மேலும் அறிய

புண்ணிய நதிகளில் பாவம் போக்கிய காவிரி துலாக்கட்டத்தில் ஆடி அமாவாசை வழிபாடு - ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடல்

மயிலாடுதுறையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற காவிரி துலா கட்டத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்து காவிரியில் நீராடி வழிபாடு மேற்கொண்டனர்‌.

புண்ணிய நதிகளில் பாவம் போக்கிய காவிரி துலாக்கட்டம்

பாவங்களைப் போக்கும் நதிகளாக போற்றப்படும் கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி உள்ளிட்ட புண்ணிய நதிகளில் மக்கள் தங்களின் பாவங்களைப் போக்க புனித நீராடியதால் நதி முழுவதும் ஒரு காலத்தில் கருப்பு நிறமாக மாறியதாம். அதனால் தனது பாவங்கள் நீங்க சிவபெருமானிடம் சென்று கங்கை நதி வேண்டியுள்ளது. அப்போது சிவபெருமான் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி பாவங்களை போக்கிக் கொள்ள கங்கை நதிக்கு வரம் அளித்ததாக புராண வரலாறு கூறுகிறது. இதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி உள்ளிட்ட புண்ணிய நதிகள், தங்கள் பாவத்தை போக்கிக்கொள்ள ஐப்பசி மாதம், மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டம் ரிஷப தீர்த்தத்தில் புனித நீராடுவதாக புராணம் தெரிவிக்கின்றது. 

புண்ணிய நதிகளில் பாவம் போக்கிய காவிரி துலாக்கட்டத்தில் ஆடி அமாவாசை வழிபாடு - ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடல்

பார்வதி தேவியார் சாப விமோசனம் பெற்ற இடம்

இதேபோன்று சிவபெருமானிடம் சாபம் பெற்ற பார்வதி தேவியார் சாப விமோசனம் பெற மயில் உருவம் கொண்டு பூஜித்த இடம் மயிலாடுதுறை. அங்கு சிவபெருமானும் மயில் உருகொண்டு இருவரும் ஆனந்த நடனம், மாயூர தாண்டவம் ஆடினர். பின்னர் சிவமயில், தேவி மயிலை நோக்கி பிரம்மா ஸ்தாபித்த இந்த பிர்ம தீர்த்தத்தில் மூழ்கி சிவலிங்கத்தை பூஜிப்பாயாக என்று அசரரீ கூறியது. அதைக் கேட்ட பார்வதி தேவி மன மகிழ்ச்சியுடன் பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கியெழுந்தாள். மயில் உருநீங்கி தேவியாக சுய உருப்பெற்றாள்.  சிவமயிலும் சிவபிரானாக மாறி என்ன வரம் வேண்டும் தேவி என்றார். அப்போது அம்மை கவுரியாகிய நான் மயில் உருக்கொண்டு பூஜித்ததால் கவுரிமாயூரம் என்ற பெயர் இந்த ஊருக்கு வர வேண்டும். நீங்களும் மாயூரநாதர் என்று அழைக்கப்பட வேண்டும். நான் உங்களை வழிபட்ட இந்த துலா மாதத்தில் இங்கு வந்து நீராடுபவர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என வேண்டினாள் என்பது ஐதீகம். 

புண்ணிய நதிகளில் பாவம் போக்கிய காவிரி துலாக்கட்டத்தில் ஆடி அமாவாசை வழிபாடு - ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடல்

துலாக்கட்டத்தின் சிறப்பு 

இங்கு காவிரிக்கு, ரிஷப தீர்த்தம் எனப்பெயர். நந்திதேவருக்கு ஒருசமயம் அகம்பாவம் வந்துவிட்டது. அதை அறிந்த சிவபெருமான், நந்திதேவரைப் பாதாளத்தில் அழுத்தினார். அப்படி நந்தி தேவர் அழுத்தப்பட்ட இடம், மயிலாடுதுறை. இந்த காவிரியின் துலாக் கட்டமாகும். அந்த இடத்தின் நடுவில் இருக்கும் சுவாமியின் திருவடிவை இன்றும் காணலாம். ரிஷப தேவர் அழுந்திய இடம் ஆதலால், அது ரிஷப தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் காவிரியில் கங்காதேவியும் வாசம் செய்கிறாள். தேவர்கள், முனிவர்கள், சரஸ்வதி,லெட்சுமி, கௌரி, சப்தமாதர்கள் ஆகியோர் மாயூரத்திலுள்ள காவிரிக்கரையில் நீராட வருவதாகவும், ஆகையால் துலா மாதம் என சொல்லப்படும் ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறையில் காவிரி துலாக்கட்டத்தில் நீராடுவது மிகவும் சிறப்புடையதாகும். 

