மேலும் அறிய
Bread Pizza : வீட்டில் ப்ரெட் இருக்கா..? அப்போ இந்த சுவையான ப்ரெட் பீட்சாவை உடனே செய்து அசத்துங்கள்!
Bread Pizza : ப்ரெட் வீட்டில் மீதம் இருக்கிறதா..? அப்போ இந்த சுவையான ப்ரெட் பீட்சா ரெசிபியை உடனே செய்து அசத்துங்கள்.

ப்ரெட் பீட்சா
1/6

தேவையான பொருட்கள் : பிரட் - 4 துண்டுகள், இன்ஸ்டன்ட் பீட்சா சாஸ், மோஸ்ரெல்லா சீஸ் - 200 கிராம், பச்சை குடைமிளகாய், சிவப்பு குடைமிளகாய், வேகவைத்த சோள விதைகள், பிளாக் ஆலிவ்ஸ், இட்டாலியன் சீசனிங், சில்லி பிளேக்ஸ், வெண்ணெய். இன்ஸ்டன்ட் பீட்சா சாஸ் செய்ய : தக்காளி கெட்சப் - 1/2 கப், இட்டாலியன் சீசனிங் - 1 தேக்கரண்டி, சில்லி பிளேக்ஸ் - 1/2 தேக்கரண்டி, மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
2/6

செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில், தக்காளி கெட்சப், இட்டாலியன் சீசனிங், சில்லி பிளேக்ஸ் மற்றும் மிளகு தூள் சேர்த்து கலக்கவும். அதில் மோஸ்ரெல்லா சீஸை துருவி சேர்க்கவும்.
3/6

பிரட் துண்டுகளை எடுத்து அதில் இன்ஸ்டன்ட் பீட்சா சாஸ் தடவும்.
4/6

இதன் மேல் துருவிய சீஸ், பச்சை குடைமிளகாய், சிவப்பு குடைமிளகாய், வேகவைத்த சோள விதைகள், பிளாக் ஆலிவ்ஸ், இட்டாலியன் சீசனிங், சில்லி பிளேக்ஸ் மற்றும் துருவிய சீஸ் சேர்க்கவும்.
5/6

பேனை சூடு செய்து, வெண்ணெய் சேர்க்கவும். உள்ளே பிரட் துண்டை வைத்து, பேனை மூடவும்.
6/6

சீஸ் உருகும் வரை காத்திருந்து எடுத்தால் சுவையான பிரட் பீட்சா தயார்.
Published at : 09 Apr 2024 11:31 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement