மேலும் அறிய

தமிழ்நாட்டிலே ஒரே சிவாலயம்! துளசி இலையால் அர்ச்சனை! துளசீஸ்வரர் கோயிலுக்கு எப்படி செல்வது?

தமிழ்நாட்டிலே துளசி இலையால் அர்ச்சனை செய்யப்படும் ஒரே சிவன் கோயிலான துளசீஸ்வரர் கோயிலுக்கு ஆவணி மாதத்தில் சென்று வழிபடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

தமிழ் மாதங்களில் மிகவும் முக்கியமான மாதங்களில் ஒன்றான ஆவணி மாதம் இன்று பிறந்துள்ளது. நரியை பரியாக்கியது. கருங்குருவிக்கு உபதேசம் என ஆவணி மாதத்தில் சிவ பெருமானின் திருவிளையாடல்கள் பல அரங்கேறிதாக புராணங்கள் கூறுகிறது. பொதுவாக ஆவணி மாதம் சிவபெருமானுக்கு உகந்த மாதமாக கருதப்படும் சூழலில், சனிப் பிரதோஷத்தில் ஆவணி மாதம் பிறந்திருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.

தமிழ்நாட்டிலே ஒரே சிவாலயம்:

இந்த ஆவணி மாதத்தில் சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம் ஆகும். குறிப்பாக, தனித்துவம் வாய்ந்த சிவாலயங்களுக்கு செல்வது கூடுதல் சிறப்பு என்று கூறப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வில்வவன நாயகி சமேத துளசீஸ்வரர் கோயில் தனிச்சிறப்புகள் வாய்ந்தது ஆகும்.

பொதுவாக சிவாலயங்களில் வில்வ இலைகளை கொண்டு அர்ச்சனை செய்யப்படுவது வழக்கம் ஆகும். ஆனால், இந்த கோயிலில் மட்டும்தான் துளசி இலை கொண்டு அர்ச்சனை செய்யப்படுகிறது. மகா முனிவர் அகத்தியர் பிரதிஷ்டை செய்த 108 சிவலிங்கத்தில் இதுவும் ஒன்று என இக்கோயிலின் தல வரலாறு கூறுகிறது. தமிழ்நாட்டிலே துளசியால் சிவ பெருமானுக்கு அர்ச்சனை செய்யப்படும் ஒரே கோயில் இந்த சிவாலயம் மட்டுமே ஆகும். இந்த கோயிலில் உள்ள லிங்கம் 5 அடி உயரம் கொண்டது ஆகும்.

துளசி கொண்டு பூஜை ஏன்?

சிவபெருமான் – பார்வதி தேவி திருமணத்திற்காக தேவர்கள், அசுரர்கள் என குவிய, பூமியின் சமநிலையை சரி செய்ய அகத்தியரை மறு திசைக்கு சிவபெருமான் அனுப்பினார். அப்போது, 108 லிங்கங்களுக்கு அகத்தியர் பூஜை செய்தார்.

அப்போது, ஒரு தடாகத்தை அமைத்து கொன்றை மலர் மற்றும் துளசி கொண்டு சிவபெருமானை அகத்தியர் பூஜித்தார். அவரது வழிபாட்டால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் துளசீஸ்வரராக அர்த்தநாரீஸ்வர வடிவத்தில் காட்சி தந்ததாகவும், அதன் காரணமாக இந்த கோயிலில் துளசி கொண்டு அர்ச்சனை செய்யப்படுவதாகவும் கோயில் வரலாறு கூறுகிறது.

கோயில் எங்கு உள்ளது?

சுமார் 1000 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் விக்ரம சோழன் காலத்தில் கட்டப்பட்டது ஆகும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்திருந்தாலும், சென்னைவாசிகளுக்கும் இந்த கோயில் அருகில் உள்ளது. சிங்கபெருமாள் கோயில் – வல்லக்கோட்டை செல்லும் பாதையில் அமைந்துள்ளது கொளத்தூர் என்ற கிராமம்.

செம்பியன் கொளத்தூர் என்று பெயரிடப்பட்ட கிராமமே நாளடைவில் மாறி தற்போது கொளத்தூர் என்று அழைக்கப்படுகிறது. வழக்கமான நாட்களிலே கூட்டம் நிரம்பி வழியும் இந்த கோயிலில் மற்ற நாடகளை விட விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவபெருமானுக்கு உகந்த இந்த ஆவணி மாதத்தில் தமிழ்நாட்டிலே துளசி இலையால் அர்ச்சனை செய்யும் ஒரே சிவாலயமான இந்த துளசீஸ்வரர் கோயிலுக்கு சென்றால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Aadi Amavasaya: ஆடி அமாவாசை எப்போது? .. வீட்டிலேயே தர்ப்பணம் கொடுப்பது எப்படி?
Aadi Amavasaya: ஆடி அமாவாசை எப்போது? .. வீட்டிலேயே தர்ப்பணம் கொடுப்பது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Embed widget