறிக்கோளாக கொண்டு செயல்படும் தனுசு ராசிக்கார்களுக்கு இந்த 2026ம் ஆண்டு மிகவும் அர்த்தமுள்ள பயனுள்ள ஆண்டாக் அமையும். ஆளும் கிரகமாக அறியப்படும் வியாழன் அதன் வேகத்தை அதிகரிக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு இடையில், புதன் மேஷத்தில், சூரியன் ரிஷபத்தில் மற்றும் செவ்வாய் தனுசு ராசியிலும் இணைந்திருக்கும் போது, இந்த ராசிக்காரர்கள் நாட்டை விட்டு வெளியேறி வேறு நாட்டில் குடியேற வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசிக்காரர்கள் எங்கு செல்வதாக இருந்தாலும் அதற்கு முன் திட்டமிடுவது முக்கியம் என்று கருதுகிறார்கள். குருவின் கடக ராசிப் பெயர்ச்சி அவர்களுக்கு நீண்ட தூரம் பயணிக்கவும், வெளிநாடு செல்லவும் வாய்ப்பளிக்கும். 2026 ஜூன் முதல் அக்டோபர் வரையிலான காலம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும், ஏனெனில் குரு உங்கள் சௌகரிய மண்டலத்திலிருந்து வெளியேறி முன்னேற உங்களுக்கு உதவுவார். தொழில் மாற்றங்களுடன், இந்த ஆண்டு வெளிநாடு பயணம் செய்வதற்கான வாய்ப்புகளையும் கொண்டு வரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இயல்பாகவே நம்பிக்கையானவர்கள். உலகின் எங்கு வேண்டுமானாலும் சென்று அங்கு தங்களை தக்கவைத்துக் கொள்ள முயற்சிப்பார்கள். ஆனால் 2026 ஜூலை மாதத்தில், அவர்களின் ஆசைகள் நிறைவேற தொடங்கும். நீங்கள் நினைக்கும் அனைத்தும் வெற்றிபெறத் தொடங்கும். அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டுப் பயணத்திற்கான வாய்ப்புகள் எளிதான தோன்றத் தொடங்கும் நேரம் இதுவாகும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் ஒவ்வொரு விஷயங்களையும் ஆழமாகப் புரிந்துகொள்ள முயற்சிப்பார்கள். 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளிப்புற விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவார்கள். பிப்ரவரி முதல் மார்ச் மற்றும் செப்டம்பர் பிற்பகுதி வரை, கிரக நிலைகள் பயணத்திற்கு மட்டுமல்ல, வெளிநாடு செல்வதற்கும் வாய்ப்புகளை வழங்கும்.
(ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் இந்த செய்தியில் தகவல்கள் கூறப்பட்டுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. இந்த கருத்துகளுக்கு ஏபிபி நாடு பொறுப்பேற்காது)





















