மேலும் அறிய

Aadi garuda seva: கோவிந்தா கோவிந்தா ..! ஆடியில் கருட சேவை ...! பக்தி வெள்ளத்தில் மூழ்கிய காஞ்சிபுரம் ..!

Kanchipuram Temple: கருட சேவை உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் ஆடி மாதத்தையொட்டி ஆடி கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கருட சேவை உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி  தரிசனம் செய்தனர்.

ஆடி கருட சேவை உற்சவம்

காஞ்சிபுரம் (Kanchipuram News): 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், உலகப் பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோயில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில்  வைகாசி மாத  பிரம்மோற்சவத்தின் 3ம்நாள் கருடசேவையும், அதே போல ஆனி மாதம் ஆனி கருட சேவையும்,  ஆடி மாதம் ஆடி கருடசேவையும் என ஆண்டிற்கு 3 முறை கருடசேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் கோடை உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆடி  மாதத்தையொட்டி  ஆடி கருட சேவை உற்சவம்  வெகு விமரிசையாக நடைபெற்றது.

Aadi garuda seva: கோவிந்தா கோவிந்தா ..! ஆடியில் கருட சேவை ...! பக்தி வெள்ளத்தில் மூழ்கிய காஞ்சிபுரம் ..!

தங்க கருட வாகனம்

கருட சேவை உற்சவத்தையொட்டி  வரதராஜப் பெருமாளுக்கு  அபிஷேக ஆராதனைகள் செய்து, பச்சை நிற பட்டு உடுத்தி, மலர் மாலைகள், திருவாபரணங்கள் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் பச்சை பட்டு உடுத்திய தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் தூப தீப ஆரத்தி காட்டியதை தொடர்ந்து தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள் கோபுர தரிசனம் தந்து,மேள தாளங்கள் முழங்க வேத பாராயண கோஷ்டினர் பாடிவர  4 மாடவீதிகளில் திரு வீதி உலா வந்து , பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள்பாலித்தார். ஆடி கருட சேவை  ஒட்டி   ஆயிரக்கணக்கான பகதர்கள் கருடசேவை உற்சவத்தில் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.

Aadi garuda seva: கோவிந்தா கோவிந்தா ..! ஆடியில் கருட சேவை ...! பக்தி வெள்ளத்தில் மூழ்கிய காஞ்சிபுரம் ..!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் 

அத்திவரதர் புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் 43 வது திவ்ய தேச தலமாக உள்ளது . காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் ஹஸ்தகிரி, திருக்கச்சி, வேழமலை, அத்திகிரி ஆகிய பெயராலும் அழைக்கப்படுகிறது. வைணவத்தில் ஸ்ரீரங்கம், திருப்பதி, கர்நாடகாவில் உள்ள திருநாராயணபுரம் மற்றும் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் ஆகிய நான்கு தலங்களில் வழிபட்டால் அவருக்கு வைகுண்ட பதவி நிச்சயம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. வருடத்திற்கு 200 நாட்களுக்கு மேல் பல்வேறு உற்சவங்கள் நடைபெறும் மிகவும் முக்கிய கோவிலாக கோவில் வழங்கி வருகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அத்திவரதர் விழாவும், வருடம் தோறும் நடக்கும் வைகாசி பிரம்மோற்சவம் இந்த கோவிலில் மிக முக்கிய திருவிழாவாக இருந்து வருகிறது. வைகாசி பிரம்மோற்சவத்தின் போது நடைபெறும் கருட சேவையை காண பல லட்சம் மக்கள் குவியவதும் வழக்கம். இக்கோவிலின் பிரதான ராஜகோபுரம் மேற்கு நோக்கியபடி 135 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள நூறு கால் மண்டபத்தில் நான்கு மூலைகளிலும் அமைந்துள்ள மிகப்பெரிய தொங்கும் கருச்சங்களில் கோவிலில் மற்றொரு தனிச்சிறப்பு. இக்கோவிலில் உள்ள பிரதான குலத்திற்கு அனந்த சரஸ் என்ற பெயர் உள்ளது. இக்கோவிலில் மூலவராக தேவராஜ பெருமாள், உற்சவமூர்த்தியாக பேரருளாளன், தயாராக பெருந்தேவி தாயார், இதுபோக மூலஸ்தானத்திற்கு அருகே நரசிம்மர் சன்னதி அமைந்துள்ளது. இரண்டாம் பிரகாரத்தில் மலையாள நாச்சியார், ஆழ்வார்கள், ராமானுஜர் போன்ற சன்னத்துகளும் அமைந்துள்ளன .மிக அரிதாக காட்சியளிக்கும் 12 திருக்கழுங்கள் கரங்களுடன் சக்கரத்தாழ்வாழும் காட்சி தருகிறார்.

இக்கோவிலுக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதுபோக ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் நாள்தோறும் வந்து செல்வது வழக்கமாக உள்ளது. வட இந்தியாவை சேர்ந்த பக்தர்களும் இந்த கோவிலுக்கு வந்து வரதராஜ பெருமாளை தரிசித்து செல்கின்றனர் காஞ்சிபுரத்தில் இருக்கும் மிக முக்கிய பெருமாள் கோவிலாக விளங்கி வருகிறது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அடுத்த மிக பிரசித்தி பெற்ற கோவிலாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் விளங்கி வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”எங்களையே கைது பண்றீங்களா! வேடிக்கை பார்க்க மாட்டோம்” கடுப்பான விஜய்Chennai Murder Case: மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.. குற்றவாளிக்கு மரண தண்டனை! பரபரப்பு தீர்ப்பு!Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
"ராகுல் காந்திக்கு வாக்களித்த அனைவரும் தீவிரவாதிகள்" மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!
Crime: பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Embed widget