Watch Video: ஜூராசிக் பார்க் பட பாணியில் உலகை எட்டிப் பார்த்த ’பிளாக் டிராகன்’!
இந்த வீடியோ 53 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்று இன்ஸ்டாவாசிகளிடம் இதயங்களை அள்ளியுள்ளது.
![Watch Video: ஜூராசிக் பார்க் பட பாணியில் உலகை எட்டிப் பார்த்த ’பிளாக் டிராகன்’! zoo keeper flaunts black monitor lizard getting hatched from his hands Watch Video: ஜூராசிக் பார்க் பட பாணியில் உலகை எட்டிப் பார்த்த ’பிளாக் டிராகன்’!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/17/3c886a7c55a186530d51ea4999d20b051671298263224574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
‘ஜூராசிக் பார்க்’ படத்தில் ஒரு காட்சியில் ஜூராசிக் பார்க்கை கட்டியமைத்த டாக்டர் ஆலன் கிராண்ட்டின் கைகளில் உள்ள முட்டையில் இருந்து குட்டி டைனோசர் உலகை எட்டிப் பார்த்து சிலிர்ப்பை வரவழைக்கும் அல்லவா?
அந்த வகையில் மிருகக்காட்சி சாலை காப்பாளர் ஒருவரின் கைகளில் இருந்து டைனோசரைப் போல் தோற்றமளிக்கும் குட்டி உடும்பு ஒன்று பிறக்கும் காட்சி இன்ஸ்டாவில் ஹிட் அடித்துள்ளது.
ஜே ப்ரூவர் எனும் மிருகக் காட்சி சாலை காப்பாளர் தொடர்ந்து தான் பராமரித்து வரும் மிருகங்கள், ஊர்வன குறித்து தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் முன்னதாக முட்டையில் இருந்து ’பிளாக் டிராகன்’ என அழைக்கப்படும் கருப்பு நிற குட்டி உடும்பு ஒன்று ’ஜூராசிக் பார்க்’ பட டைனோசர் பாணியில் தன் கைகளில் இருந்தபடி பிறக்கும் காட்சியை தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
இந்த வீடியோ 53 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்று இன்ஸ்டாவில் ஹிட் அடித்துள்ளது.
View this post on Instagram
ஜே ப்ரூவர் தான் பணிபுரியும் மிருகக்காட்சி சாலையில் உள்ள வானவில் வண்ண மலைப்பாம்பையும் ’கோக்கனட்’ எனும் வெள்ளை நிற முதலையையும் அறிமுகம் செய்து தொடர்ந்து அவற்றின் வீடியோக்களையும் தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)