முகப்புசெய்திகள்உலகம்Queen Elizabeth II : காலமான மகாராணியை இதுவரை பார்க்காத கேத் மிடில்டன் - மெகன் மார்க்கல்! என்னதான் சிக்கல்?
Queen Elizabeth II : காலமான மகாராணியை இதுவரை பார்க்காத கேத் மிடில்டன் - மெகன் மார்க்கல்! என்னதான் சிக்கல்?
எலிசபெத் உடல்நிலை குறித்து அரண்மனையின் தகவல் கிடைத்ததும் அரச குடும்ப உறுப்பினர்கள் பால்மோரல் அரண்மனைக்கு விரைந்தனர்.
By : ஜான்சி ராணி | Updated at : 09 Sep 2022 02:10 PM (IST)
மெகன் மார்க்கல்- இரண்டாம் எலிசபெத்- கேத் மிடில்டன்
இரண்டாம் எலிசபெத் மரணம்:
இங்கிலாந்து மகாராணி எலிசபெத் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் (Balmoral Castle) நேற்று (செப்.08) இரவு 11.15 மணிக்கு உயிரிழந்தார். 96 வயதாகிய மாகாராணிக்கு கடந்த அக்டோபர் மாதம் முதல் உடல்நலக்குறைவால் அவதியுற்று வந்தார். மேலும், மிகவும் மோசமான உடல்நிலையுடன் இருந்த அவர் நேற்று உயிரிழந்தார். கடந்த 1926ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி ஜார்ஜ் 6 ஆம் மன்னருக்கு பிறந்த எலிசபெத் மகாராணி தன் தந்தை இறப்புக்குப் பிறகு 1953ஆம் ஆண்டு ராணியாக முடிசூடிக் கொண்டார்.
மொத்தம் 70 ஆண்டுகள் பதவி வகித்துள்ள எலிசெபத் மகாராணி, வின்ஸ்டன் சர்ச்சில், மார்கரேட் தட்சர் தொடங்கி லிஸ் டிரஸ் வரை 15க்கும் மேற்பட்ட பிரதமர்களை நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், எலிசபெத் உடல்நிலை குறித்து அரண்மனையின் தகவல் கிடைத்ததும் அரச குடும்ப உறுப்பினர்கள் பால்மோரல் அரண்மனைக்கு விரைந்தனர். ஆனால், கேத் மிடில்டன் மற்றும் மெகன் மார்க்கல் ஏன் உடனே மகாராணி சந்திக்க செல்லவில்லை என்பது குறித்து ட்விட்டரில் பேசப்பட்டு வருகிறது.
கேத் மிடில்டன் - மெகன் மார்க்கல் ஏன் மகாராணியுடன் இல்லை ?
மகாராணி எலிசபெத்-ன் பேரன்களான இளவரசர் ஹாரி (Prince Harry ) மற்றும் இளவரசர் வில்லியம் (Prince William)இருவரின் மனைவிகளும் எலிசபெத் உடல்நிலை சரியில்லை என தெரிந்தும் இங்கிலாந்துக்கு பயணிக்கவில்லை என்பது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.
பிரிட்டன் இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இரண்டாவது மகன் ஹாரி தனது தோழியும், காதலியுமான அமெரிக்க நடிகை மெகன் மெர்கல (Meghan Marklen) திருமணம் செய்துகொண்டார். பின்னர், இருவரும் அரசு குடும்பங்களில் உயர் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். தற்போது, இருவரும் தங்களது குழந்தைகளுடன் கலிஃபோர்னியாவில் வசித்து வருகின்றனர்.
இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேத் மிடில்டன் (Kate Middleton) இருவரும் Adelaide Cottage at Windsor-ரில் வசித்து வருகின்றனர். எலிசபெத் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி பின்னரும், இளவரசர்கள் ஹாரி மற்றும் வில்லியம் மட்டுமே ஸ்காட்லாந்திற்கு பயணித்தனர். மகாராணியின் உடல்நிலை மோசமடைந்த தகவல் கிடைத்தது அரசு குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள், பொதுமக்கள் என உள்ளிட்ட அனைவரும் ஸ்காட்லாந்திற்கு புறப்பட்டு சென்றனர்., ஆனால், எலிசபெத் இறப்பதற்கு முன்பு, கேத் மற்றும் மேகன் இருவரும் அவருடன் இல்லை என்பது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
காரணம் என்ன?
கேத் மிடில்டன் - வில்லியம் குழந்தைகள் ஜார்ஜ் (George), சார்லெட்( Charlotte), லூயிஸ்( Louis) ஆகியோருக்கு கோடை விடுமுறை முடிந்து பள்ளி தொடங்குவதால் அவர்களின் முதல் நாள் நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்றனர். எலிசபெத் உடல்நிலை சரியில்லை என்ற செய்தி அறிந்து வில்லியம் மட்டுமே உடனடியாக ஸ்காட்லாந்து புறப்பட்டு சென்றிருக்கிறார். கேத் தங்களது குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து வர செல்லும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
இளவரசர் ஹார் மற்றும் மெகன் மார்க்கல் விஷயத்தில், ஏற்கனவே அவர்கள் அரச குடும்பத்தின் பொறுப்புகளில் இருந்து விலகியதால் எலிசபெத் உள்பட குடும்பத்தினர் அனைவருக்கும் பெரும் வேதனையை கொடுத்துவிட்டனர் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், மேகன் மார்க்கல் மற்றும் ஹாரி இருவரும் தங்களது நிதிஉதவி நிகழ்ச்சிகளுக்காக பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தனர். இருவரும் கடந்த திங்களன்று One Young World Summit என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மாகாரணி எலிசபெத் உடல்நிலை செய்தி குறித்து தெரிந்ததும், ஹாரி தன் குடும்ப உறுப்பினர்களுடன் தனி விமானத்தின் மூலம் ஸ்காட்லாந்து சென்றார். முதலில், ஹாரி, மெகன் இருருவம் எலிசபெத்தை காண புறப்பட் உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்,மேகன் மார்க்கல் உடன் செல்லவில்லை என்று உறுதியானது. மேகன் மார்க்கல், கேத் உடன் Windsor-ல் இருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. வியாழனன்று நடைபெற இருந்த WellChild Awards- நிகழ்ச்சியில் மெகன் மார்க்கல் பங்கேற்கவில்லை என்ற அறிவிப்பு வெளியானதால்,அந்நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், மேகன் மார்க்கலின் பயண திட்டம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. மேகன், ஹாரி உடன் ஏன் ஸ்காட்லாந்துக்குச் செல்லவில்லை என்பதற்கான காரணம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
இருப்பினும், இளவரசி கேத் மற்றும் மெகன் ஸ்காட்லாந்துக்கு பயணிக்கவில்லை என்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேத் மிட்டில்டன் உடன் செல்லலாம் என்று நினைத்து மெகன் அங்கேயே தங்கியிருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், ஏற்கனவே அரச குடும்பத்திற்கும் மேகன் மார்க்கலுக்கும் சுமூகமான நல்லுறவு இல்லை என்பதால், அவரை அரச குடும்பத்தினர் வரவேற்க அவ்வளவாக விரும்பமாட்டார்கள். இதுவும் மேகன் ஹாரி உடன் பயணிக்காததற்கு காரணமாக இருக்கலாம் என்று பி.பி.பி.-இன் அரச குடும்ப விவகாரங்கள் குறித்து எழுதும் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மெகன் மார்க்கல் அஞ்சலி:
ஹாரி மற்றும் மெகன் மார்க்கல் இருவரும் Archewell foundation என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். மகாராணி எலிசபெத் மறைவிற்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவர்களது தொண்டு நிறுவனத்தின் வலைதள பக்கத்தின் நிறத்தை கருப்பு நிறத்தில் மாற்றயுள்ளது. மேலும், அதில் ’In Loving Memory of Her Majesty Queen Elizabeth II 1926- 2022’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கேத் மிட்டில்டன் மற்றும் மெகன் மார்க்கல் மாகாராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு மற்றும் அதற்கு முன்னதாக நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களது பயண திட்டம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும், எப்போது ஸ்காட்லாந்து செல்கிறார்கள் என்பது பற்றியும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.