(Source: ECI/ABP News/ABP Majha)
World Tsunami Awareness Day : இன்று உலக சுனாமி விழிப்புணர்வு தினம்…! மறக்க முடியுமா அந்த கொடூரத்தை..?
ஐ.நா. பொது சபை டிசம்பர் 2015-ல் நவம்பர் 5-ம் தேதியை உலக சுனாமி விழிப்புணர்வு தினமாக அறிவித்தது.
2 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களை கொன்ற கொடிய இயற்கை பேரழிவைான ஆழிப் பேரலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் 5 ஆம் தேதி உலக சுனாமி விழிப்புணர்வு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
வரலாறு
ஐக்கிய நாடுகளின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் அறிக்கையின்படி, டிசம்பர் 2004ல் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமியின் கொடிய பேரழிவு கடந்த 100 ஆண்டுகளில் நிகழ்ந்த மற்ற இயற்கை ஆபத்தை விட மிகவும் அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பேரழிவில் மில்லியன் கணக்கான இறப்புகள் நிகழ்ந்தன, மேலும் 14 நாடுகள் சுனாமியால் பாதிக்கப்பட்டன. அதில் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு தாய்லாந்து ஆகும்.
இலங்கை, இந்தோனேசியா மற்றும் இந்தியாவில் மட்டும் 2,27,000 பேர் இறந்ததாக ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. இதுகுறித்த விழிப்புணர்வை பரப்பும் முயற்சியாக, டிசம்பர் 2015 இல் ஐநா பொதுச் சபை (UNGA) நவம்பர் 5ம் தேதியை உலக சுனாமி விழிப்புணர்வு தினமாக அறிவித்தது. அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
விழிப்புணர்வு
இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ‘சுனாமி முன் எச்சரிக்கை அமைப்புகள் பற்றிய விழிப்புணர்வு’ என்பதாகும். சுனாமியால் ஏற்படும் ஆபத்தைக் குறைப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் புதுமையான அணுகுமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும் சிவில் சமூகங்கள், நாடுகள் மற்றும் பல சர்வதேச அமைப்புகளுக்கு ஐ.நா.வின் கொள்கை உருவாக்கும் உறுப்பு அழைப்பு விடுத்துள்ளது.
50 சதவிகிதம் மக்கள் பாதிப்பில் உள்ளனர்
முக்கியமாக, மக்கள் மத்தியில் சுனாமி பற்றிய அறிவை உருவாக்குவதற்காகவும், தற்போது தாழ்வான தீவுகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் 700 மில்லியன் மக்களுக்கும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. ஐநா அறிக்கையின்படி, புயல்கள், சுனாமிகள் மற்றும் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் கடலோரப் பகுதிகளில் 50 சதவீத மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் இது குறித்த விழிப்புணர்வை வழங்கவே இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
பாதிப்பை குறைக்கும் நோக்கம்
சுனாமியுடன் தொடர்புடைய அபாயங்கள் குறித்து அனைவருக்கும் கற்பிப்பதற்காகவும், பேரிடரின் தாக்கங்களைக் குறைப்பதற்கான கொள்கைகள் மற்றும் உத்திகளைத் திட்டமிடுவதற்காகவும், விழுப்புணர்வு உள்ள மக்களை உருவாக்குவது முக்கியம். 2020 ஆம் ஆண்டில், உலக சுனாமி விழிப்புணர்வு தினம் 30 நாள் பிரச்சாரமாக கட்டமைக்கப்பட்டது. இதில், அறிவியல் நிபுணத்துவம், உள்நாட்டு அறிவு மற்றும் டிசம்பர் 2004 இன் சுனாமியின் நினைவகம் ஆகியவற்றில் குறிப்பிட்ட கவனம் செலுத்தப்பட்டது.
அதன் பிறகு தற்போது இந்த விழிப்புணர்வு நிகழ்வு பெரிய அளவில் நடைபெறுகிறது. சமீபத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், உலக சுனாமி விழிப்புணர்வு தினத்திற்கான செய்தியை வழங்கியுள்ளார். சிக்கலான உலகளாவிய நெருக்கடி அதிகரித்து வருவதால் நாம் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். சுனாமி அபாயத்தைக் குறைப்பதும், அனைத்துப் பேரிடர்களுக்கு எதிராகப் பாதிப்பை குறைப்பதும் முக்கியம் என்றார்.