மேலும் அறிய
Himachal Results 2022: இமாச்சலில் ஆட்சி அமைக்கும் காங்கிரஸ்?..அதிர்ச்சியடைந்த பாஜக!
Himachal Results 2022: இமாச்சலை பொறுத்தவரை, 1985க்கு பிறகு, பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகின்றன.

ஹிமாச்சல் தேர்தல் முடிவுகள் 2022
1/6

தொடர் தோல்விகளை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் விதமாக இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளது.கடந்த நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக அங்கு மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
2/6

அதில், 39 இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 26 இடங்களிலும் பிற கட்சிகள் 3 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
3/6

பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவிய போதிலும், ஒரு கட்டத்திற்கு பிறகு, காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக சூழல் மாறியது.
4/6

25 ஆண்டு கால இமாச்சல பிரதேச அரசியலை பாஜகவின் பிரேம் குமார் துமாலும், காங்கிரஸ் கட்சியின் வீரபத்ர சிங்கும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.
5/6

இரண்டு மூத்த தலைவர்களில் ஒருவரான வீரபத்ர சிங், கடந்த 2021ஆம் ஆண்டு காலமானார்.
6/6

தற்போது, நிலவும் சூழ்நிலையில், முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் பிரதிபா சிங்கும், காங்கிரஸ் தேர்தல் பிரச்சார குழுவின் தலைவரான சுக்விந்தர் சிங் சுக்குவும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
Published at : 08 Dec 2022 04:23 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு
அரசியல்
Advertisement
Advertisement