Watch Video : ஒடிசி நடனம் ஆடி அசத்திய கொரிய பெண்.. நெட்டிசன்கள் வைரலாக்கும் வீடியோ..
இசையும் கலையும் காலங்காலமாக கலாச்சார இடைவெளியை நிரப்பும் பாலமாக இருக்கின்றன. அதை நிரூபித்திருக்கிறார் தென் கொரியாவின் நடனக் கலைஞர் பீனா கூம். இவர் ஒரு நிகழ்ச்சியில் இந்தியப் பாரம்பரிய நடனமான ஒடிசி நடனத்தை ஆடி அனைவரையும் மகிழ்வித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கொரிய நாட்டு இளம் பெண் ஒருவர் இந்திய பாரம்பரிய நடனமான ஒடிசி நடனத்தை ஆடி அசத்தி இணையவாசிகளின் மனங்களை வென்றுள்ளார்.
இசையும் கலையும் காலங்காலமாக கலாச்சார இடைவெளியை நிரப்பும் பாலமாக இருக்கின்றன. அதை நிரூபித்திருக்கிறார் தென் கொரியாவின் நடனக் கலைஞர் பீனா கூம். இவர் ஒரு நிகழ்ச்சியில் இந்தியப் பாரம்பரிய நடனமான ஒடிசி நடனத்தை ஆடி அனைவரையும் மகிழ்வித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பட்டா சேலை எனப்படும் ஒடிசி நடனத்துக்குத் தேவையான சேலையை அணிந்திருக்கும் பீனா கூம், தென் கொரிய பாடலுக்கு ஒடிசி நடனத்தை ஆடுகிறார். அவருடன் இந்தியப் பெண் ஒருவர் பின்னர் இணைகிறார். அவர் கதக் நடனமாடுகிறார்.
பீனா கூம் 2001 ஆம் ஆண்டு இந்தியாவின் ஒடிசி நடனத்தால் ஈர்க்கப்பட்டார். மீரா நாயர் இயக்கிய காமசூத்ரா படத்தைப் பார்த்த பின்னரே அவருக்கு ஒடிசி நடனத்தின் மீது ஈர்ப்பு வந்துள்ளது. அதன் பின்னர் அவர் இந்தியாவில் ஒடிசி நடனம் கற்றுக் கொண்டார். இந்திய கலை, கலாச்சாரங்களை அறிவதற்காக கூம் நிறைய இடங்களுக்குப் பயணப்பட்டிருக்கிறார். இந்நிலையில் பீனா கூம் தென் கொரிய பாடலுக்கு ஒடிசி நடனமாடிய வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவுக்கு இரண்டு கலாச்சாரங்கள் இணையும் போது எதுவுமே அதைவிட அழகானது இல்லை என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
அந்த அழகான வீடியோவைக் காண்போம்:
View this post on Instagram
ஒடிசி நடனத்தின் சிறப்பு:
ஒடிசி என்பது ஒரிசா மாநிலத்தில் ஆடப்படும் நடனம். இது கோயில்களில் பேணப்பட்டுவந்த ஒரு பாரம்பரிய நடனக் கலையாகும். 17 ஆம் நூற்றாண்டில் 'கோட்டிப்புகழ்' எனப்படும் சிறுவர்கள் இந்நடனத்தைப் பெண்ணுடை தரித்துக் கோயில்களில் ஆடினர். வட இந்திய கல்வெட்டுக்கள் மற்றும் சிற்ப சான்றுகளின்படி, பல நூற்றாண்டுகளாக ஒடிசி நடனம் ஆடப்பட்டு வந்திருக்கிறது. ராணி கும்பா குகைகளில் காணப்படும் சிற்பங்களின் ஒடிசி நடனமாவது, கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்திலேயே ஆடப்பட்டு வந்தது என்பதற்கு சான்றாகும். சில அறிஞர்கள் ஒடிசி நடனமாவது, பரத நாட்டியத்திற்கும் முந்தயது என்று கருதுகிறார்கள்.
ஒடிசி நடனத்திற்கு இசைக்கப்படும் இசையில் கர்நாடக இசை மற்றும் ஹிந்துஸ்தானி இசை மட்டுமல்லாது ஒரிசா மாநிலத்தின் பழங்குடியினரின் இசையையும் பார்க்கலாம். பக்கவாத்தியங்கள் மத்தளம், தபலா, புல்லாங்குழல், மிருதங்கம், மஞ்சீரா, சித்தார் மற்றும் தம்பூரா ஆகியவை அடங்கும். ஒடிசி நடன நிகழ்ச்சிகள் பெரும்பாலும் ஜகன்னாதருக்கு செய்யும் இறை வணக்கமான 'மங்களசரண்' என்னும் நடனத்துடன் தொடங்கும். பின்னர் குரு வந்தனம் நிகழும். அடுத்தது, தாளக்கட்டிற்கு ஏற்றவாறு 'பல்லவி' நடனமும், கை முத்திரைகளும், முக பாவனைகளும் கூடிய 'அபிநயம்' நடனமும் ஆடப்படுகின்றன. 'மோக்ஷம்' என்னும் நடனம் இதன்பின் ஆடப்படுகிறது. பின்னர் விஷ்ணுவின் பத்து அவதாரங்களை விளக்கும் 'தசாவதாரம்' மற்றும் சிவபெருமானின் பெருமைகளைப் பேசும் 'பாட் நிருத்யம்' ஆகியவை ஆடப்படுகின்றன.