கணவரை வாடகைக்கு விட்ட மனைவி! சேவைக்கு கட்டணம் ரூ.3365.. காரணத்தை கேட்டா அதிர்ச்சியாவீங்க..
வாசிக்கவே விநோதமாக இருக்கிறதல்லவா. ஆம், விநோதமான செய்திதான் ஆனால் புத்திசாலித்தனமான முடிவு. கணவரை விற்றது புத்திசாலித்தனமா என்று நீங்கள் கேட்கலாம்.
கணவரை வாடகைக்கு விட்ட மனைவி... வாசிக்கவே விநோதமாக இருக்கிறதல்லவா. ஆம், விநோதமான செய்திதான் ஆனால் புத்திசாலித்தனமான முடிவு. கணவரை விற்றது புத்திசாலித்தனமா என்று நீங்கள் கேட்கலாம். அதற்கான விடை தெரிய முழுமையாக செய்தியை வாசியுங்கள்.
பிரிட்டனைச் சேர்ந்தவர் லாரா யங். இவர் தன் குடும்ப வருமானத்தைப் பெருக்க திட்டமிட்டார். நியாயமாக நேர்மையாக என்ன செய்யலாம் என்று பல நாட்களாக அவர் திட்டமிட்டுக் கொண்டிருந்தார். அப்போது தான் அவர் வெப்சைட்டை தொடங்க திட்டமிட்டார். 'Rent My Handy Husband' கைதேர்ந்த கணவர் விற்பனைக்கு என்ற பெயரில் ஒரு வெப்சைட்டை தொடங்கினார். இது என்ன கிளுகிளுப்பாக இருக்கிறதே என்று சின்ன புத்தியுடன் இணையத்தை சொடுக்கினால் லாராவின் புத்திசாலித்தனம் தெரியும்.
லாரா யங்கின் கணவர் பெயர் ஜேம்ஸ். அவர் வீட்டில் சும்மாவே இருக்க மாட்டாராம். தூக்கி எறிந்த பொருட்கள், இது தேறாது என நாம் ஒதுக்கும் பொருட்கள் எல்லாவற்றையும் வைத்து புதுமாதிரியாக ஏதாவது ஒரு பொருளை செய்துவிடுவாராம். அப்படி அவர் செய்த வித்தைகள் தான் லாரா யங்குக்கு அந்த ஐடியாவை கொடுத்தது.
லாராவின் கணவர் ஜேம்ஸ் வீட்டின் உள் அலங்காரம் செய்வது, வீட்டை அழகுபடுத்துவது, பெயின்ட் செய்வது, கார்பெட் விரிப்பது, தோட்டத்தை சுத்தப்படுத்துவது என எல்லாவற்றிலும் தேர்ந்தவராம். இதுதவிர எந்த ஒரு பொருளை வேண்டாம் என்று தூக்கிப்போடாமல் அதைவைத்து அழகான பொருட்களை செய்துவிடுவாராம். அதையே மூலதனமாக்கியுள்ளார் லாரா யங். இப்போது லாராவும் அவரது கணவரும் குழந்தைகளுடன் நிம்மதியாக வாழ்கின்றனராம். அதையும் லாராவே தெரிவித்துள்ளார். சில நேரங்களில் வீட்டில் சின்னச் சின்ன வேலை செய்ய வேண்டியிருக்கும். ஆனால் அதற்கு ஆள் கிடைக்காது. குறைந்த சம்பளத்தில் நிறைய வேலைகளை செய்து கொடுப்பதுதான் ஜேம்ஸின் ஸ்பெஷாலிட்டி. அதைத்தான் லாரா விற்பனை செய்துள்ளார்.
இனிய தம்பதிதான் இவர்கள்..
ஜேம்ஸ் ஒரு வேர்ஹவுஸில் வேலை செய்து வந்துள்ளார். லாரா, ஜேம்ஸ் தம்பதிக்கு மூன்று குழந்தைகள். இவர்களில் இருவருக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ளது. அதனால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் வேலையை விட்ட ஜேம்ஸ் வீட்டில் லாராவுக்கு உதவலானார். அதன் பின்னர் ஏற்பட்ட பண நெருக்கடிகளை சமாளிக்கவே லாரா இந்த புதிய யுத்தியை முயன்று சாதித்துள்ளார். லாரா தனது கணவரை பணிக்கு அனுப்ப 35 யூரோக்கள் நிர்ணயித்துள்ளார். இந்திய மதிப்பில் ரூ.3365. டிவி ஃபிட் செய்தல் தொடங்கி வீட்டிற்கு பெயின்ட் அடிப்பதுவரை பல வேலைகளை ஜேம்ஸ் செய்து கொடுக்கிறார்.
இதேபோல், பிரிட்டனில் நீண்ட வரிசையில் நிற்கவும் ஆட்களை வாடைக்கு அமர்த்துவதும் உண்டு.