மேலும் அறிய
Cotton Candy Ban : தமிழ்நாட்டிலும் பஞ்சு மிட்டாய்க்கு தடை..காரணம் தெரியுமா?
Cotton Candy Ban : புதுச்சேரியை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பஞ்சு மிட்டாய்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. என்ன காரணம் தெரியுமா?
பஞ்சு மிட்டாய்
1/6

பூங்காக்கள், கண்காட்சிகள், கடற்கரைகள் என எந்த பொது இடத்திற்கு சென்றாலும் நம் கண்களில் முதலில் படுவது பஞ்சுமிட்டாய் தான். ஆனால் இந்த அனைவருக்கும் பிடித்தமான பஞ்சு மிட்டாய் விற்பதற்கு புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு அரசுகள் தடை விதித்துள்ளன. இதற்கு காரணம் என்னவென்று தெரியுமா?
2/6

பஞ்சு மிட்டாய்களை கண்கவர் நிறங்களில் மாற்றுவதற்காக அவற்றில் `ரோடமைன் பி’ என்ற நிறமி பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
3/6

இந்த நிறமியை இண்டஸ்ட்ரியல் டை என்றும் அழைக்கின்றனர். மேலும் இந்த நிறமியில் புற்றுநோயை உண்டாக்கும் ஆபத்தான மூலப்பொருட்களும் கலந்து இருப்பதாக கூறப்படுகிறது.
4/6

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகள் பஞ்சு மிட்டாய் விற்பவர்களிடம் அவற்றை கைப்பற்றி ஆய்வுகளை மேற்கொண்டதில் இந்த நிறமி பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது.
5/6

இந்த நிறமி குழந்தைகளுக்கு மிக மோசமான ஆரோக்கிய பிரச்சினைகளை உருவாக்கலாம் என்பதால் அரசு பஞ்சு மிட்டாய் விற்வதற்கு தடை விதித்துள்ளது.
6/6

தடைக்கு பிறகு பல இடங்களில் நிறமி சேர்க்காத வெள்ளை நிற பஞ்சு மிட்டாய்கள் விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Published at : 18 Feb 2024 10:34 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