புண்ணிய நதிகளில் பாவம் போக்கிய காவிரி துலாக்கட்டத்தில் ஆடி அமாவாசை வழிபாடு - ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடல்

ஐப்பசி மாதக் கடைசி நாளில், இங்கே நீராடுவதற்கு ‘கடை முழுக்கு’ என்று பெயர். இந்த நாளில், மயிலாடுதுறையில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் அருள்பாலிக்கின்ற மூர்த்திகளும் காவிரியில் எழுந்தருளி, தீர்த்தவாரி கண்டருளுவர். அதனால் துலா ஸ்நானம் பாவம், துன்பம் போக்கி புண்ணிய பலனை அளிக்கும். ஐப்பசி மாதத்தின் முதல் நாள் தொடங்கி, கார்த்திகை மாதம் முதல் தேதி முடிய இங்கு நீராடுவது, மிகவும் விசேஷம். அதிலும் ஐப்பசி மாதத்தில் கடைசி நாளான கடைமுழுக்கு அன்று நீராடுவது மிக சிறப்பு. இம்மாதத்தில் முதல் 29 நாட்களில் நீராட முடியாவிட்டலும் கடைசி நாளான 30-ம் நாள் காவிரியில் நீராடி மாயூரநாதரையும், அன்னை அபயாம்பிகையும் அன்று வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

முடவன் முழுக்கு

கார்த்திகை மாதத்தின் முதல் நாள் “முடவன் முழுக்கு” என்று கொண்டாடப்படுகிறது. துலா மாத நீராடலைக் கேள்விப்பட்டு, தன் பாவத்தை போக்க முடவன் ( மாற்றுத்திறனாளி) ஒருவர் மயிலாடுதுறைக்கு வந்தார். தன் இயலாமையால் துலா கட்டத்துக்கு உரிய காலத்தில் வரமுடியாமல் ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை முதல் நாள் வந்துள்ளார். முடவனான தன்னால் மீண்டும் அடுத்த ஆண்டு வந்து மூழ்கிச் செல்வது இயலாது என இறைவனிடம் அவர் முறையிட்ட, சிவபெருமான் ‘’நீ போய் மூழ்கு" உனக்கும் பேறு கிடைக்கும்’’ என்று அருள் செய்ததாகவும், அவர் வாக்குப்படியே அவரும் கார்த்திகை மாதம் முதல் நாளன்று புனித நீராடி முக்தி பெற்றுள்ளார். அதுவே ‘முடவன் முழுக்கு’ எனப்படுகிறது.

புண்ணிய நதிகளில் பாவம் போக்கிய காவிரி துலாக்கட்டத்தில் ஆடி அமாவாசை வழிபாடு - ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடல்

இதேபோல் கடைசி நாளில் காவிரியில் நீராட நாதசர்மா, அனவித்யாம்பிகை தம்பதியர் மாயூரம் வருவதற்குள் 30-ம் நாள் நீராடல் முடிந்து விட்டது. எனவே வருத்தத்துடன் சிவனை வேண்டி காவிரி துலா கட்டத்தில் தங்கிய நாதசர்மாவின் கனவில் தோன்றிய சிவன், மறுநாள் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு நீராடினாலும், பாவம் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்றார். அதன்படியே மறுநாள் அத்தம்பதியர் காவிரியில் மூழ்கி பாவம் நீங்கப்பெற்றனர். இதன் அடிப்படையில் கார்த்திகை முதல் நாளன்று, அதிகாலையிலும் இங்கு நீராடும் வழக்கம் இருக்கிறது.

ஆடி அமாவாசையை வழிபாடு 

இத்தகைய ஏராளமான சிறப்பு மிக்க மயிலாடுதுறையில் உலகப் புகழ்பெற்ற காவிரி துலா கட்டத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்து காவிரியில் நீராடி வழிபாடு செய்தனர். மறைந்த முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளயபட்சம், மத்தியாஷ்டமி உள்ளிட்ட காலங்களில் புனித நீராடி முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி உள்ளிட்ட பலிகர்ம பூஜைகள் செய்வதால் முன்னோர்கள் ஆசி கிடைக்கும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை முதல் ஏராளமான பக்தர்கள் காவிரி துலா கட்டத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். காவிரி கரையில் சிறப்பு பூஜைகள் செய்து ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்து காவிரியில் நீராடி வழிபாடு செய்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகத்தை செய்வதா.? விளாசும் ஸ்டாலின்
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகமா.? விளாசும் ஸ்டாலின்
EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகத்தை செய்வதா.? விளாசும் ஸ்டாலின்
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகமா.? விளாசும் ஸ்டாலின்
EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்டாக், மத்திய அரசு பதிலடி, சரித்திரம் படைத்த குரோக்கா  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்டாக், மத்திய அரசு பதிலடி, சரித்திரம் படைத்த குரோக்கா - 11 மணி வரை இன்று
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Embed widget