அபய பிரதான ரங்கநாதர் ஆலயத்தில் பகல் பத்து 7ம் நாள் திருவீதி உலா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
கரூர் ஸ்ரீ அபய பிரதான ரங்கநாத ஸ்வாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பகல் பத்து 7-ம் நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு சாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தொடர்ச்சியாக சுவாமி திருவீதி உலா.
கரூர் அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சுவாமி பகல் பத்து 7-ம் நாள் திருவீதி உலா நடைபெற்றது.
கரூர் மேட்டு தெரு பகுதியில் குடிகொண்டு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாத சுவாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பகல் பத்து 7-ம் நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு சாமிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தொடர்ச்சியாக சுவாமி திருவீதி உலாவில் அச்சு அவதார அலங்காரத்தில் காட்சியளித்தார்.
அதைத் தொடர்ந்து ஆலயத்தில் இருந்து மேல தாளங்கள் முழங்க சுவாமியின் 7ஆம் நாள் திருவீதி உலாவில் ஆண்டாள் சன்னதி அருகே சுவாமிக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சுவாமி ஆலயம் வளம் வந்த பிறகு மீண்டும் ஆலய மண்டபத்தில் சுவாமிக்கு மகா தீபாராதனை கட்டப்பட்டது.
இந்நிலையில் கரூர் அபய பிரதான ரங்கநாத சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு அச்சு அவதார அலங்காரத்தில் சுவாமி பகல் பத்து திருவீதி உலாவை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் உள்ளிட்ட பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.