மேலும் அறிய
உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியை கண்டுகளித்த டேவிட் பெக்கம்!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அரையிறுதி ஆட்டத்தை காண கால்பந்து ஆட்ட ஜாம்பவான் டேவிட் பெக்கம் மும்பை வான்கடே மைதானத்திற்கு வந்திருந்தார்.

2023 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் டேவிட் பெக்காம்
1/6

நடப்பு உலக்கோப்பை தொடரில் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
2/6

இதையடுத்து களத்தில் இறங்கிய இந்திய அணி 397 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பிறகு பேட்டிங் செய்ய வந்த நியூசிலாந்து அணி 48.5 ஓவரில் 327 ரங்களை எடுத்து ஆட்டமிழந்தது.
3/6

இந்தியா மற்றும் நியூசிலாந்து அரையிறுதி ஆட்டத்தை காண கால்பந்து ஆட்ட ஜாம்பவான் டேவிட் பெக்கம் மும்பை வான்கடே மைதானத்திற்கு வந்திருந்தார்.
4/6

இங்கிலாந்து நாட்டை சார்ந்த டேவிட் பெக்கம் இங்கிலாந்து தேசிய கால்பந்து அணியின் வீரராகவும் புகழ்பெற்ற மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியின் நட்சத்திர வீரராக இருந்தவர்.
5/6

நட்சத்திர வீரர் மெஸ்ஸி விளையாடிக்கொண்டிருக்கும் இன்டெர் மியாமி கிளப்பின் இணை ஓனராக இருக்கிறார். நேற்று வான்கடே மைதானத்திற்கு வந்திருந்த டேவிட் பெக்கம், “ வரலாற்று சாதனைப் படைக்கப்பட்ட இந்த அரையிறுதி போட்டியில் கலந்து கொண்டதில் பெருமை கொள்கிறேன்.” என பேசினார்.
6/6

அதுமட்டுமில்லாமல் கிரிக்கெட் ரசிகர்களின் இந்த உற்சாகத்தை கண்டுகளித்தது புதுவிதமாக இருந்தது எனவும் பேட்டியளித்துள்ளார்.
Published at : 16 Nov 2023 04:42 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement