Watch Video: வீடியோ மோகம்! சிகரெட் பிடிக்கும் பெண்; மூச்சு முட்டும் கை குழந்தை! எழும் எதிர்ப்புக்குரல்!
Watch Video: சமூக வலைதளத்தில் பெண் ஒருவர் கையில் குழந்தையை வைத்துகொண்டு புகைப்பிடிப்பது வைரலாகி வருவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் புகைப்பிடிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. குழந்தைக்கு அருகில் புகைப்பிடிக்கும் பெண்ணின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சமூக வலைதள பக்கங்களில் தினமும் ஏதாவது ஒரு ரீல்ஸ் அப்லோடு செய்ய வேண்டும் என்பதை பலரும் ஒரு கடமையாக கருதுகிற காலம் என சொல்வது தவறாகாது. குழந்தைகளுக்கு கூட பிரத்யேகமாக ஒரு அக்கவுண்ட் வைத்துள்ளவர்களும் இருக்கின்றனர். ஏனெனில், குழந்தைகளும் ஒரு கன்டெண்ட்டாக பார்க்கப்படுவது சரியானது இல்லை எனவும் குழந்தைகளின் இயல்பை விட அவர்களுக்கு ரீல்ஸ், வீடியோ கலாச்சாரத்தை அறிமுகம் செய்வது ஆபத்தனாது என்றும் எச்சரிக்கிறனர் வல்லுநர்கள். இப்போது, சமூக வலைதளமான எக்ஸில் பெண் ஒருவர் குழந்தையுடன் சிகரெட் புகைக்கும் வீடியோ பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Feel terrible for kids around these reel monsters pic.twitter.com/VujAzvmClj
— Deepika Narayan Bhardwaj (@DeepikaBhardwaj) June 17, 2024
சமூக ஆர்வலரான தீபிகா நாராயண் பரத்வாஜ் (Deepika Narayan Bhardwaj) தனது எக்ஸ் தளத்தில் வீடியோ பதிவிட்டுள்ள வீடியோ வைரல் ஆகி வருகிறது. Feel terrible for kids around these reel monsters' என்று குறிப்பிட்டு வீடியோவை பகிந்துள்ளார். ரீல்ஸ் வீடியோக்கள் எடுப்பதில் அதீத விருப்பம் உள்ளவர்களுக்கு மத்தியில் வாழும் குழந்தைகளின் நிலையை மோசமானது என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
வீடியோவில் கைக்குழந்தை இருக்கிறது. அதில் வரும் பெண் சிக்ரெட் புகைக்கிறார். வீடியோவுக்காக குழந்தை அருகில் இருக்கும்போது புகைப்பது நியாமானது இல்லை. இந்த வீடியோவில் குழந்தைக்கு இருமல் வருவதை பலரும் சுட்டிக்காட்டி அவரின் பொறுப்பற்ற செயலை கண்டித்து வருகின்றனர். இந்த வீடியோவிற்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர், குழந்தைக்கு இருமல் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு அருகில் சிகரெட் புகைப்பது குற்றமாகும். குழந்தை தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். முட்டாள்தனத்துடன் நடந்துகொள்ளும் பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் கமெண்ட்டில் வலியுறுத்தியுள்ளனர். ஒரு விசயத்தை பற்றி தனது கருத்தைத் தெரிவிக்க வேண்டுமானல் அதற்கு ஏன் கைக்குழந்தையை பயன்படுத்த வேண்டும். அதுவும் சிகரெட் புகைக்கும்படி ஏன் வீடியோ எடுத்துள்ளார். இது குழந்தையை துன்புறுத்தும் செயல் என்று ஒருவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளை துன்புறுத்தும் பெண் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் சமூக வலைதளத்தில் வலிறுத்தி வருகின்றனர்.