Whales' Rainbow Breathe | திமிங்கலம் உருவாக்கிய வானவில்.. வாவ் சொல்லவைத்த காட்சி.. வைரல் வீடியோ..!
ஆஸ்திரேலியாவில் ஒரு திமிங்கலம் கடலின் மேல்மட்டத்திற்கு வந்து ரெயின்போ பிரீத் எடுத்து சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
கடல் எப்பொழுதுமே மனிதனை வியக்க வைக்கும் செயல்களை செய்து காட்டிக்கொண்டே இருக்கும். நாம் காணாத பல அற்புதங்கள் கடலுக்குள் நிகழ்ந்துகொண்டே இருக்கும். இன்னும் கடல் சார் ஆராய்ச்சியாளர்கள் அதில் தோண்டி தோண்டி கண்டுபிடிக்க நிறையவே இருந்து கொண்டே இருக்கின்றன. அதையெல்லாம் தாண்டி ஒரு சாதாரான சுற்றுலா பயணிக்கும் கூட கடல் தரும் வியப்புகள் குறைந்தபாடில்லை. அவ்வப்போது அவை வீடியோக்கலாகவும் வெளிவந்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வைரலாகின்றன. கடலில் நேரில் சென்று காணமுடியாத பலருக்கும் இப்படியான வீடியோக்கள் ஆசுவாசம் அளிக்கின்றன. அதனாலேயே அதிகமாக ஷேர் ஆகி வைரல் ஆகின்றன இது போன்ற வீடியோக்கள். கடல் மட்டுமின்றி கடல்வாழ் உயிரிகளும் அதன் குணங்களும், செயல்பாடுகளும் நமக்கு எப்பொழுதும் ஆச்சர்யமிக்க செயல்தான். அப்படி ஒரு வீடியோவைத்தான் ஆஸ்திரேலிய சுற்றுலாவின் அதிகாரப்பூர்வ இன்ஸடாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.
அந்த வீடியோவில் ஒரு திமிங்கலம் கடலின் மேல்பரப்பிற்கு வந்து ரெயின்போ பிரீத் எடுத்து செல்கிறது. அந்த காட்சியை அருகில் சென்ற கப்பலில் இருந்தவர்கள் வீடியோவாக எடுத்துள்ளார்கள். குழந்தைகளும் பெரியவர்களும் நின்று அந்த அற்புத காட்சியை ரசிக்கும்படியாக அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சி அந்த போட்டிற்கு மிக அருகில் காணக்கிடைத்ததால், அதில் இருந்தவர்கள் அதை கண்டு அதிசயித்து கோஷம் எழுப்புகின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு சுமார் மூன்று லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. இதை வீடியோவாக காண்பவர்களும் வியந்துகொண்டிருக்கிறார்கள். "இதை காண நாம் கொடுத்துவைத்திருக்க வேண்டும்" என்றும், "நல்ல வீடியோ பதிவாக்கம்" என்றும் காண்போர்கள் கமென்டில் எழுதி வருகிறார்கள்.
View this post on Instagram
திமிங்கலங்களுக்கு பொதுவாக இந்த வானவில் போன்ற மூச்சினை விடும் திறன் உள்ளது. இது போன்ற புகைப்படங்கள் நிறைய சைன்டிஸ்டுகளால் வெளியிடப்படுகின்றன என்றாலும், இவ்வளவு அருகாமையில் தெளிவான வீடியோக்கள் காண கிடைப்பது அரிது. 'ரெயின்போ பிரீத்' என்னும் வானவில் மூச்சு என்பது, திமிங்கலங்களுக்கு தலைக்கு கீழ் ஒரு மூச்சு குழல் (ரெஸ்பிரேட்டரி ஆர்கன்) இருக்கும், அதை கொண்டு நீருக்குள் இருக்கும்போது நீரை உறிந்து லேசாக தலையையும் உடலின் சிறு பகுதியையும் நீர்மட்டத்திற்கு மேல் கொண்டு வந்து காற்றில் நீரை சாரலாக பீய்ச்சி அடிப்பதுதான். அப்படி சாரலாக செல்லும் நீரில் சூரியனின் ஒளிக் கதிர்கள் பட்டு வானவில்லின் நிறங்களாக தெரிந்து மறையும். இந்த அற்புத காட்சியையே ரெயின்போ பிரீத் என்று ஆங்கிலத்தில் கூறுகிறார்கள்.