மேலும் அறிய
Choco Truffles Recipe : அசத்தலான சாக்கோ ட்ரஃபிள்ஸை வீட்டில் செய்து குழந்தைகள் மனதை கவருங்கள்!
Choco Truffles Recipe : இந்த மனதை மயக்கும் சாக்கோ ட்ரஃபிள்ஸ் ரெசிபியை வீட்டில் செய்து அசத்துங்கள்.

சாக்கோ ட்ரஃபிள்ஸ்
1/6

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் பொருள் சாக்லேட். இந்த மனதை மயக்கும் சாக்கோ ட்ரஃபிள்ஸ் ரெசிபியை வீட்டில் செய்து அசத்துங்கள்.
2/6

தேவையான பொருட்கள்: டார்க் குக்கிங் சாக்லேட் - 250 கிராம், ஃப்ரெஷ் கிரீம் - 160 கிராம், உப்பில்லாத வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி, வெண்ணிலா எசென்ஸ் - 1 தேக்கரண்டி, கோகோ பவுடர், கலர் ஸ்ப்ரிங்ல்ஸ், வால்நட்ஸ் நறுக்கியது, சாக்லேட் ஸ்ப்ரிங்ல்ஸ்.
3/6

முதலில் டார்க் குக்கிங் சாக்லேட்டை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.பிறகு ஒரு சாஸ் பானில் ஃப்ரெஷ் கிரீமை ஊற்றி குறைந்த தீயில் வைத்து கிண்டவும். ஃப்ரெஷ் கிரீம் கரைந்ததும் அடுப்பை அணைக்கவும்.
4/6

நறுக்கிய சாக்லேட் உள்ள பாத்திரத்தில் உப்பில்லாத வெண்ணெய், சூடான ஃப்ரெஷ் கிரீம், வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது சாக்லேட் கனாஷ் தயார்.
5/6

பிறகு சாக்லேட் கனாஷ் -ஐ ஒரு பாத்திரத்திற்கு மாற்றி 4 மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும்.அடுத்து சாக்லேட் கலவையில் இருந்து சிறிதளவு எடுத்து உள்ளங்கையில் வைத்து உருட்டவும்.
6/6

பின்பு உருட்டிய உருண்டையை கோகோ பவுடர், கலர் ஸ்ப்ரிங்ல்ஸ், வால்நட்ஸ், சாக்லேட் ஸ்ப்ரிங்ல்ஸ் ஆகியவற்றில் தனித்தனியாக பிரட்டி எடுக்கவும்.அவ்வளவு தான் அருமையான நான்கு சாக்லேட் ட்ரஃபிள்ஸ் தயார்.
Published at : 13 Jul 2023 05:26 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement