முடங்கியது வாட்ஸ்அப்.. ஸ்டேட்டஸ், மெசேஜ் அனுப்ப முடியலையா? இதான் காரணம்!
வாட்ஸ்அப் இன்று முடங்கியுள்ளது. மெசேஜ் அனுப்ப முடியாமல் ஸ்டேட்டஸ் போட முடியாமல் சில பயனர்கள் தவித்து வருகின்றனர். இதுதொடர்பாக பலர் புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இன்று மாலை 5:22 வரையில் இதுதொடர்பாக 597 புகார்கள் பதிவாகியுள்ளது.

கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப் இன்று முடங்கியதால், மெசேஜ் அனுப்ப முடியாமல் ஸ்டேட்டஸ் போட முடியாமல் சில பயனர்கள் தவித்து வருகின்றனர். இதுதொடர்பாக பலர் புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இன்று மாலை 5:22 வரையில் இதுதொடர்பாக 597 புகார்கள் பதிவாகியுள்ளது. அதில், 85 சதவிகிதத்தினர், மெசேஜ் அனுப்ப முடியவில்லை என புகார் கூறி இருக்கின்றனர். 12 சதவிகிதத்தினர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக கூறியுள்ளனர்.
செயல்படாமல் போன வாட்ஸ்அப்:
எக்ஸ் தளத்தில் #Whatsappdown என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, வாட்ஸ்அப் பயனர்கள், தங்கள் புகார்களை கூறி வருகின்றனர். இதுகுறித்து பயனர் ஒருவர் குறிப்பிடுகையில், "எனக்கு மட்டும்தானா அல்லது உங்க வாட்ஸ்அப் கூட வேலை செய்யவில்லையா? நான் ஸ்டேட்டஸ் அப்லோட் பண்ண முயற்சி பண்றேன். அதுக்கு ரொம்ப நேரம் ஆகிறது" என குறிப்பிட்டுள்ளார்.
"முதலில் iOS 18.4-இல் சிக்கல் என்று நினைத்தேன். ஏன் என்றால், போனை அப்டேட் செய்த பிறகு, செயல்படாமல் போனது. பின்னர், போனை ரீஸ்டார்ட் செய்து, WhatsAppஇல் ஸ்டேட்டஸ்-ஐ அப்லோட் செய்ய முயற்சித்தேன். ஆனால், அது வேலை செய்யவில்லை. பின்னர், நான் அதை கூகிள் செய்து பார்த்தபோது WhatsApp செயலிழந்திருப்பது தெரிய வந்தது" என மற்றொரு பயனர் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் தவிக்கும் மக்கள்:
இதுகுறித்து வாட்ஸ்அப்பிலிருந்து எந்த விளக்கமும் வரவில்லை. பேஸ்புக், இன்ஸ்டாகிராமும் முடங்கியதாக பயனர்கள் புகார் தெரிவித்து வருகின்றன. இதன் மூலம், மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்றிலும் பிரச்னை எழுந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் மட்டும் 530 மில்லியன் வாட்ஸ்அப் பயனர்கள் உள்ளனர். உலகளவில் 3 பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
Is WhatsApp down ?
— Kumar Shubham (@its_ShubhamK) April 12, 2025
I have been trying to upload the status but it couldn’t. #WhatsApp #whatsappdown pic.twitter.com/Wuph0ETdLm
கடந்த பிப்ரவரி மாத இறுதியிலும் வாட்ஸ்அப் இதேபோன்று செயல்படாமல் போனது. ஒரு மாதத்திற்குப் பிறகு இதேபோன்று மீண்டும் நடந்துள்ளது. அப்போது, உலகெங்கிலும் உள்ள பல பயனர்கள் செயலியை சரியாகப் பயன்படுத்த முடியாமல் போனது.
இதையும் படிக்க: UPI Down: யு.பி.ஐ. சேவைகள் முடக்கம்; பயனர்கள் அவதி! NPCI சொல்வது என்ன?






















